Word |
English & Tamil Meaning |
---|---|
துக்கு 2 | tukku. n. <>K tukku. [T. tuppu.] Rust; துரு. (W.) |
துக்கு 3 | tukku, n. <>tvak nom. sing. of tvac. 1. Skin. See துவக்கு. . 2. Body; |
துக்குடா | tukkuṭā, n. & adj. See துக்காட. . |
துக்குடி | tukkuṭi, n. & adj. See துக்கடி. . |
துக்குணி | tukkuṇi, n. cf. தக்கிணி. Small quantity; சிறிதளவு. Colloq. |
துக்குணிச்சித்தம் | tukkuṇi-c-cittam, n. <>துக்குணி +. Short temper; பொறுமையற்ற குணம். Loc. |
துக்குப்பிடித்தவன் | tukku-p-piṭittavaṉ, n. <>துக்கு +. Worthless fellow; பயனற்றவன். (W.) |
துக்கை 1 | tukkai, n. <>Durgā. Durgā; துர்க்கை. துக்கைபட்டி பிடாரிபட்டி (S. I. I. i, 91). |
துக்கை 2 | tukkai, n. perh. dur-gā. Menstruation; சூதகம். (W.) |
துக்கைச்சி | tukkaicci, n. <>துக்கை. A woman in her periods; சூதகமானவள். (W.) |
துக்கோற்பத்தி | tukkōṟpatti, n. <>duhkha + ut-patti. (Buddh.) The doctrine that desire is the cause of pain, one of four vāymai, q.v.; வாய்மை நான்கனுள் அவாவே துக்கத்திற்குக் காரண மென்று கூறும் பௌத்தமதக் கொள்கை. (மணி.) |
துக - த்தல் | tuka-, 11 v. intr. perh. துவர்-. To be bitter; கசத்தல். (இலக். அக.) |
துகம் | tukam, n. prob. துகு-. 1. [T. tukamu.] Plot of land; நிலத்தாக்கு. Loc. 2. Share, as in a partition or lottery; |
துகள் | tukaḻ, n. cf. dhūlī. 1. Dust, particle of dust; தூளி. இயங்கு தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து (மணி. 4, 14). 2. Pollen; 3. Fault, moral defect; |
துகளறுபோதம் | tukaḷ-aṟu--pōtam, n. A šaiva Siddhānta treatise in Tamil by Ciṟṟam-pala-nāṭikaḷ; சிற்றம்பலநாடிகளியற்றிய ஒரு சைவ சித்தாந்த நூல். |
துகளிதம் | tukaḷitam, n. <>துகள். See துகள், 1. (யாழ். அக.) . |
துகளிலி | tukaḷ-ili, n. <>id. +. God, as immaculate; [குற்றமற்றவன்] கடவுள். (இலக். அக.) |
துகான் | tukāṉ, n. <> Persn. dūkān. Shop; கடை. Loc. |
துகிடி | tukiṭi, n. & adj. See துக்கடி. Loc. . |
துகிதுபதி | tukitupati, n. <>duhitr-pati. Son-in-law; மகட்கொண்டோன். (யாழ் .அக.) |
துகிதை | tukitai, n. <>duhitā nom. sing. or duhitr. Daughter; மகள். |
துகிர் | tukir, n. [T.K.Tu. togaru.] 1. Red coral; பவளம். பொன்னுந் துகிரு முத்தும் (புறநா. 218). 2. Coral seaweed; |
துகிர்த்தாளி | tukir-t-tāḷi, n. <>துகிர் +. Coral jasmine. See பவளமல்லிகை. (மலை.) . |
துகிரிகை | tukirikai, n. <>tūlikā. (W.) 1. See துகிலிகை. (அக. நி.) . 2. Picture, painting; 2. Sandle paste; |
துகில் | tukil, n. prob. dukūla. [M. tukil.] 1. Fine cloth, rich attire; நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி, 264). 2. See துகிற்கொடி. (பிங்.) 3. Ensign; |
துகில்வலை | tukil-valai, n. <>துகில் +. A kind of net; வலைவகை. Loc. |
துகிலிகை 1 | tukilikai, n. <>tūlikā. 1. Painter's pencil; எழுதுகோல். சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை (சீவக. 2542). 2. Picture; |
துகிலிகை 2 | tukilikai, n. <> துகில். See துகிற்கொடி. புரிசைமேற் புனைந்த வாணிலா நெடுந் துகிலிகை (கந்தபு. திருநகர. 20). . |
துகிற்கிழி | tukiṟ-kiḻi, n. <>id.+. Sheath, cover; உறை. துகிற்கிழி பொதிந்து (சிவக. 164). |
துகிற்கொடி | tukiṟ-koṭi, n. <>id. +. Banner; flag; ஆடையாலியன்ற கொடி. வெள்ளருவித்திரள் யாவையும் குழுவின்மாடத் துகிற்கொடி போன்றவே (சீவக. 34). |
துகிற்பீசம் | tukiṟ-pīcam, n. <>id. +. Cotton seed; பருத்திவிதை. (மலை.) |
துகின்மனை | tukiṉ-maṉai, n. <>id. +. Tent; கூடாரம். துகின் மனையுட் கொடுபோகி (சேதுபு. அகத். 40). |
துகின்முடி 1 - த்தல் | tukiṉ-muṭi-, v. intr. <>id.+. To tie a turban on the head; தலைப்பாகை கட்டுதல். துகின்முடித்துப் போர்த்த . . . பெருமூதாளர் (முல்லைப். 53). |