Word |
English & Tamil Meaning |
---|---|
துச்சரிதம் | tuccaritam, n. <>duš-carita. Evil practice, bad conduct; தீயொழுக்கம். |
துச்சவனன் | tuccavaṉaṉ, n. <>Dušcya-vana. Indra; இந்திரன். (W.) |
துச்சளை | tuccaḷai, n. <>Duššalā. Sister of Duryōdhana; துரியோதனன் சகோதரி. தோள்களிற் கழையைவென்ற துச்சளை (பாரத. சம்பவ. 80). |
துச்சன் | tuccaṉ, n. <>tuccha. Mean, worthless fellow; இழிந்தவன். (யாழ். அக.) |
துச்சனம் | tuccaṉam, n. <>dur-jana. Viciousness, mischievous disposition; துஷ்டத்தனம். Tinn. |
துச்சாசனன் | tuccācaṉaṉ,. n. See துச்சாதனன். . |
துச்சாதனன் | tuccātaṉaṉ, n. <>Duššāsana. A brother of Duryōdhana; துரியோதனன் தம்பியருள் ஒருவன். துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய (கலித். 101, உரை). |
துச்சாரி | tuccāri, n. <>duš-cārin. Licentious person, profligate; தீநடக்கையோன். துச்சாரி நீகண்ட வின்ப மெனக்கெனைத்தாற் கூறு (நாலடி, 84). |
துச்சி | tucci, n. <>துய்-. (J.) 1. Eating; புசிக்கை. 2. Experience; fruition; good or evil, as the result of karma; 3. Investigation, examination; 4. Fuller's earth; |
துச்சிமை | tuccimai, n.<> tuccha. Meanness, baseness; கீழ்மை. (W.) |
துச்சில் 1 | tuccil, n. <>துஞ்சு- + இல். Place of retreat, shelter, temporary abode; dwelling place, resort; ஒதுக்கிடம். உடம்பினுட் டுச்சிலிருந்த வயிர்க்கு (குறள், 340). |
துச்சில் 2 | tuccil, n. Crest; மயில் முதலியவற்றின் கொண்டை. (அரு. நி.) |
துச்சு | tuccu, n. <>tuccha. Meanness; base deeds; இழிவு. துச்சான செய்திடினும் (திருவிசை. வேணாட். 1). |
துச்சொப்பனம் | tuccoppaṉam, n. <>dussvapna. Evil dreams. See துர்ச்சொப்பனம். . |
துச்சோதனன் | tuccōtaṉaṉ, n. <>Dur-yō-dhana. See துரியோதனன். சுழலைபெரிதுடைத் துச்சோதனனை (திவ். பெரியாழ். 1, 8, 5). |
துசகம் | tucakam, n. cf. rucaka. 1. Common pomegranate. See மாதுளை. (யாழ். அக.) . 2. Citron. See கொம்மட்டிமாதுளை. (மூ. அ.) |
துசங்கட்டு - தல் | tucaṅ-kaṭṭu-, v. intr. <>துசம் +. To engage eagerly in an enterprise, as by hoisting a flag; [கொடிகட்டுதல்] காரியத்தில் முனைந்து நிற்றல். பத்தசனங்களைக் காக்கத் துசங்கட்டி (குற்றா. குற. 91, 1) |
துசபரிசம் | tucaparicam, n. <>tus-sparša. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல.76.) . |
துசம் 1 | tucam, n. <>dhvaja. Banner, flag; கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங்கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7). |
துசம் 2 | tucam, n. <>dvi-ja. See துசிவம். (W.) . |
துசம் 3 | tucam, n. <>tuṣa. Husk; உமி. (யாழ். அக.) |
துசம் 4 | tucam, n. Bastard sal; குங்கிலியம். (L.) |
துசன் | tucaṉ, n. <>dvi-ja. Brahmin; பார்ப்பான். (W.) |
துஞ்சர் | tucar, n. prob. dhvamsa. Asuras; அசுரர். (யாழ். அக.) |
துஞ்சரி - த்தல் | tucari-, 11 v. intr. prob. துஞ்சு- +அரி-. To wake up; கண்விழித்தல். வஞ்சிக் கொம்பரிற் றுஞ்சரித் துளரி யொளிமயிர்க்கலாபம் பரப்பி (பெருங். உஞ்சைக். 40, 118). |
துஞ்சற | tucaṟa, adv. <>id+. Entirely, wholly; முழுதும். (J.) |
துஞ்சினார் | tuciṉār, n. <>id. The dead, used euphemistically; செத்தார் என்று போருள் படும் மங்கலவழக்குச் சொல். செத்தாரைத் துஞ்சினா ரென்றலும் (தொல். சொல், 17, சேனா.). |
துஞ்சு 1 - தல் | tucu-, 5 v. intr. [M. tucuka.] 1. To sleep, doze, slumber; தூங்குதல். நெருப்பினுட் டுஞ்சலு மாகும் (குறள், 1049). 2. To rest without work; 3. To be drowsy, sluggish, indolent; 4. To droop; 5. To die; 6. To perish; to be deprived of power; 7. To diminish, decrease; 8. To abide, stay; 9. To settle permanently, endure; 10. To hang; |