Word |
English & Tamil Meaning |
---|---|
துத்திப்பூமோதிரம் | tutti-p-pū-mōtiram, n. <>id. +. Finger-ring designed after the tutti flower; துத்திப்பூ வடிவிலமைந்த விரலாழி. |
துத்தியம் | tuttiyam, n. <>stutya. Eulogy, praise,commendation; புகழ்ச்சி. பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே (தேவா.1218, 2). |
துத்திரி | tuttiri, n. 1. See துத்தாரி. கல்லலசு துத்திரி யேங்க (கல்லா. 34, 10). . 2. See துத்தி. Loc. |
துத்திரோகம் | tutti-rōkam, n. perh. dadru+. Aphthae of the mouth, the thrush; வாய்ப்புண்வகை. |
துத்து 1 | tuttu, n. <>T. duddu. (யாழ். அக.) 1. Lie; பொய். 2. Fault; 3. Deceit; |
துத்து 2 | tuttu, n. perh, துறுத்து-. 1. Stuffing of wool or goat's hair in couches, saddles, etc.; ¢சேணமுதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன. (w.) 2. See துத்துக்கம்பளி.(யாழ்.அக.) |
துத்துக்கம்பளி | tuttu-k-kampaḷi, n. <>T.duddukambaḷi. A kind of blanket; கம்பளிப்போர்வை. (w.) |
துத்துக்கம்மல் | tuttu-k-kammal, n. <>T.duddu+. An ear-ornament worn by women; கம்மலணிவகை. Loc. |
துத்துக்காரன் | tuttu-k-kāraṉ, n. <>துத்து+. See தூத்தன். (W.) . |
துத்துக்கோல் | tuttu-k-kōl, n. perh. துத்து+. Rod used by weavers to press the weft compactly; நெசவுப்பா தளராமல் நிற்றற்பொருட்டு நாற்பிணையல்களுக்கிடையில் நெய்வோர் செலுத்துங்கழி. |
துத்துப்போடு - தல் | tuttu-p-pōtu- v. tr. <>தூர்-+. To fill up, close; கிணறு முதலிய வற்றை மணல் முதலியவற்றால் மேவி விடுதல். (W.) |
துத்துமாற்று | tuttu-māṟṟu, n. <>துத்து+. (யாழ்.அக.) 1.Artifice, guile, chicanery; தந்திரம். 2. Deceit; 3. Evil; |
துத்துரு | tutturu, n. [T. duddu.] An ornament like the pericarp of a lotus; தாமரைப் பொகுட்டுப்போன்ற அணிவகை. துத்துருவொன்றில் தடவிக்கட்டின பளிங்கு ஒன்றும் (S.I.I. ii, 179). |
துத்தூரம் | tuttūram, n. <>dhuttūra. Thorn-apple. See ஊமத்தை. (மலை.) . |
துதகாரம் | tutakāram, n. prob. thūtkāra. Noise of spitting; துப்பும்போது எழும் ஒலி. (யாழ்.அக.) |
துதசிரம் | tuta-ciram, n. <>dhuta+. (Nātya.) The act of moving the head round in imitation of one who is possessed; பேய்பிடித்த வர்போலத் தலையை ஆட்டும் அபிநயவகை. (பரத. பாவ.72.) |
துதம் 1 | tutam, n. <>stuta. See துதி . வாயோரீ ரைஞ்ஞாறு துதங்க ளார்ந்த (திவ். பெருமாள். 1,2) . |
துதம் 2 | tutam, n. <>dhuta. Motion, vibration, oscillation, agitation; அசைவு. (W.) |
துதமுகம் | tuta-mukam, n. <>id.+. (Nāṭya.) Shaking one's head in refusal, one of 14 muka-v-apiṉayam, q.v.; முகவபிநயம் பதினான் கனுள் வேண்டாமைகுறித்தற்கு இடம்வலமாகத் தலையை யாட்டுகை. (சது.) |
துதாமுதலாய் | tutā-mutal-āy, adv. <>T. tudamodaluga. Wholly, entirely; முழுதும். Loc. |
துதி 1 | tuti, n. <>நுதி. [T. K. tudi.] Point; sharp edge; நுனி. துதிவா யெஃகமொடு (புறநா. 353). |
துதி 2 | tuti, n. <>stuti. 1. Praise, eulogy; தோத்திரம். (சூடா.) துதிவாய் தொறுங்கொளும் . . . வெங்கை (வெங்கைக்கோ. 62). 2. Fame; |
துதி - த்தல் | tuti-, 11 v. tr. <>id. 1. To praise, eulogise; to flatter; புகழ்தல். (சூடா.) விண்ணோரு மண்ணுந் துதித்தாலும் (திருவாச. 7,10). 2. To worship; 3. To think; |
துதி 1 | tuti, n. <>dṟti. [K. titi.] 1. Bellows; துருத்தி. மயிர்த்துதி யலற வூதலின் (சீவக. 2830). 2. Sheath, scabbard; |
துதி 2 | tuti, n. Climbing brinjal. See தூதளை. (L.) . |
துதிக்கரம் | tuti-k-karam, n. prob. துதி+. See துதிக்கை. தந்தியுந் துதிக்கரஞ் சலித்து நின்றது (செவ்வந்தி. பு. உறையூரழித். 92). . |
துதிக்கை | tutikkai, n. <>id.+. Elephant's trunk; தும்பிகை, துதிக்கையி னுதிக்கே கூழைவாரென்னும் (கலிங். 560). |
துதிகை | tutikai, n. <>dvitīyā. See துதியை,1. துதிகைப் பிறைபோலுந் தோற்றச்சேய் தன்னை (இரகு. இந்து. 62). . |
துதிநிந்தை | tuti-nintai, n. <>துதி+. Censure or ridicule under the garb of praise; இகழாவிகழ்ச்சி. (யாழ்.அக.) |
துதியம் | tutiyam, n. Pulp of the bitter snake-gourd; சவரிலோத்திரம். (W.) |