Word |
English & Tamil Meaning |
---|---|
தும்மற்சாத்திரம் | tummaṟ-cāttiram, n. <>id +. Treatise on the art of divination from sneezing; தும்மற்பலன்கூறும் நூல். (W.) |
தும்மிசகரோகம் | tummicaka-rōkam, n.<>dhvamsaka +. A wasting disease; உடலை எளிதில் நாசம்பண்ணும் நோய்வகை. (சீவரட். 71.) |
தும்மிட்டி | tummiṭṭi, n.<>தும்மட்டி. 1. A kind of small cucumber. See சிறுகொம்பட்டி. (யாழ். அக.) 2. Cultivated date palm. |
தும்மு - தல் | tummu-, 5. v. intr. [T. tummuṭa, M. tumpuka.] 1. To sneeze; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல். ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 2. To breathe; To emit, let go, leave; |
தும்மு 1 | tummu, n.<>தும்மு-. See தும்மல். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள்,1318). . |
தும்மு 2 | tummu, n,. Gnat; கொதுகு. (சது.) |
தும்முட்டி | tummuṭṭi, n. See தும்மட்டி. (W.) . |
துமால் | tumāl, n. See துமாலா. (W.) . |
துமாலா 1 | tumālā, n. <>U. dumbāl. See தும்பாலமானியம். (W.) . |
துமாலா 2 | tumālā, n. A final process in lengthening gold or silver threads; வெள்ளி அல்லது பொன் சரிகையிழுக்குந் தொழிலின் கடைசிச் செயல். (W.) |
துமானம் | tumāṉam, n. cf. šumbhāna. Jewel casket; ஆபரணம்வைக்கும் கலம். (சூடா.) |
துமி - தல் | tumi-, 4 v. intr. cf. tump. 1. To be cut off, severed; வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211). 2. To perish; to be crushed; |
துமி - த்தல் | tumi-, 11 v. tr. Caus. of துமி1-. 1. To cut off; வெட்டுதல். (திவா.) கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய (பெரும்பாண். 266). 2. To saw; 3. To keep off, obstruct, |
துமி | tumi, n.<>துமி2-. Cut, severance; வெட்டு. கரந்துமி படுதலுங் கவன்று (கந்தபு. அசமுகிசோ.2). |
துமி - தல் | tumi-, 4 v. tr. prob. உமி-. To spit; உமிதல். மிச்சிலைத் துமிந்து (காஞ்சிப்பு. கழுவாய். 63). |
துமி - த்தல் | tumi-, 11 v. intr. prob. துமி4-. To drizzle, sprinkle; துளித்தல். (W.) |
துமி | tumi, n. <>துமி5-. 1. Rain drops; மழைத்துளி. (W.) 2. Light, drizzling rain; 3. Drop of water; spray; |
துமிதம் | tumitam, n. <>id. Rain drops; மழைத்துளி. (பிங்.) |
துமிரம் | tumiram, n. <>dhūmra. (யாழ். அக.) 1. Black colour; கருமை. 2. Deep red colour; |
துமிலம் | tumilam, n. <>tumula. Din, tumult; பேராரவாரம். துமிலமெழப் பறைகொட்டி (திவ். பெரியாழ். 3, 8, 3). |
துமுலம் | tumulam, n. <>id. Confusion; குழப்பம். (யாழ்.அக.) |
துய் - த்தல் | tuy-, 11 v. tr. 1. To enjoy by means of the senses; புலன்களால் நுகர்தல். கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005). 2. To experience, suffer, as the fruits of actions; 3. To eat, feed; 4. To spin out; |
துய் | tuy, n. <>துய்-. 1. Food; உணவு. துய் தானுறும் வாயினை (கந்தபு. தாரக. 159). 2. Cotton; 3. Soft end of cotton thread; 4. A soft part in the ears of corn, in the petals of flowers, etc.; 5. Softness; 6. Fibre; 7. Fibre covering the tamarind pulp; 8. Sharpness; |
துய்த்தல் | tuyttal, n. <>id. Satisfactory end of the plot of a drama, one of five nāṭaka-c-canti, q.v.; நாடகச்சந்தியைந்தனுள் இறுதியானது. (சிலப். 3, 13, உரை, பக். 83.) |
துய்ப்பு | tuyppu, n. <>id. Enjoyment; நுகர்ச்சி. துறக்கவேந்தன் றுய்ப்பிலன் கொல்லோ (மணி. 15, 46). |
துய்ய | tuyya, adj. <>தூய்-மை. [M. tuyya.] 1. Pure; கலப்பற்ற. துய்யவெள்ளை. 2. Holy; 3. Conclusive, certain; |
துய்யமல்லி | tuyya-malli, n. <>துய்ய+. A white campā paddy which matures in four to six months; நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாவகை. Loc. |