Word |
English & Tamil Meaning |
---|---|
துயில்(லு) - தல் [துயிறல்] | tuyil-, 3 v. intr. [M. tuyiluka.] 1. To sleep; உறங்குதல். வரியரவி னணைத்துயின்று (திவ். பெரியதி. 8, 3, 2). 2. To abide, stay; 3. To die; 4. To set, as the sun; |
துயில் 1 | tuyil, n. <>துயில்-. [M. tuyil.] 1. Sleep; நித்திரை. மென்றோட் டுயிலின் (குற்ள், 1103). 2. Dream; 3. Death; 4. Abiding, staying; 5. cohabitation; |
துயில் 2 | tuyil, n. <>துகில்-. [M. tuyil.] Cloth; ஆடை. (W.) |
துயில்போ - தல் | tuyil-pō-, v. intr. <>துயில்2+. 1. See துயில்-, 1. . 2. To rest; |
துயில்வு | tuyilvu, n. <>துயில்-. Sleep; உறக்கம். (யாழ். அக.) |
துயிலார் - தல் | tuyil-ār-, v. intr. <>துயில்2 +. To sleep; உறங்குதல். துயிலாரா தாங்கண் ... முற்றிய வெந்நோய் (கலித்.146). |
துயிலார் | tuyilār, n. <>id. + ஆ neg. +. Devas, as those who never sleep; [உறக்கமிலா தோர்] தேவர். (யாழ். அக.) |
துயிலி 1 | tuyili, n. <>T. doggali. The smallest Indian amaranth, Amarantus polygamus; கீரைவகை. (பதார்த்த. 601.) |
துயிலி 2 | tuyili, n. A cloth of fine texture, woven at a place called Tuyili in Tanjore District; தஞ்சாவூர் ஜில்லாவில் துயிலி என்ற ஊரில் நெய்யப்படும் நல்லாடைவகை. |
துயிலிடம் | tuyil-iṭam, n. <>துயில்2 +. 1. Sleeping place; படுக்கும் இடம். 2. Contrivance to sleep on, as bed, couch, mat; |
துயிலுணர் - தல் | tuyil-uṇar-, v. intr. <>id. +. To awake, rise from sleep; நித்திரை நீங்குதல். துயிலுணர்ந் திருந்தசோம சுந்தரக் கருணை வெள்ளம் (திருவிளை. நரிபரி.17). |
துயிலெடு - த்தல் | tuyil-eṭu-, v. tr. <>id.+. To wake up; to awake to; arouse; துக்கத்தினின்று எழுப்புதல். |
துயிலெடுப்பு - தல் | tuyil-eṭuppu-, v. tr. <>id. +. See துயிலெடு-. ஊர்துயிலெடுப்ப (மணி. 7, 125). . |
துயிலெடுப்பு | tuyil-eṭuppu, n. <>id. +. Causing one to wake up; தூக்கத்தினின்றெழுப்புகை. |
துயிலெடை | tuyil-eṭai, n. <>id. +. Waking one from sleep; துயிலெழுப்புகை. தூயோமாய் வந்தோந் துயிலெடை பாடுவான் (திவ். திருப்பா.16). |
துயிலெடைநிலை | tuyil-eṭai-nilai, n. <>துயிலெடை +. 1. (Puṟap.) Theme of panegyrists waking a king who sleeps in camp during an expedition; பாசறைக்கண் துயிலும் வேந்தரைச் சூதர் அவர் புகழ்கூறித் துயிலெழுப்பல் கூறும் புறத்துறை. தாவினல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ. 91). 2. Poem sung to wake a king or great person from sleep; |
துயிலெடைமாக்கள் | tuyil-eṭai-mākkaḷ, n. <>id. +. Panegyrists whose duty is to wake up kings from sleep; அரசரைத் துயிலெழுப்பும் சூதர். துயிலெடைமாக்க ளிசைகொ ளோசையின் (பெருங். வத்தவ. 5, 81). |
துயிலெழு - தல் | tuyil-eḻu-, v. intr. <>துயில்2 +. To awake from sleep; நித்திரைவிட்டெழுதல். சுப்பிரதீப மெழுந்தெனத் துயிலெழுந்தான் (இரகு. அயனெழுச். 139). |
துயிலெழுமங்கலம் | tuyil-eḻu-maṅkalam, n. <>id +. Panegyric sung to wake up a king from sleep; பாணர்முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப்பாட்டு. விறலியும் பாணனும் நம் வேந்தற்குத் துயிலெழுமங்கலம்பாட வந்துநின்றார் (திருக்கோ. 375, உரை). |
துயிலேல் - தல் [துயிலேற்றல்] | tuyil-ēl-, v. intr. <>id. +. See துயிலெழு-. யாழு மேத்தொலியு மிறைவன் கேட்டுத் துயிலேற்றான் (சீவக. 2355). . |
துயிலொழி - தல் | tuyil-oḻi-, v. intr. <>id. +. See துயிலெழு-. (பிங்.) . |
துயிற்சி | tuyiṟci, n. <>துயில்-. Sleep; நித்திரை. கயக்கமி றுயிற்சிக் கும்பகருணனை (கம்பரா. ஊர்தேடு.121). |
துயிற்று - தல் | tuyiṟṟu-, 5 v. tr. Caus. of துயில்-. 1. To put to sleep; நித்திரை செய்வித்தல். மன்னுயிரெல்லாந் துயிற்றி (குறள், 1168). 2. To cause to stay; to retain; |
துயின்மடி - தல் | tuyiṉ-maṭi-, v. intr. <>துயில்2 +. To fall asleep; உறங்குதல். கங்குறுயின் மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பின் (புறநா. 126, 7). |
துயினடை | tuyiṉaṭai, n. <>id. +. Somnambulism; தூக்கத்திடையே எழுந்துசெல்லச்செய்யும் நோய். |