Word |
English & Tamil Meaning |
---|---|
துரந்தரி | turantari, n. <>id. Fem. of துரந்தரன். Woman who assumes a responsibility; பொறுப்பு வகிப்பவள். இமயத் துரைராச துரந்தரி தன்றிருமுன் (சிவரக. நந்திகண. 8). |
துரந்தரிகன் | turantarikaṉ, n. <>துரந்தரன். See துரந்தரன். சூராதிசூர துரந்தரிகள் (கொண்டல் விடு. 320). . |
துரப்பணம் | turappaṇam, n. <>துர-. [M. turappaṇam.] Auger, drill, tool for boring holes; துளையிடுந் தச்சுக்கருவி. |
துரப்பணவலகு | turappaṇa-v-alaku, n. <>துரப்பணம்+. 1. Drill-bit; துளைக்கருவி. (W.) 2. See துரப்பணம். |
துரப்பு - தல் | turappu-, 5 v. tr. of. துருவு-. To seek; தேடுதல். எனதொருவாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவேனே (தனிப்பா. i, 181, 3). |
துரப்பு | turappu, n. <>துர-. 1. Driving, hammering; முடுக்குகை. துரப்பமை யாணி (பொருந. 10). 2. Discharging; 3. Dispelling, chasing, scaring away; 4. Tunnel. |
துரப்பை | turappai, n. <>துரப்பு-. Broom; வாருகோல். Nā. |
துரபிமானம் | tur-apimāṉam, n. <>dur-abhimāna. 1. Unworthy love; தகாதவிடத்து வைக்கப்பட்ட பிரியம். 2. Vanity, false pride; 3. Hatred; |
துரம் 1 | turam, n. of. tūrya. An ancient musical instrument; முற்காலத்து வழங்கிய வாச்சிய வகை. சங்கமுந் துரமு முரசினோ டியம்ப (பெருங். வத்தவ. 1, 18). |
துரம் 2 | turam, n. <>dhura. 1. Burden; சுமை. (யாழ்.அக.) 2. Charge, trust, responsibility; 3. The department for collecting revenues in respect of temple-properties; |
துரமி | turami, n. of. brāhmī. 1. A species of buckthorn, thorny straggling shrub. See தொடரி. (மலை.) 2. Climbing brinjal. |
துரவு 1 | turavu, n. <>துர-. [T. doruvu, M. turavu.] 1. Sultan-well, large well for irrigation purposes; பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு. துரவு கிணறு இழித்தப் பெறுவதாகவும் (S. I. I. ii, 509). 2. Well made by excavating sand, unwalled well; |
துரவு 2 | turavu, n. cf. துப்புத்துரவு. Spying; தூது. (யாழ். அக.) |
துரவுச்சட்டம் | turavu-c-caṭṭam, n. <>துரவு1 +. Round frame at the bottom of a well; கிணற்றின் சூறாவளிச்சட்டம். (யாழ். அக.) |
துரவுமுழுகு - தல் | turavu-muḻuku-, v. intr. <>id.+. To sink a well by gradually lowering a curb; சூறாவளிச்சட்டத்தைக் கீழிறக்கிக் கிணறமைத்தல். (W.) |
துரவுவாரகம் | turavu-vārakam, n. <>id.+ T. vārakamu. Loan for sinking a well; கிணறு வெட்டக்கொடுக்குங் கடன். (R. T.) |
துரஸ்து | turastu, n. <>U. durast. Cleanliness; சுத்தம். |
துரா | turā, n. 1. Mixed metal of copper and spelter. See தரா. 2. Earth smoke, 1. sh., Fumaria parviflora; 3. See திராய். (M. M. 902.) |
துராக்கழிச்சல் | turā-k-kaḻiccal, n. prob. துரா +. Watery tool; நீராய்க் கழியும் மலம். Loc. |
துராக்கிரகம் | tur-ākkirakam, n. <>dur-āgraha. 1. False pride, vanity; வீணபிமானம். Loc. 2. Unreasonable, groundless hatred; 3. Covetousness; |
துராகதம் | turākatam, n. See துராகிருதம். ஆகாவி துராகதம் புரிவார் கன்னியர்கள் (தனிப்பா. i, 366, 110). . |
துராகன் | turākaṉ, n. <>turaka. Muhammadan, Turk; துருக்கன். (யாழ். அக.) |
துராகிருதம் | turākirutam, n. <>dur-ā-krta. 1. Misconduct, misdemeanour, misbehaviour; கெட்ட நடத்தை. 2. Ravishing, outrage; 3. Abuse; 4. A deed done by force in violation of a right; |
துராசர் | tur-ācar, n. <>dur-āša. Persons having evil desire; கெட்ட ஆசையுடையவர். துராசரன்பிலர் (பாரத. சஞ்சய. 9). |
துராசாரம் | tur-ācāram, n. <>dur-ācāra. 1. Depravity, vicious life,, evil ways; தீயொழுக்கம். 2. Indecorum, indecency, immodesty; 3. Violation of the rules of religion, of caste or of country; |
துராசாரி 1 | turācāri, n. <>durācārin. Man of vile conduct; தீயொழுக்கினன். (யாழ். அக.) |