Word |
English & Tamil Meaning |
---|---|
அஷ்டகல்யாணி | aṣṭa-kalyāṇi n. <>id.+. Horse whose four legs, face, head, tail and breast are white; கால், முகம், தலை, வால், மார்பு இவை வெளுத்த குதிரை. (அசுவசா.33.) |
அஷ்டகிராம் | aṣṭa-kirām n. <>id.+grāma. Fine granulated white sugar from Ashtagram in Mysore; ஒருவகை வெள்ளைச் சர்க்கரை. |
அஷ்டகுலபர்வதம் | aṣṭa-kula-parvatam n. <>id.+. Chief mountain-ranges in JambudvIpa, eight in number, viz., இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம். (பிங்.) |
அஷ்டகை | aṣṭakai n. <>aṣṭakā. A form of worship of the manes; பிதிர்சிராத்தவகை. |
அஷ்டகோத்திரம் | aṣṭa-kōttiram n. <>aṣṭan+. A division of Srī Vaiṣṇava Brāhmans; வைஷ்ணவப்பிராமணருள் ஒருவகுப்பார். |
அஷ்டதரித்திரம் | aṣṭa-tarittiram n. <>id.+. Penury, great poverty, opp. to அஷ்டைசுவரியம்; மிகுவறுமை. Colloq. |
அஷ்டதிக்கஜம் | aṣṭa-tikkajam n. <>id.+. Elephants guarding the eight points of the compass, viz., E. ஐராவதம், S.E. புண்டரீகம், S. வாமனம், S.W. குமுதம், W. அந்சனம், N.W. புட்பதந்தம், N. சார்வபௌமம், N.E. சுப்பிரதீகம். Their mates are respectively; அப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபமை, தாமிரபருணி, சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி. (சது.) |
அஷ்டதிக்குப்பாலகர் | aṣṭa-tikku-p-pālakar n. <>id.+. Regents of the eight points of the compass, as world-protectors, viz., இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். |
அஷ்டப்பிரபந்தம் | aṣṭa-p-pirapantam n. <>id.+. A collection of eight poems by Piḷḷai-p-perumāḷ-aiyaṅkār; பிள்ளைப்பெருமாளையங் கார் பிரபந்தத் திரட்டு. |
அஷ்டபந்தனம் | aṣṭa-pantaṉam n. <>id.+. Kind of prepared cement used at the base of a stone idol to fix it firmly, and made of eight ingredients, viz., சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி; சிலாவிக்கிரங்கங்கள் அசைவின்றியிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் கூட்டுச்சரக்கு. |
அஷ்டபோகம் | aṣṭa-pōkam n. <>id.+. 1. Enjoyment of eight kinds, viz., பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி. (சது.) 2. Enjoyment of eight kinds which an estate affords, viz., விக்கிரயம், தானம், வினிமயம், ஜலம், தரு, பாஷாணம், நிதி, நிஷேபம். According to C.G. |
அஷ்டபோகஸ்வாம்யம் | aṣṭa-pōka-svāmyam n. <>id.+id.+savāmya. Right to aṣṭapōkam which an estate affords; அஸ்டபோகவுரிமை. Colloq. |
அஷ்டமச்சனியன் | aṣṭama-c-caṉiyaṉ n. <>aṣṭama+. (Astrol.) Saturn in the eight house from that of the cantira-lakkiṉam, in the Zodiac and in which its influence is deemed most malignant; சந்திரலக்கினத்துக்கு எட்டாமிடத்து நிற்குஞ் சனி. (திருவேங்.சத.40.) |
அஷ்டமத்துச்சனி | aṣṭamattu-c-caṉi n. See அஷ்டமச்சனியன். அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச்சனி. |
அஷ்டமாசித்தி | aṣṭa-mā-citti n. <>aṣṭan+. The eight supernatural powers attainable by Yōga, viz., அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்; |
அஷ்டமாந்தம் | aṣṭa-mā-ntam n. <>id.+. Eight kinds of māntam or infantile convulsion, viz., செரியாமந்தம், போர்மாந்தம், மலடிமாதம், பெருமாந்தம், வாதமாந்தம், சுழிமாந்தம், வலிமாந்தம், கணமாந்தம்; எண்வகைமாந்தம். |
அஷ்டமாநாகம் | aṣṭa-mā-nākam n. <>id.+. Eight divine serpents of the nether world, half human in form, supporting the earth in the eight points of the compass, viz., வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன் கார்க்கோடகன். (சது.) |
அஷ்டமி | aṣṭami n. <>aṣṭamī. The eighth tithi (phase); எட்டாந்திதி. |
அஷ்டமூர்த்தம் | aṣṭa-mūrttam n. <>astan+. The eight forms of Siva, viz., பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா. (பிங்.) |
அஷ்டமூர்த்தி | aṣṭa-mūrtti n. <>id.+. Siva; சிவபிரான். |
அஷ்டமூலம் | aṣṭa-mūlam n. <>id.+. The eight medicinal roots, viz., சுக்கு, அரத்தை, செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், காந்சொறிவேர்; |
அஷ்டலக்ஷ்மி | aṣṭa-lakṣmi n. <>id.+. Eight kinds of fortune or wealth personified as so many goddesses, viz., தனலஷ்மி, தானியலஷ்மி, தைரியலஷ்மி, வீரலஷ்மி, வித்தியாலஷ்மி, கீர்த்திலஷ்மி, விஜயலஷ்மி, ராஜ்யலஷ்மி. |
அஷ்டவசுக்கள் | aṣṭa-vacukkaḷ n. <>id.+. The eight Vasus, a class of deities, viz., அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன். (பிங்.) |
அஷ்டவர்க்கம் | .aṣṭa-varkkam n. <>id.+. (Astrol.) 1. A set of eight horoscopic charts denoting the relative strength of the planets for good or evil due to their zodiacal positions in a nativity; ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச் சக்கரங்கள். 2. Group of eight special drugs, viz., |