Word |
English & Tamil Meaning |
---|---|
துவனம் | tuvaṉam, n. <>dhvana. Noise, sound; ஒலி தவனவில்லின் (கம்பரா. இராவணன் வதை. 27). |
துவனி 1 | tuvaṉi-, n. <>dhavani. Sound, noise, clamour; ஒலி. தூய வானவர் வேதத் துவனியே (தேவா. 1035, 1). |
துவனி 2 - த்தல் | tuvaṉi-, 11 v. intr. <>துவனி. To sound, resound; முழங்குதல். துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத. 70). |
துவாசந்தி | tuvācanti, n. <>dhruvāsandhi. (Mus.) A kind of tune; ஒர் இராகம். |
துவாட்சரி | tuvāṭcati, n. <>dvyakṣarī. A stanza formed only of two series of vowel-consonants; இரண்டுவர்க்க எழுத்துக்களால் இயன்ற செய்யுள்வகை. (யாழ்.அக.) |
துவாட்டிரம் | tuvāṭṭiram, n. <>tvāṣṭra. The 14th of 15 divisions of night; இரவு 15 முகூர்த்தத்துள் பதினான்காவது. (விதான. குணாகுணா.73, உரை.) |
துவாதசகரன் | tuvātaca-karaṉ, n. <>dvādasa+. (யாழ். அக.) 1. The God Murukaṉ, as having twelve hands; [பன்னிரு கரத்தோன்] முருகக்கடவுள். 2. Brhaspati, as having twelve rays; |
துவாதசகலை | tuvātaca-kalai, n. <>id.+. The twelve mystic centres in the body in which šakti manifests herself, viz., mētai, arukkīcam, viṭam, vintu, artta-cantiraṉ , nirōti, nātam, nātāntam, catti, viyāpiṉi, camaṉai, uṉmaṉai; மேதை, அருக்கீசம். விடம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதி, நாதம், நாதாந்தம், சத்தி, வியாபினி, சமனை, உன்மனை என்ற பன்னிரண்டு யோகஸ்தானங்கள். |
துவாதசநாமம் | tuvātaca-nāmam, n. <>id.+. The twelve names of Viṣṇu; திருமாலின் 12 திருநhமங்கள். 2. Vaiṣṇava marks worn on the body in 12 places; |
துவாதசநிதானம் | tuvātaca-Nitānām, n. <>id.+. (Buddh) The twelve successive causes leading to birth; பிறப்பிற்கு ஒன்றன்பின் ஒன்றாகவரும் பன்னிரண்டு பிறவிக் காரணநிலைகள். (மணி.21,163, உரை.) |
துவாதசம் | tuvātacam, n. <>dvādasan. Twelve; பன்னிரண்டு |
துவாதசாங்கிசம் | tuvātacāṅkicam, n. <>id.+. (Astrol). One-twelfth part or division of a sign; இராசியிற் பன்னிரண்டிலொருபாகம். |
துவாதசாட்சரி | tuvātacāṭcari, n. <>dvādašākṣāri. The twelve-lettered Vaiṣṇava mantra ōm namō bhagavatē vāsudēvāyā; ஒம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற பன்னிரண்டு அட்சரங்களையுடைய வைஷ்ணவ மந்திரம். |
துவாதசாதித்தர் | tuvātacātittar, n. <> dvādašā litya. The twelve manifestations of sun, viz., Tātturu, Cakkarān, Ariyamān, Mittiraṉ, Varuṇaṉ, Acumān, Iraṇiya, Pakavāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉ according to Tivakaram; Vaikattaṉ, Vivaccutaṉ, Vācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkappirakācaṉ தாத்துரு, சுக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் (திவா.); வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பற்கரன், இரவி, உலோசப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவர்கரன், அங்கிசமாலி |
துவாதசாந்தத்தலம் | tuvātacānta-t-talam, n. <> dvādašānta +. Madura, as the mystic centre of tuvātacāntam of Virāṭ-puru-ṣaṉ; விராட்புருஷனது துவாதசாந்தநிலையாகக் கருதப்படும் மதுரை. தென்கூடல். . . துவாதசாந்தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர் (திருவிளை. தலவி. 21). |
துவாதசாந்தம் | tuvātacāntam, n. <>dvāda-šānta. 1. (Yōga.) A mystic centre which is believed to be 12 in above crown; உச்சிக்குமேல் பன்னிரண்டு அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோகஸ்தானம். துவாதசாந்தப் பெருவெளி (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42). 2. (Yōga.) The 12th and last stage of experience of the soul in yōga practice; |
துவாதசான்மா | tuvātacāṉmā, n. <>dvādašātmā nom. sing. of dvādašātman. The sun, as having 12 forms; பன்னிரண்டு மூர்த்த பேதங்களுள்ள சூரியன். (சது.) |
துவாதசானந்தம் | tuvātacāṉantam, n. <> dvādaša+. (Vedānta.) The twelve kinds of bliss, each equal to hundred times that which precedes, viz., māṉuṣāṉantam, maṉuṣya-kantarvāṉantam, tōva-kantarvāṉantam, pitirāṉantam, ācāṉaca-tēvāṉantam, karuma.tēvāṉantam, tēvāṉantam, intirāṉantam, pirakaspai-y-āṉantam, மானுஷானந்தம், மனுஷ்யகந்தர்வானந்தம், தேவகந்தர்வானந்தம், பிதிரானாந்தம், ஆசானசதேவானந்தம், கருமதேவானந்தம், தேவானந்தம், இந்திரானந்தம், பிரகஸ்பதியானந்தம், பிரசாபதியானந்தம், விராட்டானந்தம், இரணியகர்ப்பானந்தம் என ஒன்றற்கொன்று நூறுமடங்கு மிக்குள்ள பன்னிருவகை |