Word |
English & Tamil Meaning |
---|---|
துவாதசி | tuvātaci, n. <> dvādašī. The 12th day of the lunar fortnight; பன்னிரண்டாந்திதி. மான்மகிழுந் துவாதசியில் (சேதுபு. துராசா. 33). |
துவாதசிக்கட்டளை | tuvātaci-k-kaṭṭaḻai, n. <> id.+. Provision in a temple for feeding Brahmins on the 12th day of the lunar fortnight; துவாதசியன்று கோயிலிற் பிராமணபோசனத்தின்பொருட்டு ஏற்பட்ட திட்டம். |
துவாந்தம் | tuvāntam, n. <> dhvānta. Darkness; இருள். (பிங்). 2.Hell; |
துவாபரம் | tuvāparam, n. <> dvāpara. See துவாபரயுகம். கிரேத திரேத துவாபர கலியுகம் (திவ். பெரியதி. 7, 7, 6). . |
துவாபரயுகம் | tuvāpara-yukam, n. <> id.+. The third of the four yugas, consisting of 8,64,000 years; 8,64,000 வருடங்கள்கொண்ட முன்றாம் யுகம். |
துவாரகாபுரி | tuvārakā-puri, n. <> dvārakā.+. See துவாரகை. . |
துவாரகேசன் | tuvārakēcaṉ, n. <> id. +. Krṣṇa, as Lord of Dvārakā; [துவாரகைக்கு இறைவன்] கண்ணபிரான். (யாழ். அக.) |
துவாரகை | tuvārakai, n. <> dvārakā. The capital of Krṣṇa on the western side of Gujarat, supposed to have been submerged by the sea, one of catta-puri, q.v.; சத்தபுரியுளொன்றாயதும் கடலாற்கொள்ளப்பட்ட தென்று கருதப்படுவதும் கண்ணபிரான் அரசுபுரிந்ததுமான நகரம். |
துவாரசத்தி | tuvāra-catti, n. <> dvāra + šakti. Tutelary goddess of a temple; ஆலயத்தின் காவற்றேவதை. |
துவாரசமுத்திரம் | tuvāra-camuttiram, n. Dōrasamudra, capital of the Hoysala Ballālās, founded in the 12th century, modern Halebid in Mysore; தற்காலம் ஹலெபீடு எனவழங்கும் வல்லாளவரசர் தலைநகர். (Insc.) |
துவாரசாகை | tuvāra-cākai, n. Prob. dvāra + šākhā. Folding door; மடக்குக் கதவு. (யாழ். அக.) |
துவாரடை | tuvāraṭai, n. A contrivance in a boat; மரக்கலவுறுப்பினுள் ஒன்று. மரக்கலமும் அதனகத்துச் சுக்கானும் துவாரடையும் பிறவும் அமைந்திருப்பினும் (ஈச்சுரநிச்சயம், 150). |
துவாரபந்தம் | tuvāra-pantam, n. <> dvāra +. Door frame; கதவுநிலைச்சட்டம். (C. G.) |
துவாரபாலகர் | tuvāra-pālakar, n. <> id.+. 1. Doorkeepers, warders; வாயில்காப்போர். 2. Deities guarding the inner shrine of a Hindu temple; |
துவாரபாலர் | tuvāra-pālar, n. See துவாரபாலகர். தண்டலி றுவாரபாலர் சயனொடு விசயனென்பார்க்கு (மச்சபு. உத்த. 1, 10). . |
துவாரபிண்டி | tuvāra-piṇṭi, n. <> dvāra+. Door-step; வாசற்படி. (யாழ். அக.) |
துவாரம் | tuvāram, n. <> dvāra. 1. Hole, opening, slit, perforation; தொளை. (திவா.) 2. Gateway, main entrance; 3. Passage, avenue, outlet; 3. Instrumentality, means; |
துவாரம்விடு - தல் | tuvāram-viṭu-, v. intr. <> id.+. 1. To make a hole; துளையிடுதல். 2. To leave holes or opening in a building; |
துவாரமண்டபம் | tuvāra-maṇṭapam, n. <> id. +. Inner porch of a temple; கோயிலின் உள்மண்டபம். (M. M.) |
துவாரயந்திரம் | tuvāra-yantiram, n. <> id.+. Lock; பூட்டு. (யாழ். அக.) |
துவாரா | tuvāra,. adv. <> dvāra. Through, by means of; மூலமாய். ஞானேந்திரியத் துவாரா வஸ்துக்களை யறிவது (சி. சி. 1, அளவை. சிவாக்.). |
துவாரிகன் | tuvārikaṉ, n. <> dauvārika. Gate-keeper; வாயில்காப்போன் (யாழ். அக.) |
துவாரை | tuvārai, n. <> dvārakā. See துவாரகை. ஆயினும் புறகிட வவன்றுவாரையும் (சிவதரு. செனன. 55). . |
துவாலை 1 | tuvālai, n. <> தூவு-. 1. Excessive menstruation, Menorrhagia, metrorrhagia; சூதகப்பெருக்கு. 2. cf. துவளை. Anointing the body; 3. Liniment for medical anointing; |
துவாலை 2 | tuvālai, n. <> Port. toalha. Towel; துணித்துண்டு. |
துவாலைசெய் - தல் | tuvālai-cey-, v. tr. <> துவாலை +. To anoint, smear; மேற்பூசுதல். (பாலவா. 294.) |