Word |
English & Tamil Meaning |
---|---|
துளாரி | tuḷāri,. n. A weavers' instrument; நெய்வோர் கருவியுளொன்று. (யாழ்.அக.) |
துளி - த்தல் | tuḷi-, 11 v. [M. tuḷikka.] intr. 1.To drip, fall in drops, as rain, as tears, as honey; to trickle down; சொட்டுதல். மதுவந்துளிக்குஞ் சோலை (தேவா. 395,4). 2. To rain; 3. To sprinkle, let fall in drops; |
துளி 1 | tuḷi, n. <>துளி-. [M. tuḷi.] 1. Raining, dripping; துளிக்ரக. (பிங்.) 2. Rain-drop, globule of water; 3. Rain; 4. Minim, drop, as a measure; 5. Small quantity; 6. Poison; |
துளி 2 | tuḷi, n. <>duli. Female tortoise; பெண்ணாமை. (பிங்.) |
துளிர் - த்தல் | tuḷir-, 11 v.intr. cf. தளிர்-. [ T.talircu, K. teḷur, M. tuḷirkka.] 1. To bud, sprout, shoot, put forth leaves; தளிர்த்தல். 2. To prosper, thrive; |
துளிர் | tuḷir, n. <>துளிர்-. [T. taliru, M. tuḷir.] Bud, sprout, young leaf, tender foliage; தளிர். நாறுகரந்தைத் துளிருஞ் சுலவி (தேவா.463,6). |
துளு | tuḷu, n. See துளுவம். தோகைக்காவிற்றளுநாட்டன்ன (அகநா.15). . |
துளுப்பிடு - தல் | tuḷuppitu-, v. tr. <> துளும்பு- +. To stir up; கலக்குதல். குன்றிற் கருங்கட றுளுப்பிட் டாங்கு (சீவக.1112). |
துளும்பு - தல் | tuḷumpu-, 5 v. intr. cf. dul. [O.K. toḷapu, M. tuḷumpuka, Tu. tuluku.] 1. To shake; to be agitated; அசைதல். வம்பிற்றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் (சீவக.1867). 2. To brim over, overflow; to fill, as tears in the eyes; 3. To frisk; 4. To struggle and wrench oneself away; 5. To sparkle, glitter, shine; 6. To melt; 7. cf. தளும்பு-. To rise up; to come to the surface; 8. To be troubled; 9. To abound; |
துளுவம் | tuḷuvam, n. <>துளு. 1. The Tulu country on the West Coast, south of Kanara, one of 56 tēcam, 2.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் கன்னட தேசத்திற்குத் தெற்கிலுள்ள நாடு. கொங்கணந்துளுவங் குடகம் (நன்.272, மயிலை.). 2. The Tuluva language, one of patiṉeṇmoḷi, q.v.; |
துளுவவேளாளர் | tuḷuva-vēḷāḷar, n. <>துளுவம்+ . A sub-division of Vēḷālas of Toṇṭaimaṇṭalam who migrated from the Tulu country; துளுவதேசத்திலிருந்துவந்து தொண்டை மண்டலத்தில் குடியேறின வேளாளவகையார். |
துளுவன் | tuḷuvaṉ n. A kind of plantain; வாழைவகை, துளுவன் பழம். Loc. |
துளை - தல் | tuḷai-, 4 v. intr. 1. To disport in water; to dive நீரில் விளையாடுதல். ஆனந்த வெள்ளத்துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து (தாயு. வம்பனேன். 2).. 2. To be immersed; |
துளை - த்தல் | tuḷai-, 11 v.tr <>தொளை-. [T.toḷutcu,M.tuḷaikka.] 1. To make a hole, bore, drill, punch; துவாரஞ்செய்தல். 2. To pierce, as with an arrow; 3. To torment, tease; 4. To demand particulars or details; |
துளை | tuḷai, n. <>துளை2-. 1. [T.tola, K. toḷc, M.tuḷa, Tu.toḷu.] Hole, orifice, aperture, perforation; துவாரம் (பிங்.) ஆடமைக் குயின்ற வவிர் துளை (அகநா. 82). 2. Hollow, as of a tube; 3. Bamboo; 4. Gateway, passage; 5. Curl, as of hair; 6. A flaw in diamond; |
துளைக்கருவி | tuḷai-k-karuvi, n. <>துளை +. Wind-instrument, one of five karuvi, q.v.; இசைக்குரிய கருவி ஜந்தனுள் உட்டொளையுள்ள வாத்தியம். (பிங்) |
துளைக்கை | tuḷai-k-kai, n. <>id. +. Elephant's trunk; தும்பிக்கை. (யாழ்.அக) |
துளைச்செவி | tuḷai-c-cevi, n. <>id. +. (W.) 1. Organ of hearing, internal ear; உட்செவி. 2. An animal with an internal ear only, one of the two great classes of animals according to the Hindus; |