Word |
English & Tamil Meaning |
---|---|
தென்கயிலாயம் | teṉ-kayilāyam, n.<>தென் +. See தெட்சிணகைலாயம். . |
தென்கயிலை | teṉ-kayilai, n. <>id.+. See தெட்சிணகைலாயம். தென்கயிலைக்குப் போவன் (சிகாளத். பு. தென்கை. 9). |
தென்கலை | teṉ-kalai, n. <>id.+kala. ¢1.The Tamil literature and art, as belonging to the south; (தென்னாட்டுக்குரிய கலை) தமிழ் . வடகலை தென்கலை வடுகு கன்னடம் (கம்பரா. பாயி.). 2. A Vaiṣṇava sect, opp. to vata-kalai. 3. See தென்கலைநாமம். |
தென்கலைத்திருமண் | teṉ-kalai-t-tirumaṇ, n. <> தென்கலை+. See தென்கலைநாமம். ¢ |
தென்கலைநாமம் | teṉkalai-nāmam, n.>id.+. The Y mark worn on the forehead by the teṉ-kalai sect of the vaiṣṇavas; தென்கலை வைஷ்ணவர் தரிக்குந் திருநாமம். |
தென்கலையார் | teṉ-kalaiyār, n. <>id.+. The Vaiṣṇava sect wearing teṉ- kalai-nāmam; தென்கலைநாமந் தரிக்கும் வைஷ்ணவப் பிரிவினர். |
தென்காசி | teṉ-kāci, n.<>தென்+. A šiva shrine on the river Ciṟṟāṟu, north-east of courtallam in Tinnevelly District, Capital of the later Pāṇdyas; குற்றாலத்துக்கருகிற் சிற்றாற்றங்கரையில் உள்ளதும் பிற்காலத்துப் பாண்டியரது இராச தானியாயிருந்ததுமான ஒரு நகரம் |
தென்காசியாசாரம் | teṉkāci-y-ācāram, n.<>தென்காசி+. Insincere and hollow courteousness; உள்ளன்பில்லாத உபசாரம். Tinn. |
தென்காசிவழக்கு | teṉkāci-vaḻakku, n. <>id.+. Rough and ready settlement of a dispute by striking a mean; இருதிறத்தார்க்கும் நடுவு கூறி எளிதில் வழக்குத்தீர்க்குமுறை. Tinn. |
தென்கால் | teṉ-Kāl, n.<>தென்+. See தென்காற்று (திவா.) . |
தென்காற்று | teṉ-Kāṟṟu n. <>id.+. Balmy breeze, as blowing from the south; தென்றல். |
தென்கிழக்கு | teṉ-Kiḻakku, n.<>id.+. South east தென்கீழ்த்திசை. |
தென்கீழ்த்திசை | teṉ-Kīḻ-t-ticai, n.<> id.+. See தென்கிழக்கு. . |
தென்கீழ்த்திசைப்பாலன் | teṉ-Kīḻ-t-ticai-p-pālaṉ. n. <>தென்கீழ்த்திசை +. See தென் கீழ்த்திசையிறை. . |
தென்கீழ்த்திசையிறை | teṉ-Kīḻ-t-ticai-y-iṟai, n. <>id.+. Agni, as regent of the southeast; [தென்கீழ்த்திசையின் தலைவன்) அக்கினி தேவன். (சூடா.) |
தென்கீழ்த்திசையோன் | teṉ-Kīḻ-t-ticai-yōn, n. <>id.+. See தென்கீழ்த்திசையிறை. தென்கீழ்த் திசையோனாக்கிய தனிமுதற் றிருமாமதுரை (கல்லா.31,10). . |
தென்கோடு | teṉ-Kōṭu, n. <>தென் +. Southern cusp of the moon; பிறைச்சந்திரனின் தென்முனை. வடகோடு யர்ந்தென்ன தென்கோடு தாழ்ந்தென்ன வான்பிறைக்கே (பட்டினத்.பொது. 1). |
தென்படு - தல் | teṉ-paṭu-, v. intr. perh. தென்னு-+படு-. To meet, appear, strike one's eyes; புலப்படுதல். அது என் கண்ணிலே தென்பட்டது. 2. To be versed, experieced; |
தென்பரதம் | teṉ-paratam, n. <>தென்+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்து ளொன்று. (யாழ்.அக.) |
தென்பல்லி | teṉ-palli, n. <>id.+. One of the two sections of the ornament pullakam; புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுள் ஒன்று. தென்பல்லி வடபல்லி என்னும் இவையும்... ஒன்றான தலைக்கோலத்தை (சிலப், 6, 107, உரை). |
தென்பாண்டி | teṉ-pāṇṭi, n. <>id.+. 1. One of 12 See koṭun-tamiḻ-nāṭu, q.v. See¢1. தென்பாண்டிநாடு. தென்பாண்டி குட்டங் குடங்கற்கா (நன். 273, உரை); 2. The Pāṇdya country, as being in the South; |
தென்பாண்டிநாடு | teṉ-pāṇṭi-nāṭu, n.<>id.+. The southern Pāṇdya country indentified with Nācu-nāṭu; நாஞ்சிநாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டுத் தென்பகுதி. (நன்.273, உரை.) (M.M.888.) |
தென்பார் | teṉ-pār n.<>id.+. 1. South India தென்னாடு. தென்பாராளு மறிவிற் குறுமுனி (தமிழ்நா.239) The Pāṇdya country, as the southern part of the earth; |
தென்பாரதம் | teṉ-pāratam, n.<>id.+. . See தென்பரதம். (யழ்.அக.) |
தென்பால்விதேகம் | teṉ-pāl-vitēkam, n.<>id.+ பால்+. A continent, one of navakaṇṭam, q.v.; நவகண்டத்து ளொன்று. (திவா.) |
தென்பாலி | teṉ-pāli, n.<>id.+. An ancient division of the Tamil land ஒரு பழைய தமிழ்நாடு. தென்பாலிமுகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளி (சிலப்.8, 1, உரை) |