Word |
English & Tamil Meaning |
---|---|
தென்பாலிரேவதம் | teṉ-pāl-irēvatam, n.<>id.+பால்+. A continent, one of navakaṇṭam, q.v.; நவகண்டத்து ளொன்று. (திவா.) |
தென்பாற்பரதம் | teṉ-pāṟ-paratam, n.<>id.+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்து ளொன்று. (திவா.) |
தென்பு | teṉpu, n.<>T. tempu. See தெம்பு. . |
தென்புலக்கோன் | teṉ-pula-k-kōn, n.<>தென்புலம்+. Yama, as the Lord of the south ; (தென்புலத்தின் தலைவன்) யமன். தென்புலக் கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ்.5, 2, 2, ). |
தென்புலத்தார் | teṉ-pulattār, n.<>தென்புலம். 1. The manes, as living in the south; [தென்றிசையிலுள்ளார்] பிதிரர். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் (குறள், 43). 2. See தென்புலர். தென்புலத்தார்க் கென்னுக் கடைவுடையேன் யான் (திவ். இராமானுச. தனியன்). |
தென்புலத்தார்வேள்வி | teṉpulattār-vēḷvi, n.<>தென்புலத்தார்+. Daily offering of libations to the manes, one of ai-vakai-vēḷvi, q.v.; ஜவகைவேள்வியுள் ஒன்றாய்த் தினந்தோறும் பிதிரர்பொருட்டுச் செய்யுந் தருப்பணம். |
தென்புலம் | teṉ-pulam, n.<>தென்+. The southern country; தென்றேயம் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப (நெடுநல்.52). 2. Region of the manes; 3. World of Yama; 4. Pāṇdya country; |
தென்புலர் | teṉ-pular, n.<>தென்புலம். Yama's messengers யமபடர் தென்புலர்க்கென்னைச் சேர்கொடான் (திவ்.பெரியதி.7, 3, 3, ) |
தென்மதுரை | teṉ-maturai, n. <>தென் +. 1. Southern Madura, the reputed city where the first sangam met, supposed to have been submerged by the sea; தலைச்சங்கமிருந்து கடல் கொள்ளப்பட்டா நகரம். (சிலப்.8, 1, உரை); 2. Madura, dist. fr. vaṭa-maturai; |
தென்மலை | teṉ-malai, n. <>id.+. Mount Potiyam, believed to be the residence of Agastya, opp. to vaṭa-malai; பொதியமலை. தென்மலையிருந்த சீர்சான் முனிவரன் (பு.வெ.சிறப்புப் பாயி.) |
தென்முனி | teṉ-muṉi, n. <>id.+. Sage Agastya, as residing in the south; [தெற்கில் வாழும் இருடி] அகத்தியன். தென்றிசை வைகென்று தென்முனிக்குக் கயிலையின்முன் புகன்ற ஞான்று (கடம்ப.பு.இல¦லா.18). |
தென்முனை | teṉ-muṉai, n. <>id.+. The South pole; பூமியின் தென்கோடிமுனை. Mod. |
தென்மேற்கு | teṉ-mēṟku, n. <>id.+. South-west; தெற்கைச்சார்ந்த மேற்றிசை. |
தென்மேற்றிசைப்பாலன் | teṉ-mēṟṟicai-p-pālaṉ n. <>id.+. Niruti, regent of the South-west [தென்மேற்குத் திசையின் தலைவன்] நிருதி. (பிங். ) |
தென்மொழி | teṉ-moḻi, n. <>id.+. Tamil, as the speech of the South; (தென்றிசையில் வழங்கும் மொழி) தமிழ். வடமொழி தென்மொழி (கம்பரா பாயி.). |
தென்வரை | teṉ-varai, n. <>id.+. See தென்மலை தென்வரைச் சாந்து மூழ்கி (சீவக. 2081). |
தென்விதேகம் | teṉ-vitēkam, n. <>id.+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத்து ளொன்று (யாழ் .அக.) |
தென்றமிழ் | teṉṟamiḻ, n. <>id.+. Tamil, as the language of the South தமிழ்மொழி என்று முள தென்றமி ழியம்பியிசை கொண்டான் (கம்பரா. அகத்திய.47). |
தென்றல் | teṉṟal, n. <>id South wind, balmy breeze from the south; தென்காற்று. வணடொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப்.2, 24); 2. South -west monsoon in June--September; |
தென்றல்வருமலை | teṉṟal-varu--malai, n. <>தென்றல் +. See தென்மலை. (பிங்.) . |
தென்றலை | teṉ-ṟalai, n. <>தென்+. South; தெற்கு. தென்றலையில் சுப்பையா பிள்ளை வீடு Loc. |
தென்றற்கோன் | teṉṟaṟ-kōn, n. <>id.+. Pāṇdya king, as the lord of teṉral; [தென்றலையுடைய அரசன்) பாண்டியவரசன். தென்றற்கோன் செவிமடுத்தார் (திருவிளை மெய்க்கா.12) |
தென்றற்றேரோன் | teṉṟaṟ-ṟērōṉ, n. <>id.+. Kāma as having the South Wind for his chariot; [தென்றலைத் தேராகவுடையவன்] மன்மதன். (பிங்) |
தென்றி | teṉṟi, n. <>தென். 1. South; தெற்கு. தென்றிக் கயிலையிலே (காளத். உலா, 9). 2. See தென்றல். தென்றியா யசைந்து (கந்தபு. திருவவ..11). |
தென்றிசைக்கிழவன் | teṉṟicai-k-kiḻavaṉ n. <>தென்றிசை+. See தென்றிசைமுதல்வன். (பிங்) . |