Word |
English & Tamil Meaning |
---|---|
தென்னர் 3 | teṉṉar n. perh. தெறுநர். Foes; பகைவர். (யாழ்.அக) |
தென்னல் | teṉṉal, n. <>தென். South wind. See தென்றல். . |
தென்னவன் | teṉṉavan, n. <>id. Pāṇṭiyaṉ, as ruling in the South; [தென்னாட்டரசன்] பாண்டியன். வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6). 2. Yama; 3. Rāvaṇa; |
தென்னவன்பிரமராயன் | teṉṉavaṉ-pirama-rāyan, n. <>தென்னவன்+. Title conferred by the Pāṇdya, king on Māṇikkavācakar, while he was minister; மாணிக்கவாசகசுவாமிகள் மந்திரியா யிருந்த பொழுது பாண்டியன்கொடுத்த பட்டப்பெயர். தென்னவனோலை தென்னவன்பிரமராயனே காண்க (திருவாலவா.27, 61). |
தென்னவெல்லம் | teṉṉa-vellam, n. <>தென்னை+. Coconut-jaggery; தென்னஞ்சாற்றிலிருந்து செய்யும் இனியகட்டி. |
தென்னவெனல் | teṉṉa-v-eṉal, n. <>தென் onom.+. A syllable sung in tunes; இசைக்குறிப்பு; தென்னவென்னு மிசைவளர்த்து (சிலப்.8, 14, அரும்.). |
தென்னன் | teṉṉaṉ, n. <>தென். See தென்னவன்; தென்னன் வாழ்க வாழ்கவென்று (சிலப்.29, கந்துகவரி.) . |
தென்னாசாரியர் | teṉ-ṉ-ācāriyar, n. <>id.+. Preceptors of the teṉ-kalai šri Vaiṣṇavas; தென்கலை ஸ்ரீ வைஷ்ணவாசாரியர். Vaiṣṇ. |
தென்னாதெனாவெனல் | teṉṉā-teṉā-v-eṉal, n. <>தென் onom+. Syllables used in humming tunes or singing ; See தெந்தனா தென்னா தெனாவென்று வண்டுமுர றிருவேங்கடத்தென்னானை (திவ். திருவாய்.3, 9, 1) (சிலப்.3, 26, உரை, பக்.105 . |
தென்னாலிராமன் | teṉṉāli-rāmaṉ, n.<>T. tenāli+. 1. A court-jester of Tenāli; தெனாலியூரிலிருந்த ஒரு விகடகவி. 2. Buffoon, witty or humorous person; |
தென்னி | teṉṉi, n.<>தென் . Plantain ; வாழை. (மு.அ.) |
தென்னிரெபதம் | teṉ-ṉ-irēpatam, n.<>id.+. A continent, one of nava-kaṇṭam , q.v. ; நவகண்டத்தொன்று. (யாழ்.அக.) |
தென்னிலை | teṉ-ṉ-ilai, n.<>id.+. Coconut leaves ; தென்னேலை. தென்னிலையின் பகுதியென (திருக்காளத்.பு.2, 11) . |
தென்னீர்க்கு | teṉ-ṉ-īrkku, n.<>id.+. Rib of the cocount leaf ; தெங்கிலையின் ஈர்க்கு . |
தென்னு - தல் | teṉṉu-, 5 v. Tinn. tr. To lift, as with a leaver; நெம்புதல்.. to rise ; |
தென்னுரை | teṉ-ṉ-urai, n.<>தென் +. See தென்மொழி அன்னநடையார்..மடலூரார் என்பதோர் வாசகமுந் தென்னுரையிற் கேட்டறிவ துண்டு. (திவ்.இயர். பெரியதிரும.397) . . |
தென்னுலகு | teṉ-ṉ-ulaku, n.<>id.+. The world of the manes ; பிதிரருலகம். தென்னுலகிற் புகுந்தனையோ (திருவிளை. வன்னியுங்கிணறும். 21). |
தென்னை | teṉṉai, n.<>id. Coconut palm, l.tr., cocos nucifera ; தெங்கு. (பிங்) . |
தென்னையிலை | teṉṉai-y-ilai, n.<>தென்னை+. Coconut-leaves stitched together for serving food upon ; தென்னையோலையைத் தைத்துச் செய்த உண்கலம். |
தென்னோலை | teṉ-ṉ-ōlai, n.<>id.+. Leaf of a coconut tree ; தென்னையோலை . (W.) |
தெனாது | teṉātu, n.<>தென் . 1. That which is in the south ; தெற்குள்ளது. தெனாஅ துருகெழு குமரி (புறநா. 6). 2. South ; |
தெக்ஷிணதுருவம் | tekṣiṇa-turuvam, n.<>dakṣiṇa+. South pole ; தெற்கிலுள்ள துருவம். |
தே 1 | tē, . The compound of த் and ஏ. . |
தே 2 | tē, n.<>தெவ்வு-. Acquiring ; கொள்ளுகை. (பிங்.) |
தே 3 | tē, n.<>dēva 1. The deity ; தெய்வம். (பிங்.) தேபூசை செய்யுஞ்சசித்திரசாலை (சிவரக. நைமிவ. 20). 2. Chief, lord ; |
தே 4 | tē, n. Onom. expr. of driving cattle ; மாடுதுரத்தும் ஒலிக்குறிப்பு . |
தேக்கந்தீவூ | tēkkan-tīvu, n.<>தேக்கு +. An annular continent named after the tree called tēkku , one of eḻu-tīvu , q.v. ; எழுதீவுகளுள் ஒன்று . |
தேக்கம் 1 | tēkkam, n.<>தேங்கு-. 1. Being brimful; தேங்குகை. 2. Fullness, satiety; 3. Obstruction of the flow of water; |