Word |
English & Tamil Meaning |
---|---|
தேகமண் | tēka-maṇ, n. perh. சேகு+. Red earth ; செம்மண். (யாழ்.அக.) |
தேகமுலரல் | tēkam-ularal, n.<>தேகம்1+உலர்-. Emaciation of the body ; உடல் வற்றுகை (பைஷஜ.230.) |
தேகயாத்திரை | tēka-yāttirai, n.<> dēha + yātrā. 1. Feeding the body ; சரீரபோஷணை. தேகயாத்திரை கர்மாதீனம் (ஸ்ரீவசந.). 2. Death ; |
தேகரசம் | tēka-racam, n.<>id. +. Perspiration ; வியர்வை . |
தேகராசம் | tēkarācam, n.<>kēšarāja. A plant ; கையாந்தகரை. (தைலவ.தைல.) |
தேகலிதீபநியாயம் | tēkali-tīpa-niyāyam, n. See தகளிதீபநியாயம். (இலக்.அக.) . |
தேகவச்சிரம் | tēka-vacciram, n. Purified mercury ; சுத்தரசம். (சங்.அக.) |
தேகவாசி | tēka-vāci, n. <>தேகம்1+. See தேகக்குறு . Loc. . |
தேகவியோகம் | tēka-viyōkam, n.<>id.+. Death, as separation from body ; (சரீரத்திலிருந்து நீங்குகை)சாவு . |
தேகவீக்கம் | tēka-vīkkam, n.<>id.+. Dropsy ; உடலில் வீக்கத்தையுண்டாக்கும் நோய்வகை . |
தேகளி | tēkaḷi, n.<>dēhalī. The passage from the outer door to the inner door-way, often provided with a pial ; இடைகழி . |
தேகளீதீபநியாயம் | tēkaḷi-tīpa-niyāyam, n.<>id.+. Nyāya of the lamp at tēkaḷi , illustrating how one object serves simultaneously a two-fold purpose, as the lamp at tēkaḷi lights the portions on either side ; இடைகழியில்வைத்தவிளக்கு இருபுறமும் ஒளிவீசுவதுபோல ஒரு பொருள் இடையினீன்று இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி. |
தேகனி | tēkaṉi, n. See தேசனி, ¢2 (மலை) . . |
தேகாத்துமவாதம் | tēkāttuma-vātam, n.<>dēha +ātma+. Materialism that identifies the soul with the body ; உடலே ஆன்மா என்று கூறும் சாருவாகமதம். |
தேகாதனம் | tēkātaṉam, n.<>dēhāsana. (Yōga.) A sitting posture with the back of one hand placed against the palm of the other, the eyes being fixed at the tip of the nose ; கையின் மேற் கை மலரவிரியவும் கண்கள் நுனிமுக்கைப் பார்க்கவும் அமையும் யோகாசனவகை. (தத்துவப்.107, உரை) . |
தேகாந்தம் | tēkāntam, n.<>dēha + anta. Death, as the end of the body ; (உடலின் இறுதி) சாவு . |
தேகாபிமானம் | tēkāpimāṉam, n.<>id.+. Love of one's person ; உடலில்வைக்கும் பற்று. |
தேகான்மவாதி | tēkāṉma-vāti, n.<>id.+ ātma. A follower of the doctrine of tēkāttumavātam ; தேகாத்துமவாதக் கொள்கையினன். (சி.போ.பா.பக்.36, புதுப்.) |
தேகி | tēki, n.<>dēhin. 1. Soul ; ஆன்மா. தேகமுந் தேகியும் (திருமந். 1785). 2. Honeysuckle mistletoe, Loranthus ; |
தேகியெனல் | tēki-y-eṉal, n.<>dēhi imp. 2nd pers. sing. of dā +. Expr. Signifying one's request for alms ; ஈ என இரத்தற் குறிப்பு ஜயந் தேகியெனச் செப்பி (சைவச.பொது.366) . |
தேகேவார் | tēkēvār, adv <>Mhr. dēhvārī. Village by village ; கிராமந்தோறும். Loc. |
தேங்கணை | tēṅ-kaṇai, n.<>தேம்1+. kāma 's arrow of flower ; புஷ்பபாணம். தேங்கணைக் காமன் (திருருநுற்.87) . |
தேங்கமுகந்தளத்தல் | tēṅka-mukantaḷattal, n.<>தேங்கு-+. Measuring grain, etc., with a standard measure ; படிமுதலியவற்றால் அளக்கும் அளவுவகை. (தொல். எழுத்.7, உரை.) |
தேங்காய் 1 | tēṅ-kay, n.<>தெங்கு+. [T. ṭeṅkāya.]. Coconut ; தெங்கங்காய். (நன், 186, மயிலை.) |
தேங்காய் 2 | tēṅ-kay, n.<>தேம்1 + காய். Sweet fruit ; இனிய காய். தேய்ங்காய் நெல்லியும் (பெருங் உஞ்சைக்.52, 43) . |
தேங்காய்க்கண் | tēṅkāy-k-kaṉ, n.<>தேங்காய்1+. The three eyes of the cocount ; தேங்காயின் மேலிடாத்துள்ள முக்கண் . |
தேங்காய்க்கணு | tāṅkāy-k-kaṇu, n.<>id.+. Joints of the three sections of a coconut-shell ; தேங்காயோட்டின் நரம்பு . |
தேங்காய்க்கயர் | tēṅkāy-k-kayar, n.<>id.+. 1. Soft or spongy crown of the coconut; தேங்காயுச்சியின் மெல்லோடு. (J.) 2. Lowest part of the coconut kernel sticking to the shell ; |
தேங்காய்க்கீரை | tēṅkāy-k-kīrai, n.<>id.+. See தேங்காய்ப்புக்கீரை . . |
தேங்காய்க்குடுமி | tēṅkāy-k-kuṭumi, n.<>id.+. Tuft of fibres on the crown of the coconut ; உரித்த தேங்காயில் விடப்பட்ட உச்சிநார்க்கற்றை . |
தேங்காய்க்குருப்பு | tēṅkāykkuruppu, n.<>id.+. See தேங்காய்ப்பூ. 2 Nā. . |
தேங்காய்க்கூடு | tēṅkāy-k-kūṭu, n.<>id.+. A shed where coconuts are stored ; தேங்காய்கள் இட்டுவைத்திருக்கும் சிறுகொட்டகை. Nā. |