Word |
English & Tamil Meaning |
---|---|
தேங்காய்க்கோம்பை | tēṅkāy-k-kōmpai, n.<>id.+. See தென்னங்கோம்பை. (J.) . |
தேங்காய்ச்சிரட்டை | tēṅkāy-c-ciraṭṭai, n. <>id.+. Half of a coconut-shell; கொட்டங்கச்சி. |
தேங்காய்ச்சில் | tēṅkāy-c-cil, n. <>id.+. 1. A piece of coconut albumen with or without the shell; தேங்காய்ப்பருப்பின் கூறு. 2. A piece of coconut-shell |
தேங்காய்ச்சொட்டு | tēṅkāy-c-coṭṭu, n.<>id.+. Slice or thin piece of coconut albumen; தேங்காய்ப்பருப்பின் துண்டு (W.) |
தேங்காய்த்தட்டு | tēṅkāy-t-taṭṭu, n. <>id.+. Poop deck; கப்பலின் பின்பக்கத்து மேற்றட்டு. Nant. |
தேங்காய்த்தண்ணீர் | tēṅkāy-t-taṇṇīr, n. <>id.+. Coconut milk; முற்றின்தேங்காயின் நீர். (W.) |
தேங்காய்த்தும்பு | tēṅkāy-t-tumpu, n. <>id.+. Fibres of the coconut-husk; தேங்காய் நார். (J.) |
தேங்காய்த்துருவல் | tēṅkāy-t-turuval, n. <>id.+. Coconut scrapings; தேங்காய்ப்பருப்பின் துருவிய பூ. |
தேங்காய்திருகி | tēṅkāy-tiruki, n. <>id.+. See தேங்காய்துருவி. . |
தேங்காய்துருவி | tēṅkāy-turuvi, n. <>id.+. Coconut-scraper; தேங்காய்ப்பருப்புத் துருவுங் கருவி. |
தேங்காய்துருவுமணை | tēṅkāy-turuvumaṇai, n. <>id.+. See தேங்காய்துருவி. (W.) . |
தேங்காய்நெய் | tēṅkāy-ney, n. <>id.+. A kind of fragrant oil prepared from coconut juice; தேங்காய்ப்பாலினின்று காய்ச்சி யெடுக்கப்படும் எண்ணேய். |
தேங்காய்ப்பருப்பு | tēṅkāy-p-paruppu, n. <>id.+. Coconut albumen or kernel; தேங்காயினுள்ளிருக்கும் உணவுப்பகுதி. Loc. |
தேங்காய்ப்பல் | tēṅkāy-p-pal, n. <>id.+. A small piece of coconut kernel; தேங்காய்ப்பருப்பின் சிறுகூறு. |
தேங்காய்ப்பாரை | tēṅkāy-p-pārai, n. <>id.+. 1. An iron-piece fixed in a stone for husking coconut ; தேங்காய்மட்டை உரிக்கவுதவும் கருவிவகை. 2. Horse mackerel, bluish green, attaining 8 in. in length, Caranx kalla; |
தேங்காய்ப்பால் | tēṅkāy-p-pāl, n. <>id.+. 1. Coconut juice pressed from the scraped kernel ; தேங்காய்த்துருவலினின்று பிழிந்த பால். 2. A sweet preparation of coconut juice ; |
தேங்காய்ப்பாலவியல் | tēṅkāy-p-pāl-aviyal, n. <>id.+. A vegetable curry cooked with coconut juice; தேங்காய்ப் பாலோடு பலகறிகள் ஒன்றுசேர்த்துச் சமைத்த கறிவகை. (J.) |
தேங்காய்ப்பிண்ணாக்கு | tēṅkāy-p-piṇṇākku, n. <>id.+. Coconut oilcake; தேங்காயெண்எணயாடி எடுத்த பிண்ணாக்கு. |
தேங்காய்ப்பூ | tēṅkāy-p-pū, n. <>id.+. 1. See தேங்காய்த்துருவல். . 2. Swollen seed of a coconut; |
தேங்காய்ப்பூக்கீரை | tēṅkāy-p-pū-k-kīrai, n. <>id.+. A kind of brown spinach, the flowers of which resemble scraped coconut; தேங்காய்த் துருவல்போலுள்ள பூவைக்கொண்ட கீரைவகை. |
தேங்காய்ப்பூநாறி | tēṅkāy-p-pū-nāṟi, n. <>id.+. See தேங்காய்ப்பூக்கீரை. (யாழ்.அக.) . |
தேங்காய்ப்பூவறை | tēṅkāy-p-pū-vaṟai, n. <>id.+. A kind of curry prepared from coconut-scrapings whose juice has been pressed out; பால் பிழியப்பட்ட தேங்காய்த்துருவலாற் செய்யப்படும் கறிவகை. (J.) |
தேங்காய்மட்டை | tēṅkāy-maṭṭai, n. <>id.+. Coconut husk and fibre; தேங்காயின் மேற்றோல். |
தேங்காய்மணி | tēṅkāy-maṇi, n. <>id.+. Seed of a coconut; தேங்காய்முளை. Loc. |
தேங்காய்மந்திரி - த்தல் | tēṅkāy-mantiri-, v. intr. <>id.+. See தேங்காயோது-. . |
தேங்காய்மரம் | tēṅkāy-maram, n. <>id.+. 1. Coconut tree; தென்னை. 2. Musket tree. |
தேங்காய்முகரி | tēṅkāy-mukari, n. <>id.+. The portion in the coconut-shell between its two closed eyes, deemed the hardest part ; தேங்காய்க்கண்களில் இடைப்பாகம். (J.) |
தேங்காய்முகிழ் | tēṅkāy-mukiḻ, n. <>id.+. The integument of coconut; தேங்காயின்மடல். (W.) |
தேங்காய்முறி | tēṅkāy-muṟi, n. <>id.+. See தேங்காய்மூடி. Loc. . |
தேங்காய்மூடி | tēṅkāy-mūṭi, n. <>id.+. Half of a broken coconut; உடைத்த தேங்காயின் பாதி. Loc. |