Word |
English & Tamil Meaning |
---|---|
தேங்காய்மூரி | tēṅkāy-mūri, n. <>id.+. The three nerves of a coconut; தேங்காயின் நரம்பு. (J.) |
தேங்காய்மொத்தி | tēṅkāy-motti, n. <>id.+. Lump of flesh in the middle of the forelegs of cattle or buffaloes ; மாட்டின் முன்னங்காலின் இடையிலுள்ள தசைத்திரட்சி. (J.) |
தேங்காய்வழுக்கை | tēṅkāy-vaḻukkai, n. <>id.+. Soft kernel or albumen of an immature coconut; தேங்காயின் முற்றாத உள்ளீடு. |
தேங்காய்வெட்டி | tēṅkāy-veṭṭi, n.<>id.+. Instrument for husking coconut; தேங்காய்மட்டையை உரிக்குங் கருவி. Loc. |
தேங்காய்வெண்ணெய் | tēṅkāy-veṇṇey, n. <>id.+. See தேங்காய்நெய். Nā. . |
தேங்காயடி | tēṅkāy-aṭi, n. <>id.+. A game in which a person breaking the coconut of his antagonist with his own, is declared the winner; எதிரியின் தேங்காயைத் தன் தேங்காயால் உடைத்தவனே வென்றாவனென்று கருதப்படும் விளையாட்டுவகை. (J.) |
தேங்காயெண்ணெய் | tēṅkāy-eṇṇey, n. <>id.+. Coconut oil; தேங்காய்ப்பருப்பினின்று எடுக்கப்படும் எண்ணெய். |
தேங்காயெறி - தல் | tēṅkāy-eṟi-, v. intr. <>id.+. To dash coconuts and break, as offering to an idol; சிதறுதேங்காயுடைத்தல். Nā. |
தேங்காயோது - தல் | tēṅkāy-ōtu-, n. <>id.+. To confer magical virtues on coconuts by incantations; தேங்காயில் சத்தியுண்டாம் படி அபிமந்திரித்தல். (W.) |
தேங்கிட்டி | tēṅkiṭṭi, n. Indian heliotrope. See தேட்கொடுக்கி. (மலை.) |
தேங்கு 1 - தல் | tēṅku-, 5 v. intr. 1. To fill, become full, rise to the brim; நிறைதல் மதுவது தேங்கு கும்பம் (திருப்பு.501). 2. To stay, stagnate; 3. To be crowded, abundant, copious; |
தேங்கு 2 - தல் | tēṅku-, 5 v. intr. <>தியங்கு-. 1. To be puzzled;to be in trepidation ; மனங்கலங்குதல். (பிங்.) நீர்..தேங்கவேண்டாவிறே (ஈடு, 9, 7, 9). 2. To delay, tarry; 3. To perish; to be ruined ; |
தேங்குழல் | tēṅ-kuḻal, n. <>தேம்1+. [K. tēnukuḻalu.]. A kind of vermicular confection made of rice-paste; பணியாரவகை பொரிதேங்குழலப்பம் (தனிப்பா. ii, 75, 189). |
தேங்குழலுரல் | tēṅkuḻal-ural, n. <>தேங்குழல்+. See தேங்குழற்செப்பு. . |
தேங்குழலுழக்கு | tēṅkuḻal-uḻakku, n. <>id.+. See தேங்குழற்செப்பு. . |
தேங்குழற்செப்பு | tēṅkuḻaṟ-ceppu, n. <>id.+. Cylindrical utensil for preparing tēṅkuḻal, தேங்குழல் பிழியுங் கருவி. |
தேசக்காவல் | tēca-k-kāval, n. <>தேசம்1+. The old system of guarding a tract of country against marauders and compensating the person or persons employed for the purpose by grants of land rent free or by various fees or allowances (R. F.); கொள்ளைக்காரரால் துன்பம் நேராதபதி மானியபூமி கொடுத்துத் தேசத்தைக் காவல் புரியச்செய்ய்யும் பழையமுறை. |
தேசகன் | tēcakaṉ, n. <>dēša. Governor, ruler; நாடாள்வோன். (யாழ். அக.) |
தேசகாலம் | tēca-kālam, n. <>id.+. 1. Time and place; இடமும் பொழுதும். தேசகாலந்தெரிந்து பேசவேண்டும். 2. Duration of time; |
தேசசு | tēcacu, n. <>tējas. See தேசு. . |
தேசசுவாத்தியம் | tēca-cuvāttiyam, n. <>dēša +. svāsthya. General health and prosperity of a country; தேசத்தின் சௌக்கியநிலை. (W.) |
தேசத்தொண்டன் | tēca-t-toṅṭaṉ, n. <>தேசம்1+. Patriot, one who serves his country; நாட்டிற்கு உழைக்கும் தேசாபிமானி. Mod. |
தேசத்தொண்டு | tēca-t-toṇṭu, n. <>id.+. Service of the country; நாட்டிற்கு உழைக்கை. Mod. |
தேசதருமம் | tēca-tarumam, n. <>id.+. See தேசப்பழமை. (யாழ்.அக.) . |
தேசப்பழமை | tēca-p-paḻamai, n. <>id.+. Ancient or established customs or usages of a country; தேசவழக்கம். (J.) |
தேசப்பற்று | tēca-p-paṟṟu, n. <>id.+. See தேசாபிமானம். . |
தேசபடம் | tēca-paṭam, n. <>id.+. Map of a country; தேசவமைப்பைக் காட்டும் படம். Mod. |
தேசபரிச்சேதம் | tēca-pariccētam, n. <>id.+paricchēda. Limitation of place, one of three Pariccētam, q.v.; பரிச்சேதம் மூன்றனுள் இடத்தால் அளவிடுகை. கடவுளுக்குத் தேசபரிச்சேத மில்லை. |
தேசபாரம் | tēca-pāram, n. <>id.+. The burden of governing a country; நாடாளும் பொறுப்பு. (W.) |