Word |
English & Tamil Meaning |
---|---|
தேடி | tēṭi, n. Atis; அதிவிடயம். தேடித் தீந்தேன் றிப்பிலி (சிவக.2703). |
தேடித்தின்(னு) - தல் | tēṭi-t-tiṉ-, v. intr. <>தேடு-+. 1. To live from hand to mouth ; அன்றன்று பொருள்தேடிச் சீவனம் பண்ணுதல். Loc. 2. To live by unworthy means; 3. To live by whoredom; |
தேடிப்பிடி - த்தல் | tēṭi-p-piṭi-, v. intr.<>id.+. To procure a paramour; சோரபுருஷசனைப் பெறுதல். (W.) |
தேடியதேட்டம் | tēṭiya-tēṭṭam, n. <>id.+. Self-acquired property; சுவார்ச்சிதம். (J.) |
தேடியாடித்திரி - தல் | tēṭi-y-aṭi-tiri-, v. intr. <>id.+. See தேடியோடித்திரி-. . |
தேடியோடித்திரி - தல் | tēṭi-y-ōṭi-t-tiri-, v. intr. <>id.+. To make great efforts; பெருமுயற்சி செய்தல். |
தேடிவை - த்தல் | tēṭi-vai-, v. tr. <>id.+. To earn and lay up; பெருள் சேகரித்து வைத்தல். |
தேடு 1 - தல் | tēṭu-, 5 v. [M. tēṭuka.] 1. To seek, search for, enquire after; துருவிநாடுதல் தேடினே னாடிக்கண்டேன் (தேவா.1189, 3). 2. To acquire, earn, procure; 3. To take care of, cherish, foster, provide for; To seek, try, as to do a thing; |
தேடு 2 | tētu, n. A fish; மீன்வகை தேட்டுத் துண்டம். Nā. |
தேடுகூலி | tēṭu-kūli, n. <>தேடு-+. Search fee, paid for searching a document in a record office; பத்திர முதலியவற்றைத் துருவிக் கண்டேடுத்தற்குரிய கூலி. Mod. |
தேண்டு - தல் | tēṇṭu-, 5 v. tr. <>id. See தேடு-, 1. தேண்டிநேர் கண்டேன்வாழி (கம்பரா உருக்காட்டு.77). |
தேணிறம் | tēṇiṟam, n. <>தேள்+. A kind of green stone; மாந்தளிர்க்கல் (யாழ்.அக.) |
தேத்தடை | tē-t-t-aṭai, n. <>தேம்1 + அடை. See தேத்திறால். தேத்தடைத் திரள்கிழிந் தசும்பறா வரை (தணிகைப்பு. நாட்டு.14). |
தேத்தண்ணீர் | tē-t-taṇṇīr, n. <>Malay te <> Chin, tay +, Tea; தேயிலைப்பானகம். |
தேத்தாலடி - த்தல் | tēttālaṭi-, v. intr. To be available everywhere at a nominal price; பல விடத்தும் மலிவாகவிற்றல். கத்தரிக்காய் தெருவெல்லாந் தேத்தாலடிக்கிறது. Nā. |
தேத்திறால் | tē-t-t-iṟāl, n. <>தேம்1 + இறால். Honeycomb; தேனிறால். (தொ.எழுத்.344, உரை.) |
தேத்துக்காலி | tēttu-k-kāli, n. perh. தேம்2+. Vagabond, loafer; அடங்காது திரிபவ-ன்-ள். Loc. |
தேதாவெனல் | tē-tā-v-eṉal, n. Onom. expr. of humming the syllables தே, தா in a tune; இசைக்குறிப்பு, தேதாவென வண்டொடு தேன் வரிசெய்ய (சீவக.1066). |
தேதி | tēti, n. <>tithi. [T. tēdi.]. Date, day of the month; மாதத்தின் ஒரு பகுதியாகிய நாள். மாசித்திங்களில் முதற்றேதியில் (சீவக. 493, உரை). |
தேதிமழை | tēṭi-maḻai, n. <>தேதி+. Rain that falls on the date specified in the calendar; பஞ்சாங்கம் குறிப்பிட்ட நாளிற்பெய்யும் மழை. Colloq. |
தேது | tētu, n. <>tējas. [T. tēju.]. See தேசு. தேதெரி யங்கையி லேந்தி (தேவா.892, 4). |
தேதேயெனல் | tētē-y-eṉal, n. Onom. expr. of humming the syllables தே, தே in a tune; இசைக்குறிப்பு அஞ்சிறைவண்டு தண்டேன் பருகித் தேதேயெனுந் தில்லையோன் (திருக்கோ.82). |
தேந்தலை | tēn-talai, n. perh. தேம்1+. 1. A sea-fish. See செத்தை, 5. 2. See தேங்குழல். Tj. |
தேந்தேமெனல் | tēn-tēm-eṉal, n. Onom. expr. of the sound of a drum; இசைக்குறிப்பு தேந்தேமென்று மணிமுழவமும் (சீவக.292). |
தேநவரை | tē-navarai, n. <>தேம்1+ நவரை. Red mullet, chestnut, attaining 5 in. in length, Upeneoides bensasi; ஐந்தங்குல நீளம்வரை வளரும் நவரைமீன்வகை. |
தேநீர் | tē-nīr, n. See தேய்நீர். Colloq. . |
தேப்பானை | tē-p-pāṉai, n. <>தேம்1+. Pot containing honey; தேன்பெய்த பானை. (நன்.213, மயிலை.) |
தேப்பெருமாள் | tē-p-perumāḷ, n. <>தே3+. Viṣṇu, as worshipped at Conjeevaram; காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள திருமால். |
தேப்பை | tēppai, n. Raft; தெப்பம். பிறவி நீர்க் கடலை நீந்துநற் றேப்பையாம் (மேருமந்.1201). |
தேபூசை | tē-pūcai, n. <>தே3+. Worship, reverent homage paid to god; கடவுள் ஆராதனை தேபூசைமேற் கவனந் தீர்ந்துவிட்டேன் (விறலிவிடு.). |