Word |
English & Tamil Meaning |
---|---|
தேய் 2 - த்தல் | tēy-, 11 v. tr. Caus. of தேய்-(M.tēikka.) 1. To rub, rub away, waste by rubbing; உரைசச்செய்தல். மாநாகங்கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால் (சீவக. 1288). 2. To reduce; 3. To kill, destroy; 4. To scour, scrub, polish by rubbing, as a wall, as a vessel; to clean, as teeth; 5. To efface, erase, obliterate by rubbing; 6. To pare, shave, cut, as a gem; 7. To rub in, as oil, ointment or liniment; |
தேய்கடை | tēy-kaṭai, n. <>தேய்-+. 1. That which is worn out, as an implement; தேய்ந்தது. 2. That which is stunted in growth; |
தேய்கடைப்பணம் | tēy-katai-p-paṇam, n. <>தேய்கடை +, Coin worn out by use; வழங்கித்தேய்ந்த நாணயம். |
தேய்கடைப்பிள்ளை | tēy-katai-p-pillai, n. <>id.+. Stunted child; வளராப்பிள்ளை. |
தேய்கல் | tēy-kal, n. <>தேய்-+. Touch-stone; உரைகல் (W.) |
தேய்ச்சுமாய்ச்சுப்போடு - தல் | tēyccumāyccu-p-pōṭu-, v. tr. <>id.+. (W.) 1. To waste gradually or little by little; பொருள்முதலியவற்றைச் சிறுகச்சிறுகச் செலவிட்டு வீணாக்குதல். 2. To pay, as a debt, in such small sums as not to satisfy the creditor; 3. To hush up, as a crime; 4. To do superficially, as a work; |
தேய்த்துக்குளி | tēyttu-k-kuḷi, n. <>id.+. Oil-bath; எண்ணெய் ஸ்தானம். Nā. |
தேய்த்துப்புரட்டு - தல் | tēyttu-p-puraṭṭu-, v. tr. <>id.+. To rub an ointment; to wash oneself, as in bathing; தைலமிட்டுக் கழுவுதல். (J.) |
தேய்ந்துமாய்ந்துபோ - தல் | tēyntu-māyntu-pō-, v. intr. <>தேய்-+. To become emaciated with care; to pine; கவலையால் உடல் மெலிவுறுதல். |
தேய்நீர் | tēy-nīr, n. <>Malay. tē<>Chin.tay+. Infusion of tea-leaves; தேயிலைக்கஷாயம். |
தேய்ப்புணி | tēyppuṇi, n. <>தேய்-+உண்-. Thrifty person; செட்டுள்ளவன். (W.) |
தேய்ப்புத்தாள் | tēyppu-t-tāḷ, n. <>id.+. Sand paper; உப்புத்தாள். Nā. |
தேய்ப்புப்பலகை | tēyppu-p-palakai, n. <>id.+. Whetstone; சாணைபிடிக்கும் பலகை. Loc. |
தேய்ப்பூணி | tēyppūṇi, n. See தேய்ப்புணி. (W.) . |
தேய்பிறை | tēy-piṟai,. n. <>தேய்-+. 1. Waning moon; குறைமதி. தேய்பிறையும் போல் (திவ். திருவாய். 8,8,10). 2. Dark fortnight; |
தேய்பிறையிரும்பு | tēy-piṟai-y-irumpu, n. <>தேய்பிறை +. Sickle, as a crescent-shaped iron instrument; [தேய்பிறையைப்போன்ற இரும்பு] அரிவாள் தேய்பிறையிரும்பு தம்வலக்கை சேர்த்தினார் (சீவக. 55). |
தேய்மானக்காரன் | tēymāṉa-k-kāraṉ, n. <>தேய்மானம்+. Parasite, sponge-cake; பிறர் செலவிற் சீவனஞ்செய்யும் உலோபி. (J.) |
தேய்மானம் | tēy-māṉam, n. <>தேய்-+. [T. K. tēmāna, M. tēmānam.] 1. Loss by wear and tear; தேய்வு. 2. Loss sustained in testing gold by rubbing on a touchstone; 3. Frugality, parsimony; 4. (T. tēmānamu.) Laziness; |
தேய்வு | tēyvu, n. <>id. (M. tēvu.) 1. Wearing away, lessening, abrasion, diminution, wasting; குறைபாடு. 2. Disgrace, degradation; 3. Emaciation; 4. Decay, decline, downfall; 5. See தேய்மானம், 2. |
தேய்வுகட்டை | tēyuv-kaṭṭai, n. <>id.+. A piece of sandalwood worn out by trituration; தேய்ந்த சந்தனக்கட்டை. Loc. |
தேய்வை | tēyvai, n. <>id. Fragrant unguent from sandalwood, formed by trituration; சந்தனக்குழம்பு. நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை (திருமுரு. 33). |
தேயசு | tēyacu, n. See தேசு. Loc. . |
தேயபரிச்சேதம் | tēya-pariccētam, n. See தேசபரிச்சேதம். தெரித்தவொரு தேயத்துண்டொருதேயத் திலையென் றேயபரிச்சேதமும் (வேதா சூ. 36). . |
தேயம் 1 | tēyam, n. <>tējas. See தேசு. அரனம்பலம்போற் றேயத்ததாய் (திருக்கோ. 39). . |