Word |
English & Tamil Meaning |
---|---|
தேர்க்காசு | tēr-k-kācu, n. <>id.+. Coin given as present to children on the day of carfestival; தேர்விழாவன்று குழந்தைகட்குக் கொடுக்கும் இனாம் காசு. |
தேர்க்கால் | tēr-k-kāl, n. <>id.+. 1. Wheel of a chariot; தேர்ச்சக்கரம். 2. Potter's wheel; |
தேர்க்குடம் | tēr-k-kuṭam, n. <>id.+. 1. Hub of a chariot-whell; தேரின் சக்கரக்குடம். 2. Brass knobs in the form of inverted pots, as ornaments to a chariot; |
தேர்க்குழிசி | tēr-k-kuḻici, n. <>id.+. See தேர்க்குடம், 1. ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார் (சிவக. 790). |
தேர்க்குறடு | tēr-k-kuṟaṭu, n. <>id.+. See தேர்க்குடம், 1. பல ஆருந் தைத்து நிறைந்த தேர்க்குறடு (சீவக.790, உரை). |
தேர்க்கூம்பு | tēr-k-kūmpu, n. <>id.+. 1. See தேர்க்கொடிஞ்சி, 1. . 2. Finial of a chariot; |
தேர்க்கொடி | tēr-k-koṭi, n. <>id.+. Flag hoisted at the top of a chariot; தேரிற்கட்டிய பதாகை. |
தேர்க்கொடிஞ்சி | tēr-k-koṭici, n. <>id.+. 1. Ornamental staff fixed in front of the seat of a chariot . See கொடிஞ்சி, 1. நெடுந்தேர்க்கொடிஞ்சி பற்றி நின்றோன் (புறநா.77). 2. The wooden frame to which the yoke of a chariot is fixed; 3. See தேர்க்கூம்பு, 2. |
தேர்க்கொடுங்கை | tēr-k-koṭuṅkai, n. <>id.+. Curved cornice or projections of a chariot; தேரின் வெளிப்பக்கத்து மேல்வளைவு. |
தேர்க்கொற்றன் | tēr-k-koṟṟan, n. <>id.+. Charioteer; தேரோட்டுவோன். Loc. |
தேர்ச்சார்பலகை | tēr-c-cār-palakai, n. <>id.+சார்-+. See தேர்த்தட்டு. (W.) . |
தேர்ச்சி | tērcci, n. <>தேர்1-. [M. tērcca.] 1. Examination, investigation; ஆராய்ச்சி. 2. Learning ; 3. Discernment; ascertainment ; 4. Deliberation, council; 5. Experience; 6. Success in examination; |
தேர்ச்சித்துணைவர் | tērcci-t-tuṇaivar, n. <>தேர்ச்சி+. 1. Ministers of state, king's counsellors, statesmen; மந்திரத்தலைவர். (பிங்.) தூநான் மறையோருடன் றேர்ச்சித்துணைவர் தொடார (சேதுபு. அனும.14). 2. Friends ; |
தேர்ச்சில் | tēr-c-cil, n. <>தேர்3+. See தேர்க்கால்,1. . |
தேர்ச்சிவரி | tēcci-vari, n. <>தேர்ச்சி+. A dramatic action in which a person expresses in detail all his sufferings to his relatives; உறவு முறையார்க்குத் தன்விதனங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை கிளைகட்குத் தன்னுறு துயரந் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி (சிலப்.8, 103-4). |
தேர்ச்சினை | tēr-c-ciṉai, n. <>தேர்3 +. Ornamental staff in a chariot. See கொடிஞ்சி, 1. (கலித்.85, 18.) |
தேர்ச்சீலை | tēr-c-cīlai, n. <>id.+. Bright coloured cloths with which a chariot is ornamented; தேரை அலங்கரிக்கக் கட்டுஞ் சீலை. |
தேர்த்தட்டு | tēr-t-taṭṭu, n. <>id.+. Central seating space of a chariot; தேரின் உட்பரப்பு அழிந்ததேர்த் தட்டினின்று (கம்பரா. இந்திரசித்.39). |
தேர்த்தானை | tēr-t-tāṉai, n. <>id.+. Chariot division of an army, one of aṟu-vakai-t-tāṉai, q.v.; இரதங்களால் அமைந்த சேனை திறல் விலங்கு தேர்த்தானை (பு.வெ, 4, 8). |
தேர்த்திருநாள் | tēr-t-tiru-nāl, n. <>id.+. Car festival; கோயிற் றேர்த்திருவிழா. |
தேர்த்துகள் | tēr-t-tukaḷ, n. <>id.+. 1. Dust rising from a chariot in motion ; தேர்ச்செலவால் எழுந் தூளி. 2. Minute measure of length=4 atoms of dust in a sunbeam=8 katir-eḻu-tukaḷ; |
தேர்த்தொழில் | tēr-t-toḻil, n. <>id.+. Art of charioteering; தேர்நடாத்தும் வித்தை மற்றொழிலுந் தேர்த்தொழிலும் வாரணத்தின்றொழிலும் (சீவக.1795). |
தேர்ந்துசெயல் | tērntu-ceyal, n. <>தேர்1-+. Fruitful attempt; வாய்க்குந் திறனாடிச் செய்கை. தெரிதலுந் தேர்ந்துசெயலும் (குறள்.634). |
தேர்நிலை | tēr-nilai, n. <>தேர்3+. See தேர்முட்டி. Colloq. . |
தேர்ப்பாகன் | tēr-p-pākaṉ, n. <>id.+. 1. Charioteer; சாரதி. (சிலப். 5, 55, அரும்.) 2. The plant mercury; |
தேர்ப்பார் | tēr-p-pār, n. <> id.+. See தேர்த்தட்டு. (சூடா.) (J.) . |
தேர்மரச்சுற்று | tēr-mara-c-cuṟṟu, n. <>id.+. Boards round the body of a chariot; தேர்த்தட்டைச்சுற்றி அமைக்கப்பட்ட பலகை. (பிங்.) |