Word |
English & Tamil Meaning |
---|---|
தேராணி | tēr-āṇi, n. <>தேர்3+. Linchpin of a chariot; இரதத்தின் அச்சாணி. |
தேராதுதெளிதல் | tērāti-teḷital, n. <>தேர்1-+ ஆ neg. +. Mistaking one object for another without investigation, as a post for a man, one of eight piramāṇāpācam, q.v.; பிரமாணாபாசம் எட்டனுள் ஆராயாது ஒன்றை மற்றொன்றாக நிச்சயிக்கை. தேராதுதெளிதல் செண்டுவெளியில் ஒராது தறியை மகனென வுணர்தல் (மணி.27, 67). |
தேரார் | tērār, n. <>id.+id.+. 1. The ignorant; அறிவீனர். 2. The low, the bese; 3. Foes, enemies; |
தேராள் | tēr-āḷ, n. <>தேர்3+. [M. tērāḷi]. 1. Chariot warrior; இரதவீரன். 2. Persons who are, by custom, sent by the mirasdars to drag temple cars ; |
தேரி | tēri, n. 1. Sand hill; மணற்குன்று. Loc. 2. Sandy tract; |
தேரிடக்கியம் | tēr-iṭakkiyam, n. <>தேர்3+. See தேர்க்கொடி. . |
தேரீஜ்¢ | tērīj, n. <>U. tērīj. Abstract of account, compiled from other other detailed accounts; விவரத்திலிருந்து சுருக்கி எழுதப்பட்ட கணக்கு. (C. G.) |
தேரூமச்சி | tēr-ūmacci, n. <>தேர்3+. A kind of snail, as having a turbinate shell; தேர்போன்ற மேலோட்டையுடைய சிறு நத்தைவகை. (W.) |
தேரூழியம் | tēr-ūḻiyam, n. <>id.+. Service whereby each village is required to provide a fixed quota of men to drag the great temple cars; கோயிற்றேரை இழுப்பதற்குக் கிராமவாரியாக ஆள்களைத் திரட்டி அனுப்பும் ஊழியம். |
தேரெழுத்தாணி | tēr-eḻuttāṇi, n. <>id.+. Style having a turbinate head; தேருருவமான கொண்டையுள்ள எழுத்தாணிவகை. (W.) |
தேரை | tērai, n. [M. tēra.] 1. Frog ; தவளை. (பிங்.) அவ்வழித் தேரை தினப்பட லோம்பு (கலித்.147, 32). 2. Indian toad, Bufo melanostictus; 3. Fish bait; 4. Coconut blight; 5. A defect of stone consisting of a granular line; 6. See தேரையாதனம். தேரை சிம்புள்சிலம்பி (தத்துவப். 109). |
தேரைக்குண்டி | tērai-k-kuṇṭi, n. <>தேரை +. Flat buttocks; தட்டையான பிருட்டம். (W.) |
தேரைகுடி - த்தல் | tērai-kuṭi-, v. intr. <>id.+. To be blighted and eaten up, as coconuts; தேங்காயின் உள்ளீடு கெடுதல். (J.) |
தேரைத்தேங்காய் | tērai-t-tēṅkāy, n. <>id.+. Blighted coconuts; தேரைநோய்விழுந்த தேங்காய். |
தேரைத்தோஷம் | tērai-t-tōṣam, n. <>id.+. A wasting disease of child, believed to be caused by a toad's leaping on the mother during her pregnancy; கர்ப்பகாலத்தில் தாயின் மேல் தேரை விழுந்ததனால் பிறந்த சிசுவுக்கு உண்டாகும் தேகமெலிவு. |
தேரைபாய்தல் | tērai-pāytal, n. <>id.+. 1. Leaping of a toad on a pregnant woman, believed to cause wasting disease in the child; பிறக்கும் சிசு இளைக்கும்படி கருப்பிணிமீது தேரை விழுகை. 2. Becoming emaciated about the buttocks; |
தேரைபோ - தல் | tērai-pō-, v. intr. <>id.+. To be blighted and eaten up, as coconut; தேங்காயை உள்ளீடற்றதாக்கும் நோய் பற்றுதல். தேரைபோயிற்று என்றாற்போல்வதொரு நோய் என்க (சீவக.1024, உரை). |
தேரைமேய் - தல் | tērai-mēy-, v. intr. <> id.+. See தேரைகுடி. Loc. . |
தேரைமோ - த்தல் | tērai-mō-, v. intr. <>id.+. See தேரைகுடி-. (W.) . |
தேரையர் | tēraiyar, n. <>id. A saint who composed many medical treatises in Tamil verse; தமிழ் வைத்தியநூல்கள்பல இயற்றிய ஒரு சித்தர். |
தேரையாதனம் | tērai-y-ātaṉam, n. <>id.+. (Yōga.) A yogic posture of lying down frog-like, with arms touching the sides and the feet drawn up touching the hips; கவிழ்ந்திருந்து கைகள் இரண்டு விலாவிலும் கால்கள் இரண்டு பிருட்டத்திலும் சேரும்படி முடக்கிக்கிடக்கும் யோகாசனம். (தத்துவப்.109, உரை.) |
தேரைவிழு - தல் | tērai-viḻu-, v. intr. <>id.+. See தேரைபோ-. . |
தேரோட்டம் | tēr-ōṭṭam, n. <>தேர்3+. [M. tērōṭṭam.]. Car-festival; தேர்த்திருநாள். |
தேரோட்டு | tēr-ōṭṭu, n. <>id.+. See தேரோட்டம். . |
தேரோடும்வீதி | tēr-ōṭum-vīti, n.<> id.+ ஓடு-+. See தேர்வீதி. . |
தேரோர் | tērōr, n. <>id. 1. Chariot warriors ; தேர்வீரர். 2. Class of minstrels who go on chariots and with drum-accompaniment sing the praises of the cultivators at the threshing floor or of the warriors on the battlefield; |