Word |
English & Tamil Meaning |
---|---|
தேர்மறம் | tēr-maṟam, n. <>id.+. (Puṟap.) Theme eulogising a king's war-chariot; அரசனது போர்த்தேரின் சிறப்பினைக்கூறும் புறத்துறை. (பு.வெ.7, 10.) |
தேர்முட்டி | tēr-muṭṭi, n. <>id.+. The stand of a temple car; கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம். Colloq. |
தேர்முல்லை | tēr-mullai, n. <>id.+. (Puṟap.) Theme of the return of a hero in his chariot after subduing his enemies, sung in joy by his lady-love; பகைவரைவென்று மீண்ட தன் தலைவனது தேர்வரவறிந்து தலைவி மகிழ்ந்துகூறும் புறத்துறை (பு.வெ.10, முல்லைப்.3). |
தேர்மூடு | tēr-mūṭu n. <>id.+. Chariotstand; தேர்நிலை. Nā. |
தேர்மொட்டு | tēr-moṭṭu, n. <>id.+. 1. See தேர்க்கூம்பு. மிடையுற்றதேர்மொட்டு மொட்டொக்க (கலிங். 474). 2. Mature bud of portia; |
தேர்வட்டை | tēr-vaṭṭai, n. <>id.+. See தேர்க்கால். (சிலப்.14, 168.) . |
தேர்வடம் | tēr-vaṭam, n. <>id.+. Cable, thick rope for drawing a car; தேரிழுத்தற்குரிய பெரிய கயிற்றுவடம். மணலையு மேவுதேர்வடா மாக்கலாம் (அருட்பா, vi, வயித்திய.4). |
தேர்வண்மை | tēr-vaṇmai, n. <>id.+. Gift of chariots made by kings to poets; புலவர் முதலியோர்க்கு அரசர் அளிக்குந் தேர்க்கொடை. தேர்வண்பாரி (புறநா.118). |
தேர்வலவன் | tēr-valavaṉ, n. <>id.+. Charioteer; தேர்ப்பாகன். திண்டேர் வலவ கடவெனக் கடைஇ (அகநா.74). |
தேர்வலான் | tēr-valāṉ, n. <>id.+. See தேர்வலவன். தேர்வலான் செப்புவான் (கம்பரா. தைல.20). |
தேர்விளக்கு | tēr-viḷakku, n. <>id.+. Lights arranged in the form of a chariot; தேர்போல் அலங்காரமான அடுக்குவிளக்கு. Loc. |
தேர்வீதி | tēr-vīti, n. <>id.+. Main street through which the car of an idol or a king passes; தேரோடுந் தெரு. தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து (மணி.4, 14). |
தேர்வீரர் | tēr-vīrar, n. <>id.+. Warriors who fight in chariots, of four kinds, viz., atirataṉ, makārataṉ, camarataṉ , arttarataṉ; தேர் நடத்திப் போர்புரியவல்ல அதிரதன் மகாரதன், சமரதன் அர்த்தரதன் என்ற வீரர்கள். (பாரத. அணிவ.1. 3.) |
தேர்வு | tērvu, n. <>தேர்1-. 1. Examination, search; ஆராய்ச்சி. 2. Thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty; 3. Beauty; sweetness, as of expression; 4. Election, as to a council; |
தேர்வென்றி | tēr-veṉṟi, n. <>தேர்3+. Theme describing the valorous deeds of a warrior who rides his chariot and destroys his enemies' chariots; தன்றேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரனதுசெயலைச் சிறப்பிக்கும் புறத்துறை (பு.வெ.12, ஒழிபு.14.) |
தேரகம் | tērakam, n. Whitebait, silvery, Atherina forskalii; வெண்ணிறமுள்ள சிறு கடல் மின்வகை. |
தேரகன் | tērakaṉ, n. <>தேர்3+. See தேர்ப்பாகன், 1. (சது.) . |
தேரடி | tēr-aṭi, n. <>id.+. 1. See தேர்மூட்டி. . 2. Wheel, as the support of the car; 3. Discus weapon of Viṣṇu ; |
தேரடிசம்பாவனை | tēr-aṭi-campāvaṉai, n. <>தேரடி+. 1. Present given by a person to his son-in-law on the day of car-festival; தேர்த்திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் சம்மானம். Brāh. 2. Present given on the day of carfestival to the architect who finished the chariot and its driver ; |
தேரடிப்பணம் | tēr-aṭi-p-paṇam, n. <>id.+. See தேரடிசம்பாவனை. Loc. . |
தேரம் | teram, n. Corr. of நேரம். Loc. . |
தேரர் | tērar, n. <>sthavira <> Pali. tēra. (Buddh.) Bhikṣus; பௌத்த முனிவர். தேர ரமணரை (தேவா.139, 11). |
தேரலர் | tēr-alar, n. <>தேர்1-+ அல் neg. +. Foes, enemies; பகைவர். |
தேரறேர் | tēraṟēr, n. <>தேர்3 + அல் neg. + தேர்3. Mirage, as a phantom car; [உண்மையல்லாத இரதம்] கானல்நீர். மடமான் . . . தேரறேர்க்கோடல் (கலித்.13, 4). |
தேரன் | tēraṉ, n. See தேரையர். . |
தேரனார் | tēraṉar, n. See தேரையர். (அபி. சிந்.) . |
தேராங்கிணி | tērāṅkiṇi, n. See தேராங்குணி. . |
தேராங்குணி | tērāṅkuṇi, n. Whitebait, silvery, attaining 8 in. in length, Engraulis commersonianus; 8- அங்குலநீளம் வளர்வதும் வெண்மை நிறமுடையதுமான கடல்மீன்வகை. |