Word |
English & Tamil Meaning |
---|---|
தேயம் 2 | tēyam, n. <>dēya. Wealth; பொருள், தீரரா மவரே தேய்த் தியாகஞ்செய் சீவன் முத்தர் (ஞானவா. புண். 18). |
தேயம் 3 | tēyam, n. <>dēša. (பிங்.) 1. Country, land, district; நாடு. வரம்பிலா வுருவத்தானெத்தேயத்தான் (கம்பரா. மகரக்கண். 28). 2. Place, location, room; |
தேயம் 4 | tēyam, n.<>dēha. Body; உடல். (பிங்.) |
தேயம் 5 | tēyam, <>dhyēya. That which is worthy of meditation, as God; தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126). |
தேயம் 6 | tēyam, . n. <>stēya. Theft; களவு. (சூடா.) |
தேயவியற்கை | tēya-v-iyaṟkai, n. <>தேயம் +. See தேசாசாரம். உணர்வு மிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும் (குறள், பரி.உரைப்பா.). . |
தேயன் 1 | tēyaṉ, n. <>dhyēya. One who is meditated upon; தியானிக்கப்படுவோன். (சங்.அக.) |
தேயன் 2 | tēyaṉ, n. <>stēya. Thief; திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு. பாவ. 94). |
தேயனம் | tēyaṉam, n. <>tējana. Lustre, brilliance; ஒளி தேயனநாடராகிச் தேவர்கடேவர் போலும் (தேவா.838, 2). |
தேயாமண்டிலம் | tēyā-maṇṭilam, n. <>தேய்-+ஆ neg.+. Disc of the sun, as never waning ; (தேய்ந்து குறையாத சோதிமண்டலம்) ஆதித்தமண்டலம், தேயா மண்டிலங் காணுமாறு (பரிபா. 17, 32). |
தேயாமதி | tēyā-mati, n. <>id.+id.+. Full moon; பூரணசந்திரன். தேயாமதிபோல் (மணி..27, 137). |
தேயிலை | tē-y-ilai, n. <>Malay. tē<>Chin. tay +. 1. Tea, m. sh., Camellin thea; தேயிலைச்செடி. 2. Tea leaf, tea dust; |
தேயு 1 | tēyu, n. prob. தேய்-. Bewilderment; மயக்கம். (பிங்.) |
தேயு 2 | tēyu, n. <>tējas. Fire; அக்கினி. (பிங்.) |
தேயுசகா | tēyu-cakā, n. <>தேயு + sakhā. Wind, as the friend of fire; (அக்கினியின் நண்பன்) காற்று. தேயுசகா வுரனு மோய்வுற (வரத.பாகவத. நாரசிங்.195). |
தேயுடலி | tēy-uṭali, n. <>தேய்-+ உடல். See தேவாங்கு. (சங். அக.) . |
தேயுலிங்கம் | tēyu-liṅkam, n. <>தேயு+. The Lingam at Tiruvaṇṇāmalai believed to be constituted of the fire-element, one of pacaliṅkam, q.v.; பஞ்சலிங்கங்களுள் அக்கினிருபமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம். |
தேயுவின்கணம் | tēyuviṉ-kaṇam, n. <>id.+. Inauspicious metrical feet. See தீக்கணம். (பிங்.) |
தேயுவின்கூறு | tēyuviṉ-kūṟu, n. <>id.+. (Saiva.) Categories which partake of the nature of the fire element, five in number, viz., ākāram, nittirai, payam, maituṉam, cōmpal, one of 11 division of puṟa-niḻai-k-karuvi, q.v.; புறநிலைக்கருவி பதினொன்றனுள் அக்கினியின் கூறான ஆகாரம், நித்திரை, ¢பயம், மைதுனம், சோம்பல் என்பவை. |
தேர் 1 - தல் | tēr-, 4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2. To understand, to know; 3. To consider, deliberate, ponder well; 4. To elect; 5. To seek; 6. To ascertain, form a conclusion; 7. To acquire, obtain; 8. To doubt, question; To be well versed, proficient in; |
தேர் 2 - த்தல் | tēr-, 11 v. intr. prob. சேர்2-. To mingle, combine; கலத்தல் குழம்பும் . . . சுண்ணமும்..விரையுந் தேர்த்தரோ . . . அளறு பட்டது (சூளா..சுயம்.130) . |
தேர் 3 | tēr, n. prob. தேர்2-. 1. [T. Tu. tēru, K. M. tēr.] Car, chariot; இரதம். கடலோடா கால்வ னெடுந்தேர் (குறள்.496). யானையிலங்குதேர்க் கோது நெடுமலை (கலித்.24) 2. A vehicle. 3. Boy's small car; 4. The 4th nakṣatra. 5. Mirage; |
தேர் 4 | tēr, n. See தேரர். அலவை சொல்லுவார் தேரமணாதர்கள் (தேவா.95. 10). |
தேர்க்கவி | tēr-k-kavi, n. <>தேர்3+. A kind of poem. See இரதபந்தம். |