Word |
English & Tamil Meaning |
---|---|
தேவதாடம் | tēvatāṭam, n. <>dēvatāda. (யாழ். அக. ) 1. The moon's ascending node; இராகு. 2. Fire; |
தேவதாயம் | tēvatāyam, n. <>dēvadāya Lands or other endowments to a temple (R. F.) கோயிற்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம். தேவதாய்ங்கள் வேதியர் செய்கள்மேற் கோவினா லிறைகூட்டி (குற்றா. தல கவுற்சன. 62). |
தேவதாயோக்கியம் | tēvatā-yōkkiyam, n. <>dēvatā+. That which is worthy of gods themselves; கடவுளர்க்கு உரியது. |
தேவதாரம் | tēvatāram, n. <>dēva-dāru. 1. See தேவதாரு, 1, 2. தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா (கம்பரா. வரைக். 1). 2. Common bastard cedar. 3. A tree of svarga, one of paca-taru, q.v.; |
தேவதாரி | tēvatāri, n. See தேவதாரு, 1, 2. . |
தேவதாரு | tēvatāru, n. <>dēva-dāru. (L.) 1. Deodar cedar. See வண்டுகொல்லி. 2. Red cedar l.tr., Erythroxylon monogynum; 3. Mast-tree. |
தேவதாவிசுவாசம் | tēvatā-vicuvācam, n. <>dēvatā. See தெய்வவிசுவாசம். . |
தேவதாவியர்ச்சனம் | tēvatāviyarccaṉam, n. <>dēvatābhyarccana. Worship of a deity; தேவதாராதனை. (யாழ். அக.) |
தேவதாளி | tēvatāḷi, n. 1. (Mus.) A specific melody-type; பெரும்பண்வகை. (பிங்.) 2. Langsat of the āṉaimalai Hills in Coimbatore District, m.tr., Lansium anamallaiyanum; 3. cf. dēvatāda. Snake luffa. |
தேவதானம் | tēva-tāṉam, n. <>dēva +. Endowment of tax-free land to a temple; கோயிற்கு விடப்பட்ட இறையிலி நிலம். நன்றிகொடேவதான நல்கி (திருவாலவா.48, 22). |
தேவதீபம் | tēva-tīpam, n. <>id.+ dīpa. Eye; கண். (யாழ்.அக.) |
தேவதுந்துபி | tēva-tuntupi, n. <>id.+ dundubhi. Drums of the gods; தேவவாச்சியம் தேவதுந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பான் (சீவக.2367). |
தேவதூதன் | tēva-tūtaṉ, n. <>id.+. 1. Divine messenger; தெய்வச்செய்தி கொணர்வோன். 2. Holy angel; |
தேவதூபம் | tēva-tūpam, n. <>id.+ dhūpa. Konkany resin. See வெள்ளைக்குங்கிலியம் (தைலவ.தைல.) |
தேவதூஷணம் | tēva-tūṣaṇam, n. <>id.+. Blasphemy; தெய்வநிந்தை. |
தேவதேவன் | tēva-tēvaṉ, n. <>id.+. The Supreme Being; பரம்பொருள். நீயே தவத்தேவதேவனும் (திவ்.இயற். நான்மு.20). |
தேவதேவு | tēva-tēvu, n. <>தேவன்+ தேவு. See தேவதேவன். தேவதே வுபதேசித்த சித்தியை (திருவிளை. அட்டமா.29). |
தேவதை | tēvatai, n. <>dēvatā. 1. Deity, god; கடவுள். 2. Evil spirit; |
தேவதைக்குறை | tēvatai-k-kuṟai, n. <>தேவதை+. Disease, due to possession by an evil spirit; சிறுதெய்வபீடையால் உண்டாகும் நோய். (W.) |
தேவதைத்தொடர்ச்சி | tēvatai-t-toṭarcci, n. <>id.+. Possession or obsession by a demon; சிறுதேவதையின் பீடிப்பு. (W.) |
தேவநகர் | tēva-nakar, n. <>dēva+. Temple; கோயில். 2. City of the gods; |
தேவநாகரம் | tēva-nākaram, n. See தேவநாகரி. நந்திநாகரந் தேவநாகர முதலாய எழுத்துக்களை (சிவதரு. சிவஞானதான.32, உரை). |
தேவநாகரி | tēva-nākari, n. <>dēva + nāgarī. North Indian Sanskrit script; வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரியமொழியின் வடிவெழுத்து. |
தேவநாயகன் | tēva-nāyakaṉ, n. <>id.+. The lord of celestials; தேவர்கள் தலைவன். |
தேவநிகாயம் | tēva-nikāyam, n. <>dēvanikāya. Salvation; முத்தி. (யாழ். அக.) |
தேவநிந்தகன் | tēva-nintakaṉ, n. <>dēva + nindaka. Blasphemer; தெய்வதூஷணை செய்வோன். (யாழ்.அக.) |
தேவநிலம் | tēva-nilam, n. <>id.+. Portion of a house-site allotted to several deities, being one-sixth of a square plot; தேவதைகளுக்கென்று விடப்பட்ட ஆறிலொரு மனைப்பகுதி. (W.) |
தேவநீதி | tēva-nīti, n. <>id.+. Divine punishment; தெய்வ தண்டனை. (யாழ்.அக.) |
தேவப்பசு | teva-p-pacu, n. <>id.+. The celestial cow; காமதேனு. (யாழ்.அக.) |
தேவப்பிரணவம் | tēva-p-piraṇavam, n. <>id.+. See தேவபாணி. தேவப்பிரணவமெனும் வடமொழியை (பன்னிருபா. 207). |