Word |
English & Tamil Meaning |
---|---|
தேவப்பிரமா | tēva-p-piramā, n. <>dēvabrahmā. The Sage Nārada; நாரதர். (யாழ்.அக.) |
தேவப்பிரயாகை | tēva-p-pirayākai, n. <>dēva+. The sacred bathing ghat at the junction of the Ganges and the Jumna, now called Allahabad; கங்கை யமுனைகள் கூடுமிடத்துள்ளதும் அலகபாத்து என்று இப்போது அழைக்கப்படுவதுமான புண்ணிய நீர்த்துறை. |
தேவப்புள் | tēva-p-puḷ, n. <>id.+. Swan, as a divine bird; [தெய்வத்தன்மையுள்ள பறவை] அன்னம். (யாழ்.அக.) |
தேவபதம் | tēva-patam, n. <>id.+ pada. 1. Heaven, firmament; ஆகாயம். (யாழ். அக.) 2. Royal presence; |
தேவபதி | tēva-pati, n. <>id.+. See தேவர் கோன் (யாழ்.அக.) . |
தேவபவனம் | tēva-pavaṉam, n. <>id.+ bhavana. 1. See தேவாவாசம். (யாழ். அக.) . 2. Salvation; |
தேவபாடை | tēva-pāṭai, n. <>id.+ bhāṣā. Sanskrit, as the language of the gods; [தேவர்களுடையமொழி] வடமொழி, தேவபாடையினிக்கதை செய்தவர்(கம்பரா. சிறப்புப்.7). |
தேவபாணி | tēva-pāṇi, n. <>id.+. Songs in praise of gods; தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை செந்துறை வெண்டுறை தேவபாணியிரண்டும் (சிலப்.6, 35, உரை). |
தேவபூசை | tēva-pūcai, n. <>id.+. 1. Daily worship in a house; கிருகத்தில் நடத்தும் தேவாராதனை. 2. Meal of a Brahmin; |
தேவபூமி | tēva-pūmi, n. <>id.+. The world of the celestials; தேவலோகம். (யாழ்.அக.) |
தேவபோகம் | tēva-pōkam, n. <>id.+. See தேவதானம். மற்றும் எப்பேர்ப்பட்டதுக்கும் தேவபோக மாவதாகவும் (S. I. I. iii, 19). . |
தேவம் 1 | tēvam, n. <>dēva. See தெய்வம்1. Loc. . |
தேவம் 2 | tēvam, n. (மூ. அ.) 1. Ringworm root. See அனிச்சை1. 2. Common myrtle.¢. 3. Mango; |
தேவமந்திரி | tēva-mantiri, n. <>dēva + mantrm. Brhaspati , as Indra's minister; [இந்திரன் மந்திரி] வியாழன். (பிங்.) |
தேவமருத்துவர் | tēva-maruttuvar, n. <>id.+. Ašvins, the twin physicians of the celestial region; தேவர்களுக்கு மருத்துவராகிய அசுவினி தேவதைகள். |
தேவமாசம் | tēva-mācam, n. <>id.+.māsa. Eighth month after conception; கருப்பமுண்டன எட்டாமாதம். (யாழ்.அக.) |
தேவமாதா | tēva-mātā, n. <>id.+. 1. Aditi, the mother of the gods; தேவர்களின் அன்னையாகிய அதிதி. 2. Virgin Mary; |
தேவமாதுரு | tēva-māturu, n. <>id.+ mātr. See தேவமாதா,1. (யாழ்.அக.) . |
தேவமாதுருகம் | tēvamaturukam, n. <>dēva-mātrka. Region watered only by rain and not by streams; வானம்பார்த்த பூமி. தேவமாதுருகம்போலே ஒருபூ விளைகையாலே (ஈடு ). |
தேவமானம் | tēva-māṉam, n. <>dēva+. Divine standard of time; தேவர்க்குரிய காலவளவு. |
தேவயஞ்ஞம் | tēva-yaam, n. <>id.+ yaja. Sacrifice to deity . See கடவுள்வேள்வி. |
தேவயாத்திரை | tēva-yāttirai, n. <>id.+. 1. Pilgrimage to sacred places ; தலயாத்திரை தேவயாத்திரை தீர்த்தயாத்திரைசெய் சிவநேசர் (தணிகைப்பு. அகத்திய. 502). 2. Procession of the chief idol of a temple ; |
தேவயானம் | tēva-yāṉam, n. <>id.+ yāna. 1. Chariot or vehicle of a god; கடவுளர் ஊர்தி. 2. The way to Heaven. |
தேவயானை | tēva-yāṉai, n. <>id.+. 1. The celestial elephant. See ஐராவதம். 2. A wife of Skanda. |
தேவயுகம் | tēva-yukam. n. <>di.+. Period consisting of 12, 000 divine years; 12,000 தெய்வவாண்டுகொண்ட காலவளவு. (சங்.அக.) |
தேவயோனி | tēva-yōṉi, n. <>id.+. Divine womb; தெய்வகருப்பாசயம். (யாழ். அக.) |
தேவர் | tēvar, n. <>dēva. 1. Deities, objects of worship; கடவுளர். தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே (தொல். பொ. 450). 2. Celestials, of four classes, viz., aṣṭavacukkal, tuvātacātittar, ēkātaca-ruttirar, accuviṉi-tēvar; 3. A term of respect for persons of high station; 4. Tiruvaḷḷuvar. 5. The author of Cīvakacintāmaṇi. 6. A word appended to the names of kings, ascetics, etc.; 7. [T. dēvara.] 8. Title of Maṟava caste; |