Word |
English & Tamil Meaning |
---|---|
தேவர்க்காடல் | tēvarkkāṭal, n. <>தேவர்+. Temporary possession by a spirit; ஆவேசம். (W.) |
தேவர்கன்மி | tēvar-kaṉmi, n. <>id.+. See தேவகன்மி. திருவானிலை மாதேவர் கோயிலில் தேவர்கன்மிக்கும் (S. I. I. iii, 43). |
தேவர்குலம் | tēvar-kulam, n. <>id.+. [K. dēgula.] See தேவகுலம். தேவர்குலத்தை வலங்கொண்டு (இறை. 1, பாயி. பக். 8). |
தேவர்கோ | tēvar-kō, n. <>id.+. See தேவர்கோன். தேவர்கோ வறியாத தேவதேவன் (திருவாச. 5, 30). |
தேவர்கோன் | tēvar-kōṉ, n. <>id.+. Indra, the lord of the celestials; தேவர்களுக்கு அரசனான இந்திரன். தேவர்கோன் பூணாரந் தென்னர்கோன்மார்பினவே (சிலப். 17, பக். 447). |
தேவர்நாடு | tēvar-nāṭu, n. <>id.+. See தேவலோகம். (மணி. 14, 42.) . |
தேவர்நாமம் | tēvar-nāmam, n. <>id.+. A song service. See திவ்வியநாமசங்கீர்த்தனம். Loc. |
தேவர்பகைவர் | tēvar-pakaivar, n. <>id.+. Asuras, as enemies of the gods; (தேவர்க்குப் பகைவர்) அசுரர். (பிங்.) |
தேவர்வசம் | tēvar-vacam, n. See தேவர்வாசம். . |
தேவர்வாசம் | tēvar-vācam, n. <>தேவர்+vāsa. Pipal, as the abode of the gods; [தேவர் வசிக்குமிடம்] அரசு. (மலை.) |
தேவரகசியம் | tēva-rakaciyam, n. <>dēva+rahasya. Profound secret, known only to gods; தேவர்க்குமட்டும் தெரிந்த அரிய ரகசியம். |
தேவரகண்டன் | tēvarakaṇṭaṉ, n. <>தே3+. Siva, as worshipped at Tiruvārūr; திருவாரூர்ச் சிவபிரான். தேவரகண்டப் பெருமாள் தியாகப் பெருமாள் (திருவாரூ. 28). |
தேவரங்கம் | tēvaraṅkam, n. cf. தேவாங்கம். Cloth worn by women while engaged in house hold work; பணிப்புடைவை. (யாழ். அக.) |
தேவரடியார் | tēvar-aṭiyār, n. <>தேவர்+. Temple dancing-girls; தேவதாசிகள். தேவரடியார்க்கும் உவச்சர்க்கும் (S. I. I. iii, 47). |
தேவரநீதி | tēvara-nīti, n. dēvara+. The practice by which a childless widow is permitted to have sexual union with the brother of her deceased husband for the sake of raising up seed to the deceased; கணவனிறந்தபின் வமிசவிருத்தி கருதி மைத்துனரைக்கூடி மகப்பெறும் பண்டை வழக்கம். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்திய ரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால். (பாரத. சம்பவ. 4). |
தேவரம்பை | tēva-rampai, n. <>dēva+rambhā. 1. A celestial damsel; தேவலோகத்து மகளிருள் ஒருத்தி. 2. Damsels in Svarga; |
தேவரன் | tēvaraṉ, n. <>dēvara. Husband's brother; கணவனுடன் பிறந்தான். ஈண்டு தேவரநீதியிற் கொழுந்தியரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால் (பாரத. சம்பவ. 4). |
தேவராசன் | tēva-rācaṉ, n. <>dēva+. See தேவர்கோன். . |
தேவராசியம் | tēva-rāciyam, n. <>id.+rahasya. See தேவரகசியம். தேவராசிய மொன்றுண்டாம் (அரிச். பு. விவா. 43). |
தேவராட்டி | tēvar-āṭṭi, n. <>தேவர்+. A women divinely inspired and possessed of oracular powers; சன்னதக்காரி. தலைமரபின் வழிவந்த தேவராட்டி தனையழைமின் (பெரியபு. கண்ண. 47). |
தேவராயன்சம்பா | tēvarāyaṉ-campā, n. A kind of campā paddy; சம்பாநெல்வகை. Loc. |
தேவராலயம் | tēvar-ālayam, n. <>தேவர்+. Mount Mēru, as the abode of the gods; [தேவர்க்கு இருப்பிடம்] மகாமேரு. (பிங்.) |
தேவராளன் | tēvar-āḷan n. <>id.+ஆள்-. A man divinely inspired and possessed of oracular powers; சன்னதக்காரன். களித்தனன் றேவராளன் (சீகாளத். பு. கண்ணப். 57). |
தேவரான் | tēvar-āṉ. n. <>id.+. Celestial cow; காமதேனு. இன்ன தேவரான் கொடுப்ப (திருவிளை. நான்மாட. 20). |
தேவரிஷி | tēva-riṣi, n. <>id.+. Rṣi of the celestial class; தெய்வமுனிவன். |
தேவரீர் | tēvarīr, n. <>id. You, yours, a term of respect; பெரியோரை முன்னிலைப்படுத்துஞ் சொல். தேவரீர் திருவடிகளைத் திக்குநோக்கித் தண்டம்பண்ணினேன் (சிலப். 13, 87, உரை). |
தேவருணவு | tēvar-uṇavu, n. <>id.+. Nectar, ambrosia, as the food of gods; [தேவரின் உணவு] அமிர்தம். |
தேவரூண் | tēvar-ūṇ, n. <>id.+. See தேவருணவு. . |