Word |
English & Tamil Meaning |
---|---|
தேவேத்தனம் | tēvēttaṉam, n. <>daiva+yatna. Act of God, providence; தெய்வச்செயல். (யாழ். அக.) |
தேவேந்திரப்பொங்கல் | tēvēntira-p-poṅkal, n. <>தேவேந்திரன்+. A kind of paddy; நெல்வகை. (A.) |
தேவேந்திரமாமுனி | tēvēntira-mā-muṉi, n. <>id.+. A Jaina ascetic, author of Cīvacampōtaṉai; சீவசம்போதனை இயற்றிய சைவனவாசிரியர். |
தேவேந்திரயோகம் | tēvēntira-yōkam, n. <>id.+. (Astrol.) A yōga indicating great prosperity; சோதிடயோகங்களுள் மிக்கசெல்வநிலையைக் குறிப்பது. (சங். அக.) |
தேவேந்திரன் | tēvēntiraṉ, n. <>dēvēndra. Indra, the lord of the celestials; தேவர்களுக்கு அரசன். சிரபுரந் தேவேந்திரனூர் (தேவா. 146, 2). |
தேவை 1 | tēvai, n. 1. Affairs, business; காரியம். ஏவித் தேவைகொள்ளுதல் (ஈடு, 8, 3, ப்ர.). தங்கள் தேவைகளுஞ் செய்யாதே (சோழவமி. 65). 2. Compelling need or necessity; 3. Desire; 4. Haste; 5. Slavery, bondage; 6. First wedding feast held in the parent's house of a bride; |
தேவை 2 | tēvai, n. <>dēva. Rāmēšvaram. See இராமேசுவரம். ஒருதேவைவந்து பலதேவர் தாழு மிலக்குமணர் தண்புனலும் (தேவை.19). . |
தேவோக்கித்தம் | tēvōkkittam, n. See தேவோக்தம். (W.) . |
தேவோக்தம் | tēvōktam, n. <>dēva+ukta. Divine revelation; தெய்வக்கூற்று. (W.) |
தேவோத்தியானம் | tēvōttiyāṉam, n. <>id.+udyāna. Flower garden attached to a temple; கோயிலைச்சார்ந்த நந்தவனம். (W.) |
தேள் | tēl, n. [T. tēlu, K. M. Tu. tēḷ.] 1. Scorpion; கொடுக்காற் கொட்டிவருத்தும் பிராணிவகை. தேட்கடுப்பன்ன நாட்படு தேறல். (புறநா. 392, 16). 2. Scorpio in the zodiac; 3. The 17th nakṣatra. |
தேள்கொடுக்குக்கான்சு | tēḷ-koṭukku-k-kāṉcu, n. <>தேள்கொடுக்கு. Hooks and eyes; சன்னல் கதவு முதலியவற்றைச் சாத்திமாட்ட உதவுங் கொக்கி. (கட்டட. நாமா. 27.) |
தேள்தண்டட்டி | tēḷ-taṇṭaṭṭi, n. <>id.+. A kind of ear-ring, worn by women above the urukkumaṇi; புறக்காதில் உருக்குமணியணிக்கு மேலிடத்தில் மகளிர் அணியும் காதணிவகை. Parav. |
தேள்வை | tēḷvai, n. Corr. of தேவை 1, 2, 3. Loc. . |
தேளக்கனம் | tēḷakkaṉam, n. See தேளைக்கனம். Nā. . |
தேளி | tēḷi, n. <>தேள். 1. Scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis, poisonous and having nippers like a scorpion; தேள்போன்று கவ்வுமுறுப்புக்கொண்டதும் ஒர் அடிக்குமேல் வளர்வதும் ஈயவெண்மைநிறமுடையதுமான விஷமீன்வகை. அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே (குற்றா. குற. 91, அனுபல்.). 2. Brahmin coconut tree. |
தேளேறு | tēḷ-ēṟu, n. <>id.+ஏறி-. Sting of a scorpion; தேட்கொட்டு. வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல (இறை. 2, பக். 39). |
தேளை | Tēḷai, n. Palpitation of heart; இதயத்துடிப்பு. Nā. |
தேளைக்கனம் | tēḷai-k-kaṉam, n. <>தேளை+. Hardihood; நெஞ்சுரப்பு. Nā. |
தேற்றம் | tēṟṟam, n. <>தேறு-. 1. [M. tēṟṟam.] Certainty; assurance; determination; நிச்சயம். தேற்றம் வினாவே (தொல். சொல். 259). 2. [T. tēṭa, K. tēṭē.] Clearness; 3. Presence of mind; Comfort, consolation; 5. Oath; Thriving, luxuriant growth; |
தேற்றமானவன் | tēṟṟam-āṉavaṉ, n. <>தேற்றம்+. (W.) 1. Courageous person; தைரியசாலி. 2. Invalid picking up strength; convalescent; |
தேற்றரவாளன் | tēṟṟaravāḷaṉ, n. <>தேற்றரவு+. See தேற்றரவாளி. (யாழ். அக.) . |
தேற்றரவாளி | tēṟṟaravāḷi, n. <>id.+. 1. Strong person; திடமுடையவன். (யாழ். அக.) 2. Comforter, consoler, encourager; 3. The Holy Spirit; |
தேற்றரவு | tēṟṟaravu, n. <>தேற்றம். See தேற்றம். . |
தேற்றன் | tēṟṟaṉ, n. <>id. A person of true knowledge; உண்மையறிவுள்ளவன். தேற்றனே தேற்றத் தெளிவே (திருவாச. 1, 82). |