Word |
English & Tamil Meaning |
---|---|
தொய் 2 | toy, n. <>தொய்-. Fault, blemish, deficiency; குற்றம், தொய்யறப் பெய்த . . . பவளச் செய்யும் (சீவக. 2474). |
தொய்தம் | toytam, n. See துவைதம்1. (சங். அக.) . |
தொய்படு - தல் | toy-pattu-, v. intr. <>தொய்-+. To be moistened, wet; நனைதல். நும்மியந் தொய்படாமல் (மலைபடு. 365). |
தொய்யகம் | toy-y-akam, n. prob. id+. A part of head ornament; தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. தொய்யகந் தாழ்ந்த கதுப்பு (கலித். 28). (சிலப். 6, 107.) |
தொய்யப்போடு - தல் | toyya-p-pōṭu-, v. tr. <>id.+. To delay purposively; ஒரு பயனுக்காகக் காரியத்தைச் சிறிது தாழ்த்தல். Colloq. |
தொய்யல் | toyyal, n. <>id. Fainting, languishing, despondency; சோர்கை. அறியாத் தொய்யற் சிந்தையாம் யாவரை யாதென்று துதிப்பேம் (கம்பரா. ஊர்தே. 18). 2. Affliction; 3. Mud; 4. Ploughing; 5. Delight, pleasure, gladness, joy; |
தொய்யவாங்கு - தல் | toyya-vāṅku-, v.<>id.+. (w.) intr. To be very slow in breathing; மெல்ல மூச்சுவருதல்.-tr To reduce a person by draining away his property; |
தொய்யவிடு - தல் | toyya-viṭu-, v. <>id.+. (w.) tr. 1. To slacken, as a rope; கயிறு முதலானவற்றைத் தளரவிடுதல். 2. To hold back for a time with a view to raise the price, as merchandise; 3. To put off, delay; To Be yielding; |
தொய்யா | toyyā, n. cf. துயிலி1. See தொய்யாக்கீரை. . |
தொய்யாக்கீரை | toyyā-k-kīrai, n. <>தொய்யா+. The smallest Indian amaranth, a weed of gardens and a wholesome potherb, Digera arvensis; கீரைவகை. |
தொய்யாவுலகம் | toyyā-v-ulakam, n. <>தொய்-+ஆ neg.+. Heaven, as the world where nobody need work; (வினைசெய்ய வேண்டாத உலகம்) சுவர்க்கம். தொய்யா வுலகத்து நுகர்ச்சி (புறநா. 214, 9) . |
தொய்யில் | toyyil, n. <>id. 1 Solution of sandal for drawing figures on the breast and shoulders of women; மகளிரின் தோள் தனங்களில் வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில் பொறித்த (மதுரைக். 416). 2. Figures drawn upon the breast of women with sandal solution; 3. See தொய்யாக்கீரை. (W.) 4. Water spinach; 5. See தொய்யல், 2, 4, 5. (திவா.) 6. Leaving; 7. cultivated moist land; 8. Beauty; 9. Enthusiasm; |
தொய்வு | toyvu, n. <>id. 1. Laxity, looseness, as of a rope; கட்டின் தளர்ச்சி. 2. Faintness; 3. Difficulty of breathing; 4. Asthma; |
தொல் | tol, adj. [T. toli.] 1. Old, ancient; பழைய. 2. Natural; |
தொல்கதை | tol-katai, n. <>தொல்+. Puraṇa; புராணம். சூத னோதியது மூவாறு தொல் கதை (கந்தபு. அவையடக். 8). |
தொல்காப்பியச்சூத்திரவிருத்தி | tolkāppiya-c-cūttira-virutti, n. <>தொல்காப்பியம்+. An elaborate commentary on the pāyiram and the first Sūtra of Tolkāppiyam by Civa-āṉamuṉivar; தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற்சூத்திரத்திற்கும் சிவஞானமுனிவரியற்றிய விருத்தியுரை. |
தொல்காப்பியதேவர் | tol-kāppiya-tēvar, n. <>id.+. A poet, author of Tiruppātiri-p-puliyūr-kalampakam, prob. 13th c.; உத்தேசம் 13-ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றியவருமான ஆசிரியர். (தமிழ்நா. 30.) |
தொல்காப்பியம் | tol-kāppiyam, n. <>தொல்காப்பியன். The most ancient Tamil grammar extant, by Tolkāppiyaṉār; மிகப் பழையதும் தொல்காப்பியனார் இயற்றியதுமான தமிழிலக்கண நூல். |
தொல்காப்பியன் | tol-kāppiyaṉ, n.<> தொல்+காப்பியன். See தொல்காப்பியனார். துன்னருஞ் கீர்த்தித் தொல்காப்பியன்முதற் பன்னிருபுலவரும் (பு. வெ. சிறப்புப்பா.). . |
தொல்காப்பியனார் | tol-kāppiyaṉār, n. <>தொல்காப்பியன். Author of Tolkāppiyam, reputed to be a disciple of Agastya, as born in kāppiya-k-kuṭi; காப்பியக்குடியிற் பிறந்தவரும் அகத்தியனார் மாணாக்கரும் தொல்காப்பியமியற்றியவருமாகிய ஆசிரியர். இடைச்சங்கமிருந்தார் அகத்தியனார்ருந் தொல் காப்பியனாரும் (இறை.1, பக்.5). |
தொல்லெழில் | tol-l-eḻil, n. <>தொல்+. Natural beauty; இயற்கையழகு. தொல்லெழி றொலைபிவள். (கலித்.17, 5) . |