Word |
English & Tamil Meaning |
---|---|
தொல்லை 1 | tollai, n.<>id. [ T. tolli.] Antiquity, ancientness; பழமை. தொல்லைக்க ணின்றார் தொடர்பு (குறள், 806) . |
தொல்லை 2 | tollai, m. perh. தொலை1-. [M. tolla.] 1. Trouble, perplexity, difficulty; துன்பம், மனத்தொல்லை யொழிவது என்று? 2. Work; |
தொல்லையார் | tollaiyār, n. <>தொல்லை1. Celestials, as the ancients; (பழமையோர்) தேவர். தொல்லையா ரமுதுண்ண (தேவா. 35). |
தொல்லைவையகம் | tollai-vaiyakam. n. <>id.+. Heaven, as the ancient world; (மூதுலகு) மோட்சம். தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் (தேவா.66, 3). |
தொல்வரவு | tol-varavu, n. <>தொல்+. Birth in an ancient family; பழைய குடிவரவு. தொல்வரவுந் தோலுங் கெடுங்கும் (குறள்.1043). |
தொல்வரைவு | tol-varaivu, n. <>id.+. Ancient custom, rule of conduct; அடிப்பட்ட குடியொழுக்கம், செய்யாரே தொல்வரைவிற் றீர்ந்த தொழில் (ஆசாரக். 57). |
தொல்வினை | tol-vinai, n. <>id.+. Karma; பழவினை. தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118, 3) |
தொலி - த்தல் | toli-, 11 v. tr. 1. cf. சொலி1- to strip off, as rind, bark; to flay; உரித்தல். Loc. 2. To husk , hull, pound; 3. To beat severely; |
தொலி | toli, n. <>தொலி-. [M. toli.] 1. Skin, rind; தோல். 2. Husk; |
தொலியல் | toliyal, n. <>id. Husked rice; உமி போக்கிய அரிசி. (w.) |
தொலியாக்கரம்பை | toliyā-k-karampai, n. perh. id.+ஆ neg.+. Bristly buttonweed. நத்தைச்சூரி. (மலை.) |
தொலியாக்கலப்பை | toliyā-k-kalappai, n. See தொலியாக்கரம்பை. . |
தொலை - தல் | tolai-, 4 v. intr. [T. tolagu, Tu, tolgu.] 1. To become extinct, perish, die; அழிதல். தொலையாக் கற்ப (பதிற்றுப் 43, 31). 2. To be exhausted, terminated, expended, expiated, liquidated; 3. To end, as a way or distance; to expire, as time; 4. To be over, finished; 5. To be weary; 6. To Be defeated, outrivalled; to fail in comparison; 7. To suffer; 8. To be lost; 9. To Leave; to depart for good; |
தொலை - த்தல் | tolai-, 11 v. tr. caus, of தொலை1-. 1. To destroy, kill, exterminate, as in battle; அழித்தல், விலங்கலன்ன போர்முதற் றொலைஇ (மலைபடு.461). 2. To spend, pass, as time; 3. To remove, wipe off; 4. To bring to an end, settle; 5. To finish; 6. To spoil; 7. To lose; 8. To discomfit, surpass, rout; |
தொலை 1 | tolai, n. <>தொலை1-. 1. Ruin; அழிவு. தொலைமக்க டுன்பந் தீர்ப்பார் (நாலடி, 205). 2. Distance, great distance; 3. Foreign country beyond the seas, as distant; |
தொலை 2 | tolai, n.cf. துலை. Resemblance, equality; ஒப்பு. (w.) |
தொலைச்சு - தல் | tolaiccu-, 5 v. tr. <>தொலை1-. 1. To kill, destroy; கொல்லுதல். முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 2. To exhaust; 3. To pay, discharge, as a debt; |
தொலைதூரம் | tolai-tūram, n. <>தொலை3+. Great distance; மிக்க தூரம். Colloq. |
தொலைபு | tolaipu, n. <>தொலை1-. Perishing, destruction; அழிகை, படைதொலை பறியா மைந்து மலி பெரும்புகழ் (பெரும்பாண். 398). |
தொலைவு | tolaivu, n. <>id. 1 Completion; முடிவு. தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52). 2. End, Extinction, destruction; 3. Defeat, failure; 4. Fatigue, Weariness; 5. Dwindling, decrease; 6. Distance; |