Word |
English & Tamil Meaning |
---|---|
தொள்கு | toḷku, n. <>id. 1. Net for trapping; வலை. தொள்கின்றலை யெய்திய மானென (கம்பரா. சடாயுவு. 130). 2. Slush, mire; 3. Excavation, pit; |
தொள்ளம் | toḷḷam, n. <>id. 1. Float, raft; தெப்பம். (திவா.) தேர்களூர் தொள்ள மாதிகளா (விநாயகபு. 37, 33). 2. Mud, mire; |
தொள்ளல் | toḷḷal, n. <>id. Hole; துளை. Colloq. |
தொள்ளாடி | toḷ-ḷ-āṭi, n. <>id.+. (J.) 1. Weak, Infirm person or thing; பலவீனப்பட்ட வன்-வள்-து. 2.Flaccid person or beast; 3. Growing lax, as the muscles; |
தொள்ளாடு - தல் | toḷ-ḷ-āṭu-, v. intr. <>id.+. To become weak; வலிதளர்தல். (W.) |
தொள்ளாயிரம் | toḷ-ḷ-āyiram, n. <>id.+. [M. toḷḷāyiram.] Nine hundred; ஒன்பது நூறு. தொள்ளாயிரங் கடும்போர்க்கணை துரந்தான் (கம்பரா. நிகும்பலை.124). |
தொள்ளாளி | toḷḷāḻi, n. Corr. of தொழிலாளி. Loc. . |
தொள்ளி | toḻḻi, n. <>தொள்-. cf. தொளி1. Mud, soft mire; சேறு. (பிங்) மைகுழைத்தன்ன தொள்ளியஞ் செறுவில் (கல்லா. 36, 1). |
தொள்ளியடி - த்தல் | toḻḻi-y-aṭi-, v. tr. <>தொள்ளி+. 1. See தொளியடி-. . 2. To damage, as one's reputation; |
தொள்ளை | toḷḷai, n. <>தொள்-. 1. [K. toḷḷe, M. toḷḷa.] Hole, Perforation; துளை. தொள்ளைப்புலாற்பை (திருப்பு. 289). 2. Pit; 3. Anything tubular; 4. cf. தொள்ளம். Sailing vessel; 5. Fault, defect; 6. Standard measure of capacity; 7. Ignorance; |
தொள்ளைக்காதர் | toḷḷai-k-kātar, n. <>தொள்ளை+. A caste of itinerant vendors of brassware from Tinnevelly and palghat, as-having pierced ear-lobes; (தொள்ளைக் காதையுடையவர்) ஊர்தோறுந்திரிந்து பித்தளைப்பாத்திரம் விற்குமொரு சாதியார். Loc. |
தொள்ளைக்காது | toḷḷai-k-kātu, n. <>id.+. 1. Ear with a big perforation in its lobe, opp. to illi-k-kātu; பெருந்துளையுள்ள காது. 2. Perforated eat left unadorned and empty; |
தொள்ளைக்காதுச்செட்டி | toḷḷai-k-kātu-c-ceṭṭi, n. <>தொள்ளைக்காது+. Trader in stone vessels; கற்சட்டி வியாபாரி. Loc. |
தொளதொள - த்தல் | toḷatoḷa-, 11 v. intr. Colloq. 1. To be loose-fitting, lax; தளர்த்தல். 2. To be soft, as from over-ripeness, from moisture; to be thin, as pap; 3. To babble, rattle away; 4. To waver; to be undecided; |
தொளதொளப்பு | toḷatoḷappu, n. <>தொளதொள-. Slackness, looseness; நெகிழ்வு. |
தொளதொளெனல் | toḷa-toḷeṉal, n. <>id. Expr. of (a) being slack, loose; நெகிழ்வுக் குறிப்பு: (b) rattling talk; |
தொளாபாரம் | toḻā-pāram, n. perh. துலாபாரம். Ancient thing or affair; பழைய காரியம். Loc. |
தொளி 1 | toḻi, n. <>தொள்-. See தொள்ளி. உழாநுண்டொளி (சிலப். 10, 120). . |
தொளி 2 | toḻi, n. <>pratōli. Street; வீதி மண்டப மொண்டொளி யனைத்தும் (திவ். பெரியதி. 2, 10, 5). |
தொளிகலக்கு - தல் | toḻi-kalakku-, v. intr. & tr. <>தொளி1+. See தொளியடி-. . |
தொளிப்பருவம் | toḻi-p-paruvam, n. <>id.+. See தொளிவிரைப்பு. . |
தொளியடி - த்தல் | toḻi-y-aṭi-, v. intr. & tr. <>id.+. To plough a flooded field; வயலிற்சேறு கலக்குதல். |
தொளிவிரைப்பு | toḻi-viraippu, n. <>id.+. Sowing in the slush of a field, opp. to puḻutiviraippu; வயலைச் சேறாகக் கலக்கி விதைக்கை. |
தொளுக்கு - தல் | toḷukku-, 5 v. tr. (J.) 1. To tie loosely; தொடுத்தல். 2. To wear or attach loosely; as clothes; |
தொளுக்குக்கொண்டை | toḷukku-k-koṇṭai, n. <>தொளுக்கு-+. Loosened coil of a woman's hair; அவிழ்ந்த மயிர்முடி. (W.) |
தொளை 1 - த்தல் | toḷai-, 11 v. tr. 1. To perforate, bore; துளையிடுதல். மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123). 2. To tease; 3. To probe; |