Word |
English & Tamil Meaning |
---|---|
தொளை 2 | toḻai, n. <>தொளை.- (K. toḻe.] 1. Hole; துவாரம். தொளைகொடாழ் தடக்கை (கம்பரா. சித்திர. 29). 2. Bamboo; |
தொற்பதம் | toṟ-patam, n. See தொம்பதம். தொற்பத மேவித் துரிசற்று (திருமந். 1421). . |
தொற்று 1 - தல் | toṟṟu-, 5 v. tr. 1. To attach, tack; அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி (ஈடு, 3, 1, 10). 2. To affect, as a contagious disease; 1. To spread, as a vine; 2. To climb; |
தொற்று 2 | toṟṟu, n. <>தொற்று-. 1. Connection; சம்பந்தம். கர்ப்பத்திலே தொற்றில்லாமை (திவ். திருப்பா. 5. வ்யா. 82). 2. Contagion; 3. A piece of wood attached to the hip of a roof; |
தொற்றுநோய் | toṟṟu-nōy, n. <>id.+. Contagious disease, as plague; ஒட்டித் தொடரும் வியாதி. |
தொறட்டு | toṟaṭṭu, n. Complication. See துறட்டு. |
தொறு 1 | toṟu, n. <>துறு. 1. [T. toṟṟu, K. tuṟu.] Herd of cows; பசுக்கூட்டம். (பிங்.) தொகைமலி தொறுவையாளுந் தோன்றல் (சீவக. 474). 2. Cattle-stall; 3. Shepherd caste; 4. Crowd, multitude, host; 5. Plenty, abundance; |
தொறு 2 | toṟu, n. <>தொழு-. 1. Slave; அடிமையாள். (பிங்). 2. Slavery; |
தொறு 3 | toṟu, part. A distributive suffix of place, time; தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.) |
தொறுத்தி | toṟutti, n. Fem. of தொறுவன். Shepherdess; இடைச்சி. தொறுத்தியர் திகைத்து நின்றார் (சீவக. 488). |
தொறுவத்து | toṟuvattu, n. Poison ball plant. நஞ்சுண்டான். (L.) |
தொறுவன் | toṟuva, n. <>தொறு1. Shepherd; இடையன். (திவா.) |
தொறுவி | toṟuvi, n. Fem. of தொறுவன். See தொறுத்தி. (சூடா.) . |
தொறுவிடம் | toṟu-v-iṭam, n. <>தொறு1+. Cattle-stall; மாட்டுத்தொழு. (பிங்.) |
தொறுவு 1 | toṟuvu, n. <>id. See தொறு1. (W.) தொறுவிலா னிளவேறு (தேவா. 628, 2). . |
தொறுவு 2 | toṟuvu, n. <>தொழு-. (W.) 1. See தொறு2. . 2. Work, trade. craft, occupation; |
தொன்மரம் | toṉ-maram, n. <>தொல்+. Common banyan, as the ancient tree; [பழமையான மரம்] ஆலமரம். பிங். தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன (சீவக. 498). |
தொன்மை | toṉmai, n. <>id. 1. Oldness, antiquity; பழமை. (திவா.) தொன்மை யுடையார் தொடர்பு (நாலடி, 216). 2. (Gram.) Narrative poem interspersed with prose, having for its subject an ancient story; |
தொன்மையோர் | toṉmaiyōr, n. <>தொண்மை. Ancients; பூர்வீகர். (W.) |
தொன்று | toṉṟu, n. <>தொல். 1. Oldness, antiquity; பழமை. தொன்று மொழிந்து தொழில் கேட்ப (மதுரைக் 72). 2. That which is old, ancient; 3. Fate, karma; |
தொன்றுதொட்டு | toṉṟu-toṭṭu, adv. <>தொன்று+. From of old, from time immemorial; அனாதிகாலமாய். தொன்றுதொட்டனாதி வித்தி னிடத்தினில். (சி.சி. 2, 10). |
தொன்னீர் | toṉṉīr, n. <>தொல்+நீர். Sea, as ancient; கடல். (பிங்.) |
தொன்னூல் | toṉṉūl, n. <>id.+நூல். 1. Purāṇas; புராணம். (சூடா.) 2. See தொன்னூல் விளக்கம். (W.) |
தொன்னூல்விளக்கம் | toṉṉūl-viḷakkam, n. <>தொன்னூல்+. A Tamil grammer by Beschi; வீரமாமுனிவர் செய்த தமிழிலக்கணநூல். |
தொன்னை | toṉṉai, n. [T. K. donne.] A cup made of plantain or other leaf pinned up at the corners; இலைக்கலம். செவிக்கனகத் தொன்னையாலுண்டு (சிவரக. சதானந்த. 2). கைக்கேயிலைகொண்டு தொன்னையுங் கொண்டு (தனிப்பா.). 2. Mean wretch; |