Word |
English & Tamil Meaning |
---|---|
தோகைகுழல் | tōkai-kuḻal, n. <>தோகை+. Seeta's thread. See அம்மையார்கூந்தல். (சங். அக.) |
தோகைப்பகை | tōkai-p-pakai, n. <>id.+. Chameleon, as the enemy of peacock; [மயிற்குப் பகை] ஒந்தி. (உரி. நி.) |
தோகைமஞ்ஞை | tōkai-maai, n. <>id.+. See தோகைமயில். துணையில் தோகைமஞ்ஞை (சீவக. 925). . |
தோகைமயில் | tōkai-mayil, n. <>id.+. Male peacock; ஆண்மயில். பேடுந் தோகைமயிலும் சேரவிருந்தன (சீவக. 65, உரை). |
தோகைமுகபூடணம் | tōkai-muka-pūṭaṇam, n. <>id.+. Turmeric, as used to beautify a woman's face; [பெண்ணின் முகத்தை அலங்கரிப்பது] மஞ்சள். (தைலவ. தைல.) |
தோசம் | tōcam, n. <>dōṣa. See தோஷம்1. தோசமறத் துதிகண் மனத்தோதி (சீவக. 1784). . |
தோசி | tōci, n. <>dōṣin. Unlucky person; துரதிருஷ்டம் பிடித்தவன். Loc |
தோசிக்கொக்கு | tōci-k-kokku, n. <>தோசி+. 1. Green heron, Butorides javanica; கொக்குவகை. 2. See தோசி |
தோசிலி | tōcili, n. See தோசிளி. . |
தோசிளி | tōciḷi, n. <>T. dōsili. Double handful of grain given as a perquisite to village servants (R. F.); ஊழியச் சுதந்திரமாகக் கொடுக்கும் இருகைத் தானியம். |
தோசை | tōcai, n. [T. K. dōse, M. dōša.] A kind of rice-cake; ஒருவகைப் பணிகாரம் வடைசுகியன் றோசை வகைகள் (விறலிவிடு.). |
தோசைக்கல் | tōcai-k-kal, n. <>தோசை+. Griddle, pan for baking tōcai, usually of iron; அடுப்பில் வைத்துத் தோசைசுடுங் கலம். |
தோசைக்காய் | tōcai-k-kāy, n. <>T. dōsa-kāya. Melon; வெள்ளரிவகை. Loc. |
தோசைகுத்து - தல் | tōcai-kuttu-,. v. intr. <>தோசை+. See தோசைவார்-. Loc. . |
தோசைசுடு - தல் | tōcai-cuṭu-, v. intr. <>id.+. See தோசைவார்-. Loc . |
தோசைதிருப்பி | tōcai-tiruppi, n. <>id.+. A kind of spit used to turn tōcai from one side to another and remove it from the griddle; கல்லில் வார்க்குந் தோசையைத் திருப்பியிடவும் எடுக்கவும் உதவுங் கருவி. |
தோசைவார் - த்தல் | tōcai-vār-, v. intr. <>id.+. To bake rice-cakes; தோசை சுடுதல். |
தோட்கட்டு | tōṭ-kaṭṭu, n. <>தோள்+. Shoulder-joint; தோட்சந்தி. தோட்கட்டும் குடமுழாவையொக்கும் தோள்களும் ஐராவதத்தின் கையையொக்கும் (சீவக. 1461, உரை). 2. Shoulder; |
தோட்காப்பு | tōṭ-kāppu, n. <>id.+. Armlet; தோள்வளை. |
தோட்கோப்பு | tōṭ-kōppu, n. <>id.+. Boiled rice tied up for a journey, as slung over the shoulder in walking; கட்டுச்சோறு. தோட் கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின் (நாலடி, 20). |
தோட்சுமை | tōṭ-cumai, n. <>id.+. 1. Burden carried on shoulder; தோளிற்றாங்கப்படும் சுமை. 2. See காவடி. (யாழ். அக.) 3. Pack, bundle; |
தோட்டக்கள்ளன் | tōṭṭa-k-kaḷḷa, n. <>தோட்டம்+. A bird destructive to garden plants; தோட்டப்பயிரை அழிக்கும் பறவைவகை. (J.) |
தோட்டக்காரன் | tōṭṭa-k-kāra, n. <>id.+. [K. tōṭagāṟa, M. tōṭṭakkāran.] 1. Gardener, husbandman; தோட்டம் பார்க்கும் வேலையாள். 2. Proprietor of a garden; |
தோட்டக்கால் | tōṭṭa-k-kāl, n. <>id.+. Garden lands watered by means of a well and rendered fit for the growth of vegetables, tobacco, fruit-trees, crops of grain; கேணிப்பாய்ச்சலுள்ள கொல்லை நிலம். (W. G.) |
தோட்டச்சம்பா | tōṭṭa-c-campā, n. <>id.+. A kind of reddish paddy; சம்பா நெல்வகை. Loc |
தோட்டப்பயிர் | tōṭṭa-p-payir, n. <>id.+. Garden vegetables; காய்கறிகள். Loc. |
தோட்டப்பைரி | tōṭṭa-p-pairi, n. <>id.+. A peregrine falcon; பைரிப்புள் வகை. |
தோட்டம் | tōṭṭam, n. <>தோள்-. [T. K. Tu. tōṭa, M. tōṭṭam.] 1. Garden, orchard, plantation படப்பை. வயலுந் தோட்டமும் (பெருங். உஞ்சைக். 39, 63). 2. Grove; 3. Backyard, enclosure; |