Word |
English & Tamil Meaning |
---|---|
தோடர் | tōṭar, n. The Todas of the Nilgiris. See துடவர். |
தோடலேசம் | tōṭa-lēcam, n. <>doṣa+lēša. A flaw in emerald giving the colour of a lotus leaf; தாமரையிலைநிறங் காட்டும் மரகதக்குற்றவகை. (திருவிளை. மாணிக். 68.) |
தோடலேசாஞ்சிதம் | tōṭa-lēcācitam, n. <>id.+. A flaw in emerald giving the colour of a lime; எலுமிச்சம்பழநிறங் காட்டும் மரகதக்குற்றவகை. (திருவிளை. மாணிக். 68.) |
தோடா | tōṭā, n. <>U. tōrā. 1. An armlet; கையணிவகை. 2. Gold bracelet, as a reward of merit; |
தோடாப்போடு - தல் | tōṭā-p-pōṭu-, v. intr. <>தோடா+. To present tōṭā, as to scholars in recognition of their merit; பண்டிதர் முதலியவர்க்கு அவர் திறமையறிந்து பொற்கங்கணம் பூட்டுதல். |
தோடாபவாதம் | tōṭāpavātam, n. <>dōṣa+apavāda. Sanctioning a wrong usage; வழுக்காக்கை. தோடாபவாதம் என்றுளது (பி. வி. 44, உரை). |
தோடாழ்குளம் | tōṭāḷ-kuḷam, n. <>தோள்+தாழ்+. A tank deep enough to immerse a person standing with outstretched hands; கையைக் கூப்பிமுழுகி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழக்கூடிய ஆழமுள்ள குளம். தோடாழ்குளத்த கோடுகாத்திருக்கும் (பெரும்பாண். 273). |
தோடி | tōṭī, n. <>U.tōdī. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (சிலப். 8. 35, உரை). |
தோடு | tōṭi, n. perh. தொடு-. 1. Palm leaf; ஒலை வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண்.353). 2. Ola roll worn in the perforation of the ear; 3. [M. tōṭa. (Mus.) Ear-jewel; 4. Flower petal; 5. Flower; 6. Sheath of grain; 7. Shell of a fruit, as of a wood-apple; 8. Collection, assemblage, crowd, cluster, bunch; 9. Round slice of fruit, used for curry; 10. Round moulding; |
தோடை 1 | tōṭai, n. perh. id. Produce of a single dive at a pearl-fishery; சலாபக்குளியில் ஒரு முழக்கிற் கிடைக்கும் சிப்பிகள். (w.) |
தோடை 2 | tōṭai, n. <>ஆடாதோடை. Malabar nut tree; See ஆடாதோடை. (மு.அ.) |
தோடை 3 | tōṭai, n. <>Sinh. tōdai. Different kinds of citrus, as lemons, citrons, oranges; கிச்சிலிவகை. (J.) |
தோடையம் | tōṭaiyam, n. See தோடயம் . |
தோண்டான் | tōṇṭāṉ, n. [T. tōdēlu.] Wolf ஓநாய். (சது.) |
தோண்டி 1 | tōṇṭi, n. cf. drōṇi. [M. toṇt] Pot of earth or metal, used for drawing water; தண்ணீர்க்கலவகை. |
தோண்டி 2 | tōṇṭi, n. 1. A species of sensitive plant See வறட்சுண்டி. (மலை.) 2. Indian globe thistle; |
தோண்டு - தல் | tōṇṭu-, 5 v. tr. <>தொள்-. [T. K. tōdu, M. tōṇṭuka, Tu. tōduni.] 1. To dig, hollow, excavate; அகழ்தல். 2. To scoop out, bore; 3. To draw or fetch water from a well; 4. To draw out details of; 5. To unload, as a ship; |
தோண்டுச்சால் | tōṇṭu-c-cāl, n. <>தோண்டு-+. A small channel to drain the excess water in a seed-bed; நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால். Loc. |
தோண்மாற்று - தல் | tōṇ-māṟṟu-, v. <>தோள்+. tr. To change from one shoulder to another, as a load; To exchange garlands, as bridegroom and bride. சுமையை ஒரு தோளினின்று மற்றொருதோளுக்கு மாற்றிகொள்ளுதல்.-intr. See மாலைமாற்று-. |
தோண்முதல் | tōṇ-mutal, n. <>id.+. See தோண்மை. மாண்முடிமன்னன் றோண்முதல் வினவி (பெருங். இலாவாண.9, 30). |
தோண்மேல் | tōṇ-mēl, n. <>id.+. Nape of the neck; பிடர். (திவா.) |
தோண்மை | toṇmai, n. <>id. Strength of one's arm; புயவலி. தோண்மையா லமர் தொலைத்து (பாரத. படை.10) |