Word |
English & Tamil Meaning |
---|---|
தோழ் | tōḷ, n. <>தொழு. Cattle-stall; பசுக்கொட்டில் ஊழிதொ றாவுந் தோழும்போன்று (சீவக.487). |
தோழப்பர் | tōḷappar, n. 1.A writer on the Smrtis; ஸ்மிருதி நிபந்தனையாசிரியருள் ஒருவர். 2. Dog, as man's friend; |
தோழம் 1 | tōḷam, n. <>தொழு. Cattlestall; மாட்டுத்தொழுவம். தோழத்திடைப் புகுந்தாள் (பிரமோத்.3, 14). |
தோழம் 2 | tōlam, n. prob. tōyam. Sea கடல். முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா. 88,23). [T. tōyamu.] . 2. A large number; |
தோழமை | tōḷamai, n. <>தோழன். [M. tōḷama.] Friendship, companionship; நட்பு தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா குகப்.15) |
தோழன் | tōḷan, n. perh. தொழு-. [M. tōḻan.] Friend, companion, intimate acquaintance, comrade; நண்பன். யானே தந்தை தோழன் (புறநா201). |
தோழி 1 | tōḷi, n. Fem. of தோழன். 1.A lady's maid; பாங்கி. நல்லவென் றோழி (திவ்.நாய்ச் 10, 10). 2. (Erot.) Heroine's confidante, being the daughter of her fostermother; 3. Wife; 4. Maidservant; |
தோழி 2 | tōḷi, n. cf.தோலி2. Gum lac; அரக்கு. (அக.நி.) |
தோழிச்சி | tōḷicci, n. <>தோழி1. See தோழி,1,2,3. தோழரெல்லாந் தோழிச்சியாக (பெருங். மகத.22,39) . |
தோழிப்பொங்கல் | tōḷi-p-poṅkal, n.<>id.+. Bride's procession on the fourth day of marriage, conducted by her maternal uncle; விவாகத்தின் நான்காநாள் அம்மானது செலவில் மணமகட்குமட்டும் நடத்தப்படும் ஊர்கோலம். Brāh. |
தோள்(ளு) 1 - தல் | tōḷ-, 9 v. tr. <>தொள்-. [K.tōdu.] 1.To perforate, bore through; துளைத்தல். கேள்வியாற் றோட்கப்படாத செவி (குறள், 418). 2. To dig out, scoop; 3. To remove; |
தோள் 2 | tōḷ, n. <>தோள்-. Hole, perforation; தொளை. (அக.நி.) |
தோள் 3 | tōḷi, n. <>dōs. [K.M. tōḷ, Tu. tōḷu.] 1.Shoulder; புயம். சிலைநவி லெறுழ்த்தோளோச்சி (பெரும்பாண். 145). 2.Arm; |
தோள்கொட்டு - தல் | tōḷ-koṭṭu-, v. intr. <>தோள்3+. To clap one's shoulders, as in defiance; வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல். தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள்கொட்டி (தேவா.689,10). |
தோள்கொடு - த்தல் | tōḷ-koṭu-, v. intr. <>id.+. 1. To take on one's shoulders, as the pole of a palanquin; சுமையைத் தாங்குதல். 2. To offer help in an emergency; |
தோள்சேர் - தல் | tōḷ-cēr-, v.intr. <>id.+. To embrace; தழுவுதல். |
தோள்தட்டு - தல் | tōḷ-taṭṭu-, v. intr. <>id.+. See தோள்கொட்டு-. . |
தோள்தீண்டி | tōḷ-tīṇṭi, n. <>id.+. That which comes close and destroys, as touching one's shoulders; நெருங்கி வருத்துவது. மரண மன்றோ தோள்தீண்டியாக வந்துநிற்கிறது (திவ்.திருமாலை, 6, வ்ய. பக்.34) |
தோள்தூக்குதல் | tōḷ-tukkutal, n. <>id.+. See தோளெடுத்தல். . |
தோள்நாடி | tōḷ-nāṭi, n. <>id.+. Subclavian artery; தோட்பக்கத்துள்ள சுத்த ரத்தக்குழாய் (M.L.) |
தோள்நாளம் | tōḷ-nāḷam, n. <>id.+. Subclavian vein; தோட்பக்கத்துள்ள அசுத்த ரத்தக் குழாய். (M.L.) |
தோள்படிகொள்(ளு) - தல் | tōḷ-paṭi-koḷ-, v.tr. <>id.+. To go a step further, proceed further; [தோளைப் படியாகக் கொள்ளுதல்] ஒன்றைப் பற்றாகக்கொள்ளுதல். கீழ்நின்ற நிலையையமைந்து மேலே தோள்படி கொள்ளுகிறார் (ஈடு, 1, 1, 1, பக் 11) |
தோள்மாற்று - தல் | tōḷ-māṟṟu-, v.tr. <>id.+. 1. To change from one shoulder to another, as a load; சுமையை ஒரு தோளினின்று மற்றொரு தோளுக்கு மாற்றுதல். 2. To relieve another in bearing a load; |