Word |
English & Tamil Meaning |
---|---|
ந் | n, . The eighth consonant, being the dental nasal; மெய்களுள் எட்டாவதான மெல்லெழுத்து. |
ந 1 | na. . The compound of ந் and அ. . |
ந 2 | na, part. A Particle A particle (a) denoting excellence, as நப்பின்னை நக்கீரன் நக்கடகம். சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். (நன், 420, மயிலை) (b) expressing abundance, excess; |
ந 3 | na, part. <>na. A particle denoting negative sense; எதிர்மறைப்பொருளில் வரும் ஒரிடைச்சொல். நமித்திரர் நடுக்குறும் (கம்பரா. திருவவ. 91) |
நக்கச்சூது | nakka-c-cūtu, n. <>நக்கன் +. Mean trick, sly device, as of a fox; (நரியின் சூது) நீசவஞ்சகம். Loc. |
நக்கசாரணர் | nakka-cāraṇar, n. <>nagna + cāraṇa. A tribe of Nāgas; நாகர்சாதிவகையினர். நக்கசாரணர் நாகர்வாழ்மலை (மணி. 16, 15). |
நக்கணி | nakkaṇi, n. Black honey thorn, s. sh., Canthium didymum; கருங்காரை வகை. (L.) |
நக்கத்தனம் | nakka-t-taṉam, n. (நக்கல் +. Miserliness, stinginess; உலோபம். Loc |
நக்கத்திரசீவகன் | nakkattira-civakaṉ, n. Prob. nakṣatra-jivaka. Son born of a Kṣatriya woman by a Brahmin in illicit intercourse; க்ஷத்திரியப்பெண் பிராமணனைச் சோரத்திற் கூடிப்பெற்ற மகன். மன்னவர் மகளிர் சோர மறையவற்கீன்ற சேய்க்கு, நன்னிலத்தவர் சொல்வார் நச்கத்திர சீவகப்பேர் (சூத. சிவமான். 12, 9) |
நக்கப்பறையன் | nakka-p-paṟaiyaṉ, n. perh. nagna+. Headman of the Paraiyas; பறையர் தலைவன் (G. Tp. D. I, 131.) |
நக்கபாரம் | nakkapāram, n. See நக்கவாரம் (யாழ். அக.) . |
நக்கபாரி | nakkapāri, n. See நக்கவாரி. (யாழ். அக.) . |
நக்கம் | nakkam, n. <>Pkt. nakka <> nagna. Nakedness; அம்மணம். நக்கம்வந்து பலியிடென்றார்க்கு (தேவா.91, 2.) |
நக்கரம் | nakkaram, n. <>nakra. Crocodile; முதலை. நக்கரக் கடற்புறத்து (கம்பரா, நட்புக்கோட். 68) |
நக்கரா | nakkarā, n. <>Arab. naqqāra. See நகரா. Loc. . |
நக்கரி - த்தல் | nakkari-, 11 v. intr. <>நகர்-(W.) To Shift along in a sitting posture, as a lame or sick person; நகர்ந்து செல்லுதல் To creep with difficulty, as a weak child, a wounded reptile; To be bedridden; To roll in bed; |
நக்கல் 1 | nakkal, n. <>நக்கு-. 1. Food taken by licking, one of aintuṇavu, q. v; ஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள். (பிங்.) 2. Electuary taken by licking with the tongue; 3. Boiled rice; 4. Leavings, Scrapings; 5. Eating 6. Touching 7. Miser; |
நக்கல் 2 | nakkal n. <>நகு-. 1. Laughing; சிரிப்பு. (சூடா) 2. Mockery; 3. Brightness, spledour; |
நக்கல் 3 | nakkal n. See நகல். Loc. . |
நக்கவரி | nakkavari, n. cf. நமக்காரி., Floating sensitive plant. (See வறட்சுண்டி. (சங். அக.) |
நக்கவாரக்கச்சவடம் | nakkavāra-k-kaccavaṭam, n. <>நக்கவாரம்+. Traffic in which trust and good faith do not find a place, as in the Nicobars, where trade with ready cash alone is in vogue (கைமேற் பணம்பெற்று நக்கவாரத்தீவினர் செய்யும் வியாபாரம்) நம்பிக்கையற்ற வியாபாரம். (W.) |
நக்கவாரப்படு - தல் | nakkavāra-p-paṭu-, v.intr. <>id.+. To be in pinching poverty, in straitened circumstances; மிக்க வறுமையடைதல் (W.) |
நக்கவாரப்பேச்சு | nakkavāra-p-pēccu, <>id.+. Talk betraying want of faith நம்பிக்கையற்ற பேச்சு. (W.) |
நக்கவாரம் | nakkavāram, n. 1. The Nicobar Islands in the Bay of Bengal; வங்காளக்குடாக்கடலில் உள்ள ஒரு தீவு. (யாழ். அக.) 2. Indigence; |
நக்கவாரம்பிடி - த்தல் | nakkavāram-piṭi-, v. ntr. <>நக்கவாரம்+. To become poor; வறுமையாதல். (W.) |