Word |
English & Tamil Meaning |
---|---|
நக்கேணி | nakkēṇi, n. cf. T. nakkēru. A kind of honey thorn, m. tr., Canthiumdidymum; காரைவகை. |
நக்த்ஜமாகர்சு | nakt-jamā-karcu, n. <>Arab. naqdi-jamā +. Account of cash receipts and disbursements; கஜானாச்சிட்டா. (C. G.) |
நக்தி | nakti, n. <>Arab. naqdi. Treasury; கஜானா (C. G. 145.) |
நக்திகுமாஸ்தா | nakti-kumāstā n. <>id. +. Treasury clerk, cash-keeper; கஜானா உத்தியோகஸ்தன் (C. G. 145.) |
நக்திசிட்டா | nakti-ciṭṭā n. <>id. + Hind.ciṭṭhā. Account showing cash receipts in a treasury; கஜானாவில் வருமானத்தைப் பதிவுசெய்யும் புஸ்தகம். (C. G. 145.) |
நக்ஷா | nakṣā, n. <>Arab. naqsha. Picture, Plan, Map படம். (C. G. 57.) |
நகக்கண் | naka-k-kaṇ, n. <>நகம்+. Root of the nail, terminal joint of a finger; நகமும் விரற்றோலுங் கூடுமிடம். |
நகக்கால் | naka-k-kāl, n. <>id. +. See நகக்கண். (யாழ். அக.) . |
நகக்காளான் | naka-k-kāḷāṇ, n. <>id.+. A kind of fungus believed to spring from nail parings; களைந்தெறிந்த நகத்தினின்று முளைப்பதாகக்கருதப்படும் காளான்வகை. (W.) |
நகக்குத்தன் | naka-k-kuttaṇ, n. <>id.+குத்து-. Barber; அம்பட்டன் (யாழ். அக.) |
நகக்குறி | naka-k-kuṟi, n. <>id.+. (Erot.) Nail marks, imprinted on the different parts of a woman's body during sexual union, six in number, viz., artta-cantiraṉ, maṇṭalam, puli-nakam, mayūra-patam, muyal-aṭi, uṟapalam; கலவிக்காலத்தில் மகளிர் அவயவத்தில் ஆடவர்நகத்தினாற்பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலி நகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என்ற அறுவகை அடையாளங்கள். (கொக்கோ) |
நகங்கிருதி | nakaṇkiruti n. <> nāhaṅkṟti. Humility, absence of pride and self-importance, one of seven puṇṇiyam, q.v.; புண்ணிய மேழனுள் அகங்காரமின்மையென்னுங் குணம். (W.) |
நகச்சிராய் | naka-c-cirāy n. <> நகம் +. Splintery fragment of a nail; நகத்தருகு கிழிந்த சிம்பு. (J.) |
நகச்சுற்று | naka-c-cuṟṟu n. <> id.+. [M. nakhacuṟṟu.] Whitlow, Perirnychsia; நகக்கண்ணில்வரும் புண் |
நகச்சூடு | naka-c-cūṭu n. <> id.+. Degree of heat of lukewarm water ; இளஞ்சூடு . (W.) |
நகச்சொத்தை | naka-c-cottai n. <> id.+. Decayed and deformed nail ; சிதைவுற்ற நகம் |
நகசிரிதம் | naka-ciritam n. <>naga+šrita. See குன்றி. (மூ. அ.) . |
நகட்டு - தல் | nakaṭṭu- 5 v. tr. <> நகர்த்து-. Colloq. 1. To push away, shove; இடம்விட்டுப் பெயரச்செய்தல். 2. To delay, procrastinate; 3. To thrash; 4. To pound, grind; 5. To eat up with avidity; |
நகடு | nakatu, n. Pale complexion; உடல் வெளுக்கை. மண்டின்று வந்த நகடுபோலன்றிறே ( ஈடு, 6, 2, ப்ர.). |
நகத் | nakat m. <> Arab. naqad. Ready money, cash; ரொக்கப்பணம் (C.G.) |
நகத்தயிர் | nakattayir, n. perh. nakha+ அயிர் Panicled bindweed; பூச்சர்க்கரைக்கிழங்கு (தைலவ. தைல.125.) |
நகத்துஜாமீன் | nakattu-jāmīṉ, n. <> Arab. naqad+. Cash security; ரொக்கஜாமீன். (C.G.) |
நகத்பாபு | nakat-pāpu, n. <> id.+ perh. Arab. bāb. A tax on tank fishery, on the houses of those not engaged in agriculture, and on coconut, mango and tamarind topes; மீன் பிடித்தல், விவசாயிகளல்லாதார் குடியிருப்பு, தென்னை மா புளி முதலியவுள்ள தோட்டம் இவற்றுக்கு விதிக்கப்படும் வரி. (R. T.) |
நகதா | nakatā, n. Imitation lace-thread; காக்காய்ச்சரிகை நூல். Loc. |
நகதி | nakati, n. <> U. naqdī Person having ready money; ரொக்கக்காரன். 2. Bullion, gold or silver in the mass; 3. Land revenue in money; 4. See நக்தி. (C. G.) |
நகதிபீசம் | nakatipīcam, n. Tiger-stopper; புலிதொடக்கி. (மூ.அ.) |
நகநந்தினி | naka-nantiṉi n. <>naga + nandinī. Parvati, as the daughter of the Himalaya mountain; (இமய பருவதத்தின் புத்திரி) பார்வதி. (யாழ்.அக.) |
நகநோக்கி | nakanōkki, n. Hedge-twiner. See வேலிப்பருத்தி. (சங். அக.) |