Word |
English & Tamil Meaning |
---|---|
நகரப்பதி | nakara-p-pati, n. <>id.+. Capital; தலைநகர். (திவா.) |
நகரப்பதிவாழ்நர் | nakara-p-pati-vāḻnar, n. <> நகரப்பதி+. 1.Inhabitants of a capital; தலைநகரில்வாழ்வோர். 2. Civilised persons; |
நகரம் 1 | nakaram, n. <> nagara. 1.City, town, capital, metropolis; பேரூர். (சூடா); 2. Palace; 3. Temple; 4. Residence, place; |
நகரம் 2 | nakaram, n. <> nakhara. See நகம் 1,2. (யாழ். அக.) . |
நகரம்பழம் | nakaram-paḻam, n. A kind of plantain; See நவரம்பழம். |
நகரமாக்கள் | nakara-mākkaḷ, n. <> நகரம் +. See நகரமாந்தர், 2. (பிங்.) . |
நகரமாந்தர் | nakara-māntar, n. <> id.+. 1. City people; நகரவாசிகள். 2. Chief citizens, one of eṇ-perun-tuṇaivar, q.v.; |
நகரமீன் | nakara-mīṉ, n. perh. நகரம் + cf. நகரை. Ring worn on the little toe by Parava women, one of eṇ-varṇam, q.v.; பரவமகளிரது ஐவர்ணவணியுள் காலின் சுண்டுவிரலில் பூணும் அணி வகை. Parav. |
நகரவரை | nakar-avarai, n. <> நகர்+. A kind of bean, Dolichos rugosus; அவரைவகை . (W.) |
நகரவிடுதி | nakara-viṭuti, n. <> நகரம்+. A lodging-place specially intended for Nāṭṭukkōṭṭai Cheṭṭies; நாட்டுக்கோட்டை நகரத்தார் வந்து தங்குவதற்காக ஏற்பட்ட கட்டடம். Nāṭ. Cheṭṭi. |
நகரவியக்கி | nakaraviyakki, n. cf. நகவியாக்கிரம். See புலி தொடக்கி. (சங். அக.) . |
நகரவிரம் | nakaraviram, n. cf. nagāvāsa. Peacock; மயில். (சங். அக.) |
நகரா | nakarā, n. <> U. naqārā. A large kettle-drum; பெருமுரசுவகை. நகரா முழங்க (கொண்டல்விடு. 508) |
நகராணம் | nakarāṇam, n. Seed; விந்து, (சங்.அக.) |
நகராமண்டபம் | nakarā-maṇṭapam, n. <> நகரா+. Kettle-drum stations established by Tirumalai Naik along the road from šrīvilliputtūr to his palace at Madura for announcing the completion of the worship of the Goddess at šrīvilliputtūr after which he would take his food; ஸ்ரீவில்லிபுத்தூர் நாய்ச்சியாருக்கு ஆராதனை முடிந்தபின் உண்பது என்ற விரதமுடைமையால் அதனை யறிவித்தற்காக அவ்வூரிலிருந்து மதுரைவரை நகராமுலம் செய்தி அறிவிக்குமாறு வழிநெடுகத் திருமலைநாயகரால் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள். |
நகராமுசி | nakarāmuci, n. Liver ; ஈரல் (சங்.அக.) |
நகரி 1 | nakari, n. <> nagarī 1.City, capital ; நகரம். (சூடா.) 2. Land belonging to Government; |
நகரி 2 | nakri, n. <>namaskārī. Indian worm-killer. See வறட்சுண்டி. (மலை.) |
நகரிகாவலர் | nakari-kāvalar, n. <> நகரி +. City watchmen; நகரக்காவலாளிகள். (W.) |
நகரிசோதனை | nakari-cōtaṉai, n. <> id.+. Nightly inspection of a city by its king incognito; அரசன் இரவில் வேற்றுருக்கொண்டு தன் நகரத்தைச்சுற்றிச் சோதனைபார்க்கை. Colloq. |
நகரிநிலம் | nakari-nilam, n. <> id. +. Unassessed cultivable land; தீர்வையில்லாத சாகுபடி நிலம். (R. T.) |
நகரிப்பழக்கம் | nakari-p-paḻakkam, n. <> id.+. Urban manners, urrbanity; நகரவாசிகளின் ஒழுக்கம். (W.) |
நகரிபகம் | nakaripakam, n. <> nagarī-baka. Crow; காகம். (மூ. அ.) |
நகரிமாக்கள் | nakari-mākkal, n. <> நகரி+. See நகரமாக்கள். (சூடா.) . |
நகரிவகம் | nakarivakam, n. See நகரிபகம். (யாழ். அக.) . |
நகரூடம் | nakarūṭam, n. cf. nakuṭa. Noise; ழக்கு. (சங்.அக.) |
நகரேகை | naka-rēkai, n. <> nakha+. (Erot.) See நகக்குறி. (யாழ். அக.) . |
நகரை | nakari, n. 1. Red mullet. See நவரை. (யாழ். அக.) 2. Red mullet. 3. Small lance-leaved olive-linden, m. tr., Elaocarpus amoonus; 4. A kind of rice; |
நகரோபாந்தம் | nakarōpāntam, n. <> nagarōpānta. Outskirts of a city; நகரெல்லை. (யாழ்.அக.) |