Word |
English & Tamil Meaning |
---|---|
நங்கைநாச்சி | naṅkai-nācci, n.<>நங்கை+ Lady of distinction; தலைவி. (W.) |
நச்சம்பச்சை | naccam-paccai, n. See நாவி (சங்.அக.) . |
நச்சம்பு | naccampu, n.<>நஞ்சு+அம்பு. Poisoned arrow; நுனியில் விஷந்தோய்க்கப்பட்ட அம்பு. (சங்.அக.) |
நச்சர் | naccar, n. A commentator on Tirukkuṟaḷ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் தருமர் மணக்குடையர் தாத்தர் நச்சர் (தொண்டை சத.40, மேற்) |
நச்சறுப்பாய்ஞ்சான் | naccaṟuppāycāṇ, n.<>நஞ்சு+அறு-+. See நச்சறுப்பான் (W.) . |
நச்சறுப்பான் | naccaṟuppāṇ, n.<>id.+id. Indian ipecacuanha, Tylophora astmatica; கொடிவகை. (W.) |
நச்சறை | naccaṟai, n.<>id.+. A storehouse of poison; நஞ்சுக்கிருப்பிடம் காமநாளினு - நஞ்சுதுய்த்தே னச்சறையாக (சீவக.2882) |
நச்சி | nacci, n.<>நச்சு-. Gossiping woman; விண்வார்த்தைபேசித் துன்புறுத்துபவள் |
நச்சிளி | nacciḷi, n. See நச்சினி.1. (சங்.அக.) . |
நச்சினார்க்கினியம் | nacciṉārkkiṇiyam, n.<>நச்சினார்க்கினியர். A commentary on Tolkāppiyam by Nacciṇārkkiṉiyar; தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் இயற்றியவுரை. விருத்தி நச்சினார்க்கினியமே (தனிப்பாடல். பத்துப்பாட்டு. பக்.30). |
நச்சினார்க்கினியர் | nacciṉārkkiṉiyar, n. A Brahmin of Bhāradvāja gōtra, native of Madura, probably of the 14th c., author of commentaries on Tolkāppiyam, Kalittokai and other ancient classics; உத்தேசம்14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் வசித்தவரும், பாரத்துவாச கோத்திரத்துப்பிறந்த அந்தணரும். தொல்காப்பியம் கலித்தொகை முதலிய பழையநூல்களுக்கு உரையியற்றியவருமான ஆசிரியர். |
நச்சினி | nacciṉi, n. 1.Ragi. See கேழ்வரகு. (மலை.) 2.Fourth month, a slang of physicians; |
நச்சினியட்டிக்கை | nacciṉiyaṭṭikkai, n. 1.A kind of grass, as Synodon gracilic, Synodon virgalus; புல்வகை. 2.A species of millet, Cynosurus retroflexus; |
நச்சு - தல் | naccn-, 5 v.tr. [K.naccu.] To desire, long for, like, love; விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004). |
நர்சு | naccu, n.<>நச்சு-. [K. naccu.] 1.Desire, hankering, liking; ஆசை. (சூடா.) 2.Desired object; |
நச்சு - தல் | naccu-, 5 v.cf. நை-. [T.natccu.] intr. To babble, prate; அலுப்புதல். சதநச்சிக் கொண்டிருக்கிறான். -tr. To tease, vex, trouble, harass; தொந்தரை செய்தல். சதா என்னை நச்சாதே. |
நச்சு 1 | naccu, n.<>நச்சு-. 1.Trouble worry; தொந்தரை Colloq. 2.Babble; 3.Delay, procrastination; |
நச்சு 2 | naccu, adj.<>T.natjju. Little, small சிறிய. (w.) |
நச்சுக்கண் | naccu-k-kan, n.<>நஞ்சு+. The evil eye; கொடும்பார்வை (w.) |
நச்சுக்கத்தி | naccu-k-katti, n.<>id.+. 1.Poisoned knife; நஞ்சூட்டிய கத்தி. 2.A wicked person; |
நச்சுக்காற்று | naccu-k-kāṟṟu, n.<>id.+. Unhealthy wind, noxious air, விஷக்காற்று. |
நச்சுக்குருவி | naccu-k-kuruvi, n.<>id.+. Bad fellow; தீயோன் Loc. |
நச்சுக்குழல் | naccu-k-kuḷal, n,<>நச்சு+.(w.) 1.Long tube for shooting birds. See சுங்குத்தான்குழல். 2.Telescope; |
நச்சுக்கொட்டை | naccu-k-koṭṭai, n.<>நச்சு+. Lettuce tree. See இலச்சைகெட்டமரம். Madr. |
நச்சுக்கொடி | naccu-k-koṭi, n.<>நஞ்சு+ See நஞ்சுக்கொடி. (W.) . |
நச்சுக்கொடிச்சுண்ணம் | naccu-k-koṭi-c-cuṇṇam, n.<>நச்சக்கொடி+. A medicinal powder prepared from the after-birth, used in chollera; நஞ்சுக்கொடியால் செய்யப்பட்டதும் விஷபேதி நீங்கக் கொடுக்கப்படுவதுமாகிய சூரணம். (W.) |
நச்சுக்கௌளி | naccu-k-kauḷi, n.<>நஞ்சு+. See நச்சுப்பல்லி, 2.Nāṅ. . |
நச்சுச்சொல் | naccu-c-col, n.<>id.+.(w.) 1.(Poet.) Inauspicious words to be avoided in a poetic composition; செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல். 2.Malicious language; |