Word |
English & Tamil Meaning |
---|---|
நச்சுத்தானம் | naccu-t-tāṉam, n.<>id.+sthāna. (Erot.) Parts of a woman's body which, if touched by men on certain days are supposed to excite a feeling of disgust; சிற் சில காலங்களிற் புருடர் தொட மகளிர்க்கு வெறுப்புண்டாக்கும் உடலுறுப்பு. (கொக்கோ.) (சங்.அக.) |
நச்சுநச்செனல் | naccu-nacceṉal, n.<>நச்சு-. Expr. signifying (a) importuning, teasing, troubling; தொந்தரவு செய்தல் குறிப்பு (b) smacking, as the lips; tapping, as with the fingers; (c) chirping of the lizard. |
நச்சுப்படைக்கலம் | naccu-p-paṭai-k-kalam, n.<>நஞ்சு+. Poisoned weapon நஞ்சு தோய்க்கப்பட்ட ஆயுதம். (W.) |
நச்சுப்பல் | naccu-p-pal, n.<>id.+. 1. Poisonous fangs of a serpent, four in number, viz., kāḷi, kāḷātliri, yamaṉ, yamatūti; காளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் பாம்பின் விஷப்பற்கள். (சீவக. 1288, உரை.) 2.Venomous tooth, as of one whose imprecations are believed to take effect; |
நச்சுப்பல்லி | naccu-p-palli, n.<>id.+. 1.A spotted wall-lizard whose excrement is used in witchcraft பில்லிசூனியத்தில் உபயோகித்தற்குரிய எச்சத்தையிடுவதும் புள்ளிகொண்டதுமான பல்லிவகை. (w.) 2.The chirp of a lizard which is supposed to prognosticate evil; 3.A woman having an evil tongue; |
நச்சுப்பார்வை | naccu-p-pārvai, n.<>id.+. 1.Amorous looks, ogling மோகப்பார்வை. (J.) 2.Evil look ; 3,Angry look; |
நச்சுப்பால் | nāccu-p-pāl, n.<>id.+. 1.Spurge milk; கள்ளிப்பால் 2.Beestings; 3.Milk that does not agree with the young; |
நச்சுப்பிச்சு | naccu-p-piccu, n.Redupl.of நச்சு. Colloq. 1.Ceaseless trouble; ஓயாத்தொந்தரவு. 2.Incessant chattering; |
நச்சுப்புகை | naccu-p-pukai, n.<>நஞ்சு+. Poisonous smoke or fumigation from burning poisonous reptiles or vegetables விஷப்பிராணி முதலியவற்றை எரிப்பதால் உண்டகும் விஷப்புகை. (W.) |
நச்சுப்புல் | naccu-p-pul n.<>id.+. A kind of poisonous grass or herb உண்டார்க்கு நோய் விளைக்கும் புல் பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர் (நான்மணி.33. உரை) |
நச்சுப்பொடி | naccu-p-poṭi, n.<>நச்சு+. Small fish சிறுமீன். (W.) |
நச்சுப்பொய்கை | naccu-p-poykai, n.<>நஞ்சு+. A tank of poisonous water நஞ்சுநீர் நிறைந்த நீர்நிலை. நச்சுப்பொய்கைச் சருக்கம் (பராத) |
நச்சும்பிச்சும் | naccum-piccum n.Redupl.of நச்சு. Insignificant things, trifles அற்பக் காரியங்கள் (W.) |
நச்சுமரம் | naccu-maram, n.<>நஞ்சு+. Poisonous tree எட்டி முதலிய விஷமரங்கள் நடுவூரு ணச்சுமரம் பழுத்தற்று (குறள்.1008) |
நச்சுமழை | naccu-maḷai, n.<>நச்சு+. 1.Continuous drizzle; விடாத சிறுதூறல் 2.Unhealthy or injurious rain, being untimely; |
நச்சுமனார் | naccumaṉār, n. A poet of the last sangam கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (வள்ளுவமா.45) |
நச்சுவலை | naccu-valai, n.perh. நச்சு+. A fishing net ஒருவகை மீன் வலை. Parav. |
நச்சுவாக்கு | naccu-vākku, n.<>நஞ்சு+. Malignant, evil words விஷவாக்கு (w.) |
நச்சுவாய் 1 | naccu-vāy, n.<>id.+. Mouth of one whose imprecations are believed to take effect கேடுவிளைக்கும் வாய் (W.) |
நச்சுவாய் 2 | naccu-vāy, n.<>id.+. See. நச்சுவாயன். Colloq. . |
நச்சுவாயன் | naccu-vāyaṉ, n.<>நச்சுவாய். Babbler, talkative man ஓயாமற் பிதற்றுபவன். நச்சுவாயன் வீட்டிலே நாறுவாயன் பெண்கொண்டது போல் (பழ.). |
நச்சுவிறகு | naccu-viṟaku n.<>நஞ்சு+. Poisonous fuel, used in witchcraft; பில்லிசூனியத்தில் உபயோகப்படும் விஷவிறகு (யாழ்.அக) |
நச்சுவேலை | naccu-vēlai, n.<>நச்சு+. Work causing worry; troublesome piece of work தொந்தரவை உண்டாக்கும் வேலை. Colloq. |
நச்சுளி | naccuḷi, n.prob.நச்சு A small sea-fish, Opisthognathus rosenbergii; சிறு கடல் மீன்வகை. |