Word |
English & Tamil Meaning |
---|---|
நட்டுக்குநடுவே | naṭṭukku-naṭuvē, n.adv.<>நட்டு4+. Exactly in the middle ; நடுமத்தியில். (யாழ். அக.) |
நட்டுச்சி | naṭṭucci, n.<>நடு + உச்சி. The time of the day when the sun is exactly at the zenith ; உச்சிப்பொழுது. Colloq. |
நட்டுச்சினை | naṭṭu-c-ciṉai, n.<>நண்டு+. Crab's egg ; நண்டுமுட்டை. (யாழ். அக.) |
நட்டுச்சினைக்கல் | naṭṭu-c-ciṉai=-k-kal, n. <>நட்டுச்சினை+. A kind of stone at the bottom of wells, of the colour of crab's spawn, supposed to indicate a good supply of water ; நீரூற்றின் மிகுதியை குறிப்பதும் நண்டுமுட்டையின் நிறமுடையதுமான கிணற்றுக் கல்வகை. (யாழ். அக.) |
நட்டுச்சினைமண் | naṭṭu-c-ciṉai-maṇ, n.<>id.+. A kind of earth of the colour of crab's spawn ; நண்டுமுட்டை நிறமுள்ள மண். (W.) |
நட்டுமுட்டு | naṭṭu-muṭṭu, n.<>நட்டு2+. 1. Music and dancing; ஆடல்பாடல். (W.) 2. Hand-drummer and cymbalist; 3. Accessories necessary to the art of dancing; |
நட்டுமுட்டுக்காரர் | naṭṭu-muṭṭu-k-kārar, n.<>நட்டுமுட்டு +. Dancing masters and drummers ; நட்டுவ மேளகாரர். |
நட்டுவக்காலி | naṭṭuvakkāli, n. See நட்டுவாய்க்காலி. (w.) . |
நட்டுவம் | naṭṭuvam, n.<>naṭa-tva. [T. naṭṭuva.] The profession of training dancing girls and directing their dancing ; நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில். |
நட்டுவன் | naṭṭuvam, n.<>நட்டுவம். [T. naṭṭuvudu, K. naṭṭuva, M. naṭṭuvan.]. One who instructs dancing-girls in dancing ; நாட்டிய மாட்டுவிப்போன். உயிரையெல்லா மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல் (திருவாத.பு. புத்தரை. 75). |
நட்டுவாக்காலி | naṭṭuvākkāli, n. See நட்டுவாய்க்காலி. . |
நட்டுவாக்கிளி | naṭṭuvākkiḷi,. n. See நட்டுவாய்க்காலி. Loc. . |
நட்டுவாங்கம் | naṭṭuvāṅkam, n. See நட்வம். Nā. . |
நட்டுவாய்க்காலி | naṭṭu-vāy-k-kāli, n.<>நண்டு + வாய் + கால்1 [M.naṭyakāli.] Scorpion of larger kind ; கவ்விக்கொட்டுந் தன்மையுள்ள விஷசெந்துவகை. |
நட்டுவாற்காலி | naṭṭuvaṟkali, n. See நட்டுவாய்க்காலி. . |
நட்டுவிழல் | naṭṭu-viḻal, n. <>நடு-+. [T. naṭṭādu.] 1. Slanting position of the head, one of five mey-k-kuṟṟam , q.v. ; மெய்க்குற்றமைத் தனுள் தலைசாய்கை. (பிங்.) 2. Standing on the head and tumbling; performing somersault; |
நட்டுவிழு - தல் | naṭṭu-viḻu-, v. intr. <>id.+. To be haughty ; செருக்குறுதல். ஏன் வீணாக நட்டு விழுகிறாய். Colloq. |
நட்டுவை - த்தல் | naṭṭu-vai-, v. tr. <>id.+ . 1. To plant, as saplings ; மரக்கன்று முதலியவற்றை நடுதல். 2. To establish, as a family ; |
நட்டுவைத்தவன் | naṭṭu-vaittavaṉ, n.<>நட்டுவை-. Protector, guardian ; ஆதரித்தவன். Colloq. |
நட்டுவைத்தெலும்பு | naṭṭu-vaittelumpu, n.<>நட்டு + வைத்த + எலும்பு. Thigh bone, femur ; துடைப்பக்கத்தெலும்பு. |
நட்டோட்டுக்கிட்டம் | naṭṭōṭṭu-k-kiṭṭam, n.<>நட்டோடு +. Crust or coat of dry mud formed over a brackish or moist soil ; சேற்றின் மேல் உலர்ந்திருக்கும் மண்பெருக்கு. (W.) |
நட்டோட்டுப்பார் | naṭṭōṭṭu-p-pār, n. <>id.+. Thin coat or lamina of rock that easily splits off ; எளிதிற் பெயர்ந்துவரும் பாறைத் தகடு. (W.) |
நட்டோடு | naṭṭōṭu, n.<>நண்டு + ஓடு. Lobster shell ; நண்டின் மேலோடு. (W.) |
நட்டோர் | naṭṭōr, n.<>நள்-. 1. Friends ; நண்பர். நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலையே (பதிற்றுப். 63, 3). 2. Relations ; |
நட்பாடல் | naṭpāṭal, n.<>நட்பு + ஆள்-. Befriending ; சினேகிக்கை. நட்பாட றோற்றாதஉர் (குறள், 187). |
நட்பாராய்தல் | naṭpārāytal, n.<>id.+. Scrutiny in the choice of friends ; நட்புக்குரியாரை ஆராயுந்திறம். (குறள், அதி. 80). |
நட்பாளர் | naṭpāḷar,. n.<>id.+. 1. Friends; உற்ற நண்பினர். 2. Confidant of a king, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.; |
நட்பு | naṭpu, n. <>நள் [K.naṇpu.] 1. Friendship, amity; சினேகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253). 2. Allies, one of six irācāṅkam, q.v.; 3. Friend; 4. (Astrol.) Friendly aspect of a planet, one of five kiraka-nilai, q.v.; 5. Relationship, kinship; 6. Relation, kindred; 7. The 4th string of a lute; 8. Bribe; 9. Reconciliation with enemy kings; 10. Love; |