Word |
English & Tamil Meaning |
---|---|
நடி 2 | naṭi, n.<>நடி-. Dancing; ஆட்டம். நடிகொ ணன்மயில்சேர் திருநாரையூர் (தேவா. 216, 5). |
நடி | naṭ, n. <>naṭī Dancing-girl ; நாட்டியப்பெண். (திவா.) |
நடு - தல் | naṭu-, 6 v. tr. [T. nāṭu, K. nadu, M. naṭuka, Tu. nadpini.] 1. To set up, as a pilar, a pole, a mast; to plant, set; ஊன்றுதல் நடவந்த வுழவரிது நடவொணாவகை பரலாய்த்தென்று (தேவா.133, 8). 2. To place; 3. To establish, as fame ; |
நடு 1 | naṭu, n. [t. nadumu, K. Tu. nadu, M. naṭu.] 1. Middle; இடை நடுவூரு ணச்சுமரம் பழ்உத்தற்று (குறள், 1008). 2. Centre; 3. That which; is intermediate, as in place or time; that which intervenes; 4. Zenith, topmost part of the heavens; 5. God as immanent Being; 6. Waist; 7. Impartiality, uprightness; 8. Equity, justice; 9. Medium, moderation; 10. Lawsuit; 11. Earth; |
நடுக்கட்டு 1 - தல் | naṭu-kaṭṭu-, v. tr. <>நடு +. To sequestrate property; உடைமையைப் பொதுக்கட்டுதல். (J.) |
நடுக்கட்டு 2 | naṭu-k-kaṭṭu-, n.<>id. +. 1. Girdle ; அரைக்கச்சை. 2. Middle portion of a large house ; |
நடுக்கண்டம் | naṭu-k-kaṇṭam, n.<> id.+ கண்டம்=(W.)3. 1. Middle piece ; மத்தியத்துண்டு. 2. Central portion of a continent ; |
நடுக்கம் | naṭukkam, n.<>நடுங்கு-. 1. Trembling, shaking, quaking, shivering; நடுங்குகை மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு.220). 2. Agitation, trepidation, great fear; 3. Distress; 4. Dizziness, giddiness; |
நடுக்கல் | naṭukkal, n.<>நடுங்கு-. 1. See நடுக்கம், 1. . 2. See நடுக்குவாதம். (W.) |
நடுக்கல்வாதம் | naṭukkal-vātam, n.நடுக்கல். +. See நடுக்குவாதம். (யாழ்.அக.) . |
நடுக்கற்காய்ச்சல் | naṭukkaṟ-kāyccal, n.<>id.+. See நடுக்கற்சுரம். (யாழ்.அக) . . |
நடுக்கற்சுரம் | naṭukkaṟ-curam, n. , id.+. Malarial fever, ague ; குளிர்சுரம். (யாழ.அக.) |
நடுக்காரன் | naṭu-k-kāraṉ, n.<>நடு+. [M. naṭukkāran. Arbitrator, umpire ; மத்தியஸ்தன். (J.) |
நடுக்கிளி | naṭu-k-kiḷi, n.<>id.+. 1. Player standing on the border lines of the square to defend it in the game of kiḷittaṭṭu ; கிளித்தட்டில் கோட்டில்நின்று கிளியை தடுப்பவன். 2. The captain in kiḷitta ṭu; |
நடுக்கு 1 - தல் | naṭukku-, 5 v. intr. <>நடுங்கு-. To shiver, tremble; நடுங்குதல். எனக்கு உடல் நடுக்கிறது. |
நடுக்கு 2 - தல் | naṭukku-, 5 v. tr. caus. of நடுங்கு-. 1. To shake, cause to quiver; நடுங்கச் செய்தல். குளிர் உடலை நடுக்குகின்றது. 2. To cause dizziness or sickness, as betel, tobacco; |
நடுக்கு 3 | naṭukku, n.<>நடுக்கு1-. 1. See நடுக்கம். முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ (புறநா.2). . 2. Mental agitation; |
நடுக்குசன்னி | naṭukku-caṉṉi, n.<><> id.+ சன்னி1. A disease of the spinal cord, Locomotor ataxia ; அடிக்கடி தூக்கிப்போடுஞ் சன்னிவகை . |
நடுக்குடி | naṭu-k-kuṭi, n.<>நடு +. 1. A family of middling circumstances or rank; நடு நிலைமையிலுள்ள குடும்பம். 2. The leading family of a tribe or class; 3. House in the centre of a village ; |
நடுக்குத்துக்கால் | naṭu-k-kuttu-k-kāl, n. <>id.+. King-post, vertical post set on a horizontal beam connecting the two walls to support ridge pieces ; மோட்டுவளையைத் தாங்க உத்தரத்தின்மேற் பதிக்கப்பட்ட நடுக்கால் . Colloq. |
நடுக்குப்பக்கவாதம் | naṭukku-p-pakka-vātam, n. <>நடுக்கு1-+pakṣa-vāta. See நடுக்குசன்னி . . |
நடுக்குவாதம் | naṭukku-vātam, n. <>id.+. Shaking palsy ; உதறுவாதம். (யாழ்.அக). |
நடுக்குறு - த்தல் | naṭukkuṟu-, v. tr. <>id.+. [K. nadugisu.]. To cause to tremble ; நடுங்கச் செய்தல் நெஞ்சு நடுக்குறூஉ நெய்த லோசையும் (மணி6, 71) |