Word |
English & Tamil Meaning |
---|---|
நடுக்கேள் - தல்[நடுக்கேட்டல்] | naṭu-k-kēḷ-, v. tr. <>நடு +. 1. To near arguments of litigants in a suit; வழக்கு விசாரித்தல். 2. To refer a case for decision; |
நடுக்கொண்டவீடு | naṭu-k-koṇṭa-vīṭu, n.<>id.+. Middle house ; மத்தியிலுள்ள வீடு. (J.) |
நடுகல் | naṭu-kal, n.<>நடு-+. Memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements ; போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமொழூதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடுந்சிலை காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகள் (தொல்.பொ.60) . |
நடுகலுழலை | naṭu-kal-uḻalai, n.<>id.+ கல்+. A pound provided with a stile ; நட்ட கற்களின் துளைகளில் முங்கிற்கழிகளையிட்டுப் பசுக்களை அடைத்துவைக்கும் இடாம். |
நடுகூலி | naṭu-kūli, n.<>id.+. Wages for transplanting ; நாற்று நட்ட கூலி. |
நடுகை | naṭtukai, n.<>id. Transplanting of seedlings ; நாற்றுநடாவு . |
நடுங்க | naṭuṅka, part. A particle of comparison ; ஒரு உவமவுருபு. (தொல்.பொ.286) . |
நடுங்கநாட்டம் | naṭuṅka-nāṭṭam, n.<>நடுங்கு +. Theme in which the maid, narrating a fictitious accident to make the heroine tremble for her lover's safety, seeks an open avowal of her clandestine marriage ; தலைவனுக்கு ஏதமுளதோ என்று தலைவி ஐயுற்று நடுங்கு மாற்றால் தோழி அவளிடஞ் செய்தியொன்று கூறிக் களவொழுக்கத்தை அவள் வாயிலகவே அறிய முயல் வதைச் கூறுந் துறை (திருக்கோ.70, உரை) . |
நடுங்கல் | naṭuṅkal, n.<>id. Dread, fear ; அச்சம் அவனைக்ண்டால் இவனுக்கு நடுங்கல்தான் . |
நடுங்கலன் | naṭuṅkalaṉ, n.<>id. One suffering from shaking palsy ; நடுக்கல்வாதக் காரன். (J.) |
நடுங்கு - தல் | naṭuṅku-, 5 v. intr. [T. naduku, K. nadugu, M. nadungu, Tu. naduguni,] 1. To shake, shiver, quiver; அசைதல் வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப், 20, 53). 2. To tremble through fear; to be agitated; 3. To stutter, falter, waver; 4. To lose heart; 5. To quake, as the earth; 6. To be anxious, apprehensive; 7. To nod one's head as a sign of appreciation; 8. To be similar ; |
நடுச்சாமம் | naṭu-c-cāmam, n.<>நடு + yāma. 1. Middle or third watch from midnight to 3 A. M; மூன்றஞ்சாமம். 2. Midnight; |
நடுச்சாலை | naṭu-c-cālai, n. prob. id.+. A kind of mango ; ஒருவகை மாம்பழம் . Loc. |
நடுச்சுவர் | naṭu-c-cuvar, n.<>id.+ [M. naṭuccuvar.] Partition wall ; மத்தியச்சுவர் . |
நடுச்செய் - தல் | naṭu-c-cey-, v. intr. <>id.+. To render justice, to decide justly ; நியாயஞ் செய்தல். திரம தாட்நடுச் செய்யுஞ் செங்கோலினான் (குற்றா.தல மந்தமா.96). |
நடுச்சொல்(லு) - தல் | naṭu-c-col-, v. intr. <>id.+. 1. To decide a case; தீர்மானஞ்செய்தல். Colloq. 2. To mediate; 3. To render justice; 4. To bear witness ; |
நடுச்சொல்வார் | naṭu-c-colvār, n.<>நடுச்சொல்-. Those who bear witness or testify ; சான்று கூறுவோர். (பழ.148. உரை) (பிங்) . |
நடுத்தரம் | naṭu-t-taram, n.<>நடு + தர [M. naṭuttaram, Tu. nadutara. ]. Middling sort; that which is middling ; மத்தியநிலை நடுத்தர மான ஆள் . |
நடுத்தரயவம் | naṭuttarayavam, n.<>நடுத்தரம். A measure of weight equivalent to the weight of 6 seeds of white mustard ; வெண்கடுகு ஆறு கொண்ட தொரு நிறையலவை. (சங்.அக.) |
நடுத்தலை | naṭu-t-talai,. n.<>நடு+. 1. Crown of the head ; உச்சந்தலை. (W.) 2. Central place ; |
நடுத்திட்டம் | naṭu-t-tiṭṭam, n.<>id.+. Justness, impartiality ; பட்சபாதமின்மை உண்மை நடுத்திட்டமே யுரைக்கு நாவான் (பணவிடு.13) . |
நடுத்தீர்ப்பு | naṭu-t-tīrppu, n.<>id.+. 1. Just decision; நியாயத்தீர்மானம். 2. Divine judgement, as pestilence, etc.; 3. Final judgment, as at the judgment day ; |