Word |
English & Tamil Meaning |
---|---|
நடுப்பெற | naṭu-p-peṟa, adv. In the middle, in the centre ; மத்தியில். |
நடுப்பேசு - தல் | naṭu-p-pēcu-, v. intr. <>id.+. To plead for; to advocate a cause ; ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல் . |
நடுப்போக்கு - தல் | naṭu-p-pōkku-, v. intr. <>id. +. To make a just decision ; நியாயந் தீர்த்தல். (யாழ்.அக.) |
நடுப்போர் | naṭu-p-pōr, n. prob. நடுப்பெற. Middle of a work, of an operation, or of an affair ; காரியத்தினிடை . (J.) |
நடுமத்தி | naṭu-matti, n.<>id.+. See நடுமையம்.1. Colloq. . |
நடுமதியம் | naṭu-matiyam, n.<>id.+. madhya See நடுப்பகல். . |
நடுமையம் | naṭu-maiyam, n.<>id.+. 1. Middle, centre ; See நடுமத்தி. 2. Zenith, meridian ; |
நடுராசி | naṭu-rāci, n.<>id.+. Middling sort; that which is middling or moderate, as in quality or size ; நடுத்தரம் . (W.) |
நடுவண் | naṭuvaṇ, adv. <>id.[K. naduvaṇa.]. In the centre ; இடையில் நடுவ ணைந்திணை நடுவண தொழிய (தொல், பொ.2) . |
நடுவத்தசாமம் | naṭu-v-atta-cāmam, n. <>id.+ arddha-yāma. Midnight ; நள்ளிரவு . |
நடுவத்தொருசாமம் | naṭuvattoru-cāmam, n. <>id.+. See நடுவத்தசாமம். . |
நடுவதுபாதியில் | naṭuvatu-pātiyil, n.<>id.+. After half the function is over ; பாதி முதிந்தபிறகு நடுவதுபாதியிலே வந்தான் . (W.) |
நடுவயது | naṭu-vayatu, n.<>id.+. Middle age ; இளமைக்கும் மூப்புக்கும் இடையிலுள்ள பருவம் . |
நடுவழி | naṭu-vaḻi, n.<>id.+. 1. Middle of a journey ; பிரயாணத்தின் மத்தி. Colloq. 2. See நடுப்பாதை. |
நடுவறு - த்தல் | naṭu-v-aṟu-, v. tr. <>id.+. 1. To judge, as an umpire; to decide; வழக்குத் தீர்த்தல். (W.) 2. To hear the contentions of both parties to a suit; |
நடுவறுத்தான் | naṭu-v-aṟuttāṉ, n.<>id.+. Spreading hogweed ; See மூக்கிரட்டை. (யாழ்.அக) . |
நடுவன் | naṭuvaṉ, n.<>id. 1. Yama, as the just awarder of rewards and punishments; இயமன் நடுவன் மேல்வர (பெருங். உஞ்சைக் 53, 70). 2. Judge, arbiter; 3. Umpire ; |
நடுவனாள் | naṭuvaṉāl, n.<>நடுவன் + நாள். The second nakṣatra. பரணி நடுவனாட் சித்திரைத்திங்க ணகையம்புலியின் வளர்பக்கம் (வேதாரணி.விசுவா.மேனகை.68) . |
நடுவாந்தரம் | naṭuvāntaram, n.<>நடு + antara, adv. 1. Incidentally; காரியத்தினிடையில் நடுவாந்தரத்திலே கிடைத்தது. 2. By chance; unexpectedly; 1. Mid-region; 2. Helpless condition ; |
நடுவான் | naṭuvaṉ, n.<>id. Colloq. See நடுவிலான் . |
நடுவிரல் | naṭu-viral, n.<>id. +. [M. naṭu-viral.] Middle finger ; ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல் . |
நடுவிலவன் | naṭuvilavaṉ, n.<>id. [M. naṭuvilavan.]. See நடுவிலான். . |
நடுவிலான் | naṭuvilāṉ, n.<>id. Middle son ; புத்திரர்களுள் நடுவுள்ளவன். |
நடுவீட்டுத்தாலி | naṭu-vīṭṭu-t-tāli, n.<> id.+. The name given to the re-marriage of a widow among s, as taking place inside a house without much publicity ; விதவாவிவாகத்துக்கு வன்னியர் வழங்கும் பேர். |
நடுவீடு | naṭu-vītu, n.<>id.+. 1. Middle or interior of a house, where an idol is kept for worship; பூசைக்குரிய உள்வீடு. 2. Dining room; 3. A house in a respectable quarter in the heart of a village ; |
நடுவீதியில்விடு - தல் | naṭu-vītiyil-viṭu-, v. tr. <>id.+ வீதி +. See நடுத்தெருவில்விடு . Colloq. . |
நடுவு | naṭuvu, n.<>id. [T. nadumu. K.naduvu.]. 1. Middle, that which is intermediate; இடை. 2. Impartiality, uprightness; 3. Justice; (W.) 4. Loins or waist, especially of a woman ; |
நடுவுநிலை | naṭuvu-nilai, n.<>நடுவு +. 1. Equity, justice, strict neutrality, impartiality; பட்சபாதமின்மை. (குறள், அதி.122) 2. The sentiment of tranquillity; |