Word |
English & Tamil Meaning |
---|---|
நடுவுநிலைத்திணை | naṭuvu-nilai-t-tiṇai, n.<>id.+. (Akap) The desert tract ; பாலைத் திணை நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனிலொடு (தொல்.பொ.9) . |
நடுவுநிலைமை | naṭuvu-nilaimai, n.<> id.+. 1. See நடுநிலை. நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் (நாலடி, 131). . 2. Steadfastness, equanimity; 3. Fairness, uprightness ; |
நடுவுபாடு | naṭuvu-pāṭu, n.<>id.+. Middle region, central place ; மத்தியப்பிரதேசம் பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணைநயிற் பள்ளிகொள்ளும் (திவ்.பெருமாள்.1, 11) . |
நடுவுள்ளவன் | naṭu-v-uḷḷavaṉ, n.<>நடு+. See நடுவிலான் . Colloq. . |
நடுவூர் | naṭu-v-ūr, n.<>id.+. Heart of a town ; ஊரின்ந் நடுவிடம் நடுவூரு ணச்சுமரம் பழுத் தற்று (குறள்.1008) . |
நடுவெலும்பு | naṭu-v-elumpu, n.<>id.+. Nā Backbone ; முதுகெலும்பு (யாழ்.அக.) |
நடுவெழுத்து | naṭu-v-eḻuttu, n.<>id.+. 1. Document-writer; பத்திரமெழுதுபவன். 2. An offical whose duty was to attest documents of sales and mortgages; |
நடுவெழுது - தல் | naṭu-v-eḻutu-, v. intr. <>id.+. To engross a document ; பத்திரமெழுதுதல். |
நடுவெளி | naṭu-veḷi, n.<>id.+. 1. Centre of an open plain, interspace; இடைவெளி (யாழ்.அக). 2. The immense space, as filled by the Supreme Being; |
நடுவே | naṭu-v-ē, part. <>id.+. In the middle of, in the midst of ; இடையில் உன்னடியவர் தொகைநடுவே (திருவாச, 44, 1) . |
நடேசன் | naṭēcaṉ, n.<>Naṭēšsa. =šaiva See நடராசன் . . |
நடை | naṭai, n.<>நட-. 1. Walk, act of walking; கலாற் செல்கை கோலுன்றிச் சோர்ந்த நடையினராய் (நாலடி). 2. Motion, course, as of a planet; 3. Journey; 4. Gait, mode of walking or going, pace; 5. Way, route, road; 6. Gate; 7. Corridor, vestibule; 8. Gangway; 9. Conduct, behaviour, career; 10. Custom, usage, fashion; 11. Style in language; 12. Fluency in reading; 13. Nature; 14. Foot; 15. Dance, dancing; 16. Occupation; 17. Wealth; 18. Religious or moral treatise; 19. Daily worship in a temple; 20. Temple; 21. Turn time; 22. Long time; |
நடைக்காவணம் | naṭai-k-kāvaṇam, n.<>நடை+. See நடைப்பந்தல் அவ்வளவு நடைக்காவணம் பாவாடையுடன் (பெரியபு. ஏயர்கோன்=¢57) . . |
நடைக்காற்று | naṭai-k-kāṟṟu, n.<>id.+. Free current of air ; பரவியடிக்குங் காற்று. |
நடைக்குநடை | naṭaikku-naṭai, adv. <>id.+. Every time, at each turn ; ஒவ்வொரு தாடவையும் . |
நடைக்கூடம் | naṭai-k-kūṭam, n. <>id.+. 1. Entrance to a building; வாயிலிடம். Loc 2. Vestibule of a palace; 3. The body, as a moving mansion ; |
நடைகாயம் | naṭai-kāyam, n.<>id.+. A medicinal compound taken in by women after child-birth ; பிரசவித்த பெண் உட்கொள்ளும் மருந்துவகை . (W.) |
நடைகாவல் | naṭai-kāval, n.<>id. +. See நடைகாவற்காரன் . . |
நடைகாவற்காரன் | naṭai-kāvaṟ,kāraṉ, n.<>id.+. Guard at the entrance, as of a temple; gate-keeper ; கோயில் முதலியவற்றின் வாயில்களிற் காவலாய் நிற்பவன் . |
நடைகிணறு | naṭai-kiṇaṟu, n.<> id.+. Well with steps down to the water at its base ; இறங்க ஏற உதவும் படிகள்கொண்ட கிணறு . (W.) |
நடைகூடம் | naṭai-kūṭam, n. <>id.+. See நடைக்கூடம். . |