Word |
English & Tamil Meaning |
---|---|
நடைமனை | naṭai-maṉai, n. <>id.+. Body, as a walking house; [நடக்கும் வீடு] சரீரம். சாலேகமொன்பது குலாவு நடைமனையை (தாயு. சச்சி தா. 2). |
நடைமாடு | naṭai-māṭu, n. <>id. +. Cattle, live-stock; ஆடுமாடுகள். Nā. |
நடைமாற்று | naṭai-māṟṟu, n. <>id. + . See நடைபாவாடை. Tinn. . |
நடைமுதல் | naṭai-mutal, n. <>id. +. Current year; நடப்பிலுள்ள ஆண்டு. Loc. |
நடையறி - தல் | naṭai-y-aṟi-, v. intr. <>id. +. To understand the customs, as of a locality; ஊர்வழக்கங்களை யறிதல். (w.) |
நடையன் | naṭaiyaṉ, n. <>id. [M. naṭayan.] (w.) 1. Walker, pedestrian; நடக்கிறவன். 2. Ploughing ox, riding horse, etc.; 3. Shoes, slippers; |
நடையாட்டம் | naṭai-y-āṭṭam, n. <>id. + . [T. nadayādu.] Usage; வழக்கிற் பயின்றுவருகை. முடுகாவழி அத்துணை நடையாட்டம் இல (தொல் பொ. 377, உரை). |
நடையாடு - தல் | naṭai-y-āṭu-, v. intr. <>id. +. 1. To roam; to travel; to traverse; சஞ்சரித்தல். நடையாடாத தேசமாகையாலே (திவ். திருமாலை19, வ்யா.). 2. To spread, as fame; |
நடையில்விடு - தல் | naṭaiyil-viṭu-, v. tr. <>id. +. To lead or drive at a brisk pace, as a bull-cart; மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல். மாட்டைத் துரத்தாதே, நடையில்விடு. |
நடையுடைபாவனை | naṭai-y-uṭai-pā-vaṉai, n. <>id.+ உடை +. Manners and customs, as of a nation; மக்களின் வழக்கவொழுக்க முதலியன. |
நடையுடையோன் | naṭai-y-uṭaiyōn, n. <>id. + Air, wind, as having motion; [சலிப்பவன்] காற்று. காலங்களு நடையுடை யோனும் (திருப்பு. 994). |
நடையொத்து | naṭai-y-ottu, n. <>id. +. (Mus.) A mode of marking time; ஒருவகைத் தாளம். (திவ். திருவாய். பதிகத்தலைப்பு.) |
நடைவண்டி | naṭai-vaṇṭi, n. <>id. +. A go-cart; சிறுபிள்ளைகள் நடைபழகுதற்குதவும் வண்டி. |
நடைவரம்பு | naṭai-varampu, n. <>id. +. Ridge of fields, used as a pathway; நடந்து செல்லுதற்குத் தக்கபாடி அமைந்த வயல்வரப்பு. |
நடைவழி | naṭai-vaḻi, n. <>id. +. 1. Road, three cubits wide; ¢மூன்றுமுழ அகலமுள்ள பாதை. (சுக்கிரநீதி, 37.) 2. Way, path; |
நடைவாவி | naṭai-vāvi, n. <>id. + vāpī. Well with steps down to the water at its base; படிகளமைந்த கிணறு. (w.) |
நடைவானம் | naṭai-vāṉam, n. <>id. + perh. வானி. See நடைப்பந்தல். (செந். xv. 37.) . |
நடைவியாதி | naṭai-viyāti, n. <>id. + . Long-persisting sickness, chronic illness; வெகுநாட்பட்ட நோய். |
நடைவிளக்கெரி - த்தல் | naṭai-viḷakkeri-, v. tr. <>id. +. To punish a condemned culprit by compelling him to go around a town with a burning lamp on his head; தண்டனையாகத் தலையில் விளக்கைவைத்துக் குற்றஞ் செய்தோரை ஊரில் வலம்வரச் செய்தல். இத்தன்மைத் தென்று கூறின் நம்மை நடைவிளக்கெரிக்கும் (சீவக.1162, உரை). |
நடைவெள்ளம் | naṭai-veḷḷam, n. <>id. +. Water flowing into a field or garden from natural sources, dist fr. iṟaippu-veḷḷam; இறைக்கவேண்டாதபடி தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர். |
நண்டபிண்டல் | naṇṭapiṇṭal, n. Redupl. of நண்டல். Loc. 1. Rice over-boiled and made pappy; கூழும் கட்டியுமாய் உண்ணுதற்காகாதபடி ஆக்கப்பட்ட சோறு. சாதத்தை நண்டபிண்டலாக்கி விட்டாள். 2. That which is crushed; |
நண்டல் | naṇṭal, n. perh. நந்து-. Macerated mass, rice boiled to a pap; குழைவுபட்டது. நண்டல் கிண்டிப்படைக்கிறது. (w.) |
நண்டற்சோறு | naṇṭaṟ-cōṟu, n. <>நண்டல் +. Food cooked on the poṅkal day; தைப்பொங்கலில் சமைத்த சாதம். Loc. |
நண்டு | naṇṭu, n. [T. eṇdri, M. naṇṭu.] 1. Crab, lobster; நீரோரத்தில் வசிக்கும் செந்துவகை. 2. Cancer in the zodiac; |
நண்டுக்கரம் | naṇṭu-k-karam, n. <>நண்டு +. (Nāṭya.) A gesture with both hands. See கற்கடகம், சமநிலையிலே நின்று நன்டுக்கரத்தைக் கோத்து (சிலப். 17, பக். 455). |
நண்டுக்கல் | nāṇṭu-k-kal, n. <>id. +. 1. A kind of petrified lobster, used as a charm; விடநீக்குதற்கு உரியதும் நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை. (w.) |
நண்டுக்காற்கீரை | naṇṭu-k-kāṟ-kīrai, n. <>id. +. A kind of eatable greens; கீரைவகை. (மூ. அ.) |
நண்டுக்காற்புல் | naṇṭu-k-kāṟ-pul, n. <>id. +. A kind of grass, Ischaemum aristatum; புல்வகை. (யாழ். அக.) |