Word |
English & Tamil Meaning |
---|---|
நண்டுக்கிண்ணி | naṇṭu-k-kiṇṇi, n. <>id. +. Small leg of a crab; நண்டின் சிறுகால். |
நண்டுக்கொடுக்கு | naṇṭu-k-koṭukku, n. <>id. +. Forceps of a lobster; நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு. |
நண்டுக்கோது | naṇṭu-k-kōtu, n. <>id. +. Remains of lobsters, as the shell; நண்டின் ஓடு முதலியன. (W.) |
நண்டுகண்ணுக்கினி | naṇṭukaṇṇukkiṉi, n. Sour lime. See எலுமிச்சை. (சங். அக.) |
நண்டுகழை | naṇṭukaḻai, n. A kind of plantain; வாழைவகை. (G. Sm. D. I, 215.) |
நண்டுச்செலவு | naṇṭu-c-celavu, n. <>நண்டு +. Crab's hole; நண்டு இருக்கும் வளை. |
நண்டுஞ்சிண்டும் | naṇṭu-ciṇṭum, n. See நண்டுஞ்சுண்டும். Colloq. . |
நண்டுஞ்சுண்டும் | naṇṭu-cuṇṭum, n. Small children of different ages; சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள், நண்டுஞ் சுண்டுமாக விட்டுவிட்டுப் போய்விட்டார். Colloq. |
நண்டுத்தெறுக்கால் | naṇṭu-t-teṟukkāl, n. <>நண்டு +. See நட்டுவாய்க்காலி. . |
நண்டுதின்னிநாகம் | naṇṭu-tiṉṉi-nakam, n. <>id.+ தின்- +. A kind of cobra, living on crabs; நண்டுகளைத் தின்றுவாழும் நாகப்பாம்பு வகை. |
நண்டுநசுக்கு | naṇṭu-nacukku, n. <>id. +. Little children; சிறு குழந்தைகள். |
நண்டுவாய்க்காலி | naṇṭu-vāy-k-kāli, n. <>id. +. See நட்டுவாய்க்காலி (யாழ். அக.) . |
நண்டூருகால் | naṇṭūru-kāl, n. <>id. + ஊர்- +. Small legs of a crab; நண்டின் சிற்றடி. (w.) |
நண்டெடுத்தல் | naṇṭeṭuttal, n. <>id. + எடு-. Spoilt condition of tender crops under water, due to the scratches of crabs; நீரின்கீழ் மூழ்கியிருக்கும் இளம்பயிர் நண்டுவெட்டுதலால் அழிந்து நிற்கும்நிலை. Nā. |
நண்ணம் | naṇṇam, n. Small thing, trifle; சிறிது. நாடுபெற்ற நண்மை நண்ண மில்லையேனும் (திவ். திருச்சந். 46). |
நண்ணலர் | naṇṇalar, n. <>நண்ணு- + அல் neg. +. See நண்ணார். (பிங்.) . |
நண்ணார் | naṇṇār, n. <>id. + ஆ neg. +. [M. naṇṇār.] Foes; பகைவர். ஞாட்பினு ணண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088). |
நண்ணி | naṇṇi, n. Corr. of நன்றி. Colloq. |
நண்ணு - தல் | naṇṇu-, 5 v. tr. 1. To draw near, approach, reach; கிட்டுதல். நம்பனையுந் தேவனென்று நண்ணுமது (திருவாச. 12, 17). 2. To be attached to, united with; to adhere; 3. To do, make; To reside, live; |
நண்ணுநர் | naṇṇunar, n. <>நண்ணு-. Friends, adherents; நட்பினர். (பிங்.) |
நண்ணுவழி | naṇṇu-vaḻi, n. <>id. +. Place near by; அருகிலுள்ள இடம். கண்ணிற்காண நண்ணுவழி யிரீஇ (பொருந. 76). |
நண்ணைப்பாரை | naṇṇai-p-pārai, n. <>id. +. Horse mackerel, grey, attaining 1 ft. in length, Caranx ire; ஓரங்குலம் வளரும் வெண்ணெய்ப்பாரைமீன். |
நண்பகல் | naṇ-pakal, n. <>நள் +. Midday; நடுப்பகல். நண்பகல் வேனிலொடு (தொல். பொ. 9). |
நண்பல் | naṇ-pal, n. <>id. +. Space between teeth; இரண்டு பற்களினிடை. தின்ற நண்பலூன்றோண்டவும் (புறநா. 384 ). |
நண்பன் | naṇpaṉ, n. <>நண்பு. 1. Friend, companion, associate; தோழன். (பிங்.) 2. Lover, husband; 3. Chief of a hilly tract; 4. Sunn hemp. |
நண்பு | naṇpu, n. <>நள்-. [T. nanupu, K. M. naṇpu.] 1. Love, attachment, affection; அன்பு. எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3). 2. Amity, friendship; 3. Relationship; |
நண்மை | naṇmai, n. perh. id. Proximity; சமீபம். நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன் (புறநா. 380, 11). |
நணந்தம் | naṇantam, n. 1. cf. நண்பன். Sunn hemp. See சணல். (மலை.) 2. Rosewood. 3. Indian beech. |
நணி | naṇi, n. <>நண்ணு-. Nearness, proximity; அணிமையான இடம் திரைபொரு முந்நீர்க்கரைநணிச் செலினும் (புறநா.154). |
நணியான் | naṇiyāṉ, n. <>நணி. One who is near; சமீபத்திலிருப்பவன். சேயாய் நணியானே (திருவாச. 1, 44). |
நணுகலர் | naṇukalar n. <>நணுகு- +அல் neg. +. See நண்ணார். . |