Word |
English & Tamil Meaning |
---|---|
நடைகூலி | naṭai-kūli, n.<>id.+. Wage for going on foot, as in carrying message ; நடந்து செல்வதற்குரிய கூலி. |
நடைச்சலங்கு | naṭai-c-calaṅku, n. <>id.+. Small boat ; சிறுபடகு. (யாழ்.ஆக்.) |
நடைச்சாவடி | naṭai-c-cāvaṭi, n. <>id.+. See நடைக்கூடம். (R.) . |
நடைச்சீக்கு | naṭai-c-cīkku, n.<>id+. See நடைவியாதி. Tinn. . |
நடைசாரி | naṭai-cāri, n. <>id.+. 1. The gentle pace of a horse; குதிரையின் மந்தகதி. (W.) 2. Walk, constitutional; 3. Ceaseless walking ; |
நடைசாரிமேளம் | naṭaicāri-mēḷam, n.<>நடைசாரி +. (யாழ். அக.) 1. Piper's music accompanying s procession; ஊர்வலமாகச் செல்லும் மேளம். 2. Funeral drum; |
நடைத்திண்ணை | naṭai-t-tiṇṇai, n.<> நடை +. Pial ; இடைகழித் திண்ணை . |
நடைத்தேர் | naṭai-t-tēr, n.<>id.+. Child's toy-car ; சிறுதேர் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு (பு.வெ.3. 8) . |
நடைநீர் | naṭai-nīr, n.<>id.+. Running or current water, as in a channel ; ஒட்டமுள்ள நீர் . |
நடைப்படம் | naṭai-p-paṭam, n. <>id.+. See நடைப்படாம் நடைப்பட நாட்டி (பெருங்.இலாவாண, 3, 68) . . |
நடைப்படாம் | naṭai-p-paṭām, n. <>id.+. See நடைபாவாடை பையர வுரியி னனன் நடைப்படாம் பரப்பி (திருவிளை. திருமண.147) . . |
நடைப்பந்தல் | naṭai-p-pantal, n.<>id.+. 1. Pandal erected throughout the entire route of a procession ; உற்சவகாலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப்பந்தல். 2. A kind of movable pandal carried to shade an idol during procession; |
நடைப்பரிகரம் | naṭai-p-parikaram, n. <>id. +. See நடைப்பரிகாரம். . |
நடைப்பரிகாரம் 1 | naṭai-p-parikāram, n. <>id.+ parikara. 1. Means of livelihood; சீவனத்துக்குரிய பொருள்கள். நட்டோ ருவப்ப நடைப் பரிகார முட்டாது கொடுத்த . . . நள்ளியும் (சிறுபாண். 104). 2. Things or provisions necessary for a journey; |
நடைப்பரிகாரம் 2 | naṭai-p-parikāram, n. <>id.+ parihāra. Medicine for which no special diet is required; பத்தியமில்லாத மருந்து. (யாழ். அக.) |
நடைப்பாவாடை | naṭai-p-pāvāṭai, n. <>id. +. See நடைபாவாடை. வீரிப்புறு நடைப்பாவாடை மேனகை விரிப்ப (குற்றா. தல. திருமண.131). . |
நடைப்பிணம் | naṭai-p-piṇam, n. <>id.+ . Lit., a walking corpse. Worthless person; [நடக்கும் பிணம்] பயனற்றவன். பிணத்தினை யொத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல வுணக்கியேயுழல்வீர் (சி. சி. 2, 96). |
நடைப்பெருவாயில் | naṭai-p-peru-vāyil, n. <>id.+. Main entrance to a palace or a temple; கோயிலின் பிரதானவாசல். நடைப்பெருவாயிலும் (பெருங். மகத. 14, 20). |
நடைப்பொன் | naṭai-p-poṉ, n. <>id.+. Amount of money required for current expenses; நடப்புச்செலவுக்குத் தேவையான பணம். ஆக நடைப்பொன் பதினெட்டுலட்சமும் (கோயிலொ.16). |
நடைபடம் | naṭai-paṭam, n. <>id.+. See நடைபாவாடை. மாதர் நடைபடம் விரிப்ப (குற்றா. தல. திருமண. 82). . |
நடைபடி | naṭai-paṭi, n. <>id.+. (W.) 1. Action; behaviour; life; history; நடத்தை. 2. Manner, custom, practice; 3. Procedure, as in a court; |
நடைபரி - தல் | naṭai-pari-, v. intr. <>id.+. To walk fast; விரைந்து நடத்தல். (யாழ். அக.) |
நடைபழகு - தல் | naṭai-paḻaku-, v. intr. <>id.+. 1. To learn to walk, as a child; நடக்கக்கற்றல். 2. To walk too slowly, as just learning to walk, used ironically; |
நடைபாதை | naṭai-pātai, n. <>id.+. Path, footway; frequented path; நடக்கும் பாதை. Tinn. |
நடைபாவாடை | naṭai-pāvāṭai, n. <>id.+ பாவு-+. Cloth spread on the floor for walking upon, as in a procession; நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை. Colloq. |
நடைபாவி | naṭai-pāvi, n. <>id.+ T. bāvi. 1. See நடைவாவி. Loc. . 2. Steps; flight of steps; |
நடைமருந்து | naṭai-maruntu, n. <>id.+. See நடைப்பரிகாரம். (W.) . |
நடைமலை | naṭai-malai, n. <>id.+. Lit., walking hill, Elephant; (நடக்கும் மலை.) யானை. நடைமலை யெயிற்றினிடை தலைவைத்தும் (கல்லா. 12). |