Word |
English & Tamil Meaning |
---|---|
நந்து 1 - தல் | nantu-, 5 v. intr. cf. šnath. [K. nandu.] 1. To become spoiled; to perish, decay, waste; கெடுதல். (சூடா.) நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை (திருவாச. 9, 15). 2. To die; 3. To be extinguished, put out, as a lamp; 4. To set, disappear; 5. To be insulted, abused; |
நந்து 2 - தல் | nantu-, 5 v. <>nand. intr. 1. Increase, grow, wax; வளர்தல். பெரியவர் கேண்மை பிறைபோல ... நந்தும் (நாலடி, 125). 2. To be luxuriant, fertile; 3. To prosper, flourish; 4. To be proud, glow with pride or splendour; To stir, trim; |
நந்து | nantu-, n. <>நந்து-. 1. Increase, prosperity; ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97). 2. Conch; 3. Snail; 4. Bird; |
நந்துருணி | nanturuṇi, n. perh. நந்து-+ தூறு-. 1. Talebearer, backbiter; புறங்கூறுவோன். (w.) 2. Fool, silly person; 3. Insignificant person; |
நந்துருணிப்பேச்சு | nanturuṇi-p-pēccu, n. <>நந்துருணி+. 1. Backbiting, slander; குறளை. (w.) 2. Unreliable talk; |
நந்தை 1 | nantai, n. perh. நந்து-. 1. Parasitic leafless plant. See கொற்றான். (மலை.) 2. Clearing nut. 3. Rope for fastening a yoke to the beam of a plough; |
நந்தை 2 | nantai, n. <>nandā. 1. 1st, 6th, 11th titi; பிரதமை. சட்டி, ஏகாதசி என்ற திதிகள். (பிங்.) நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 26). 2. Brown cow; 3. (Jaina.) A tank to the east of Arhat's heaven; |
நந்நான்கு | nannāṉku, adv. <>நான்ழு + நான்கு. By fours, at the rate of four to each; நான்கு நான்காக. |
நப்பாசை | nappācai, n. <>நம்பு-+ ஆசை. 1. Insatiable sense of taste; நாவின்தீராவாசை. 2. Vain hope or desire; |
நப்பிரி - தல் | nappiri-, v. intr. <>நம் + பிரி-. To leave us, separate from us; நம்மைப்பிரிதல் நப்பிரிந்துறைந்தோர் (ஐங்குறு. 227). |
நப்பின்னை | na-p-piṉṉai, n. <>ந + பின்னை. Krṣṇa's favourite wife; கண்ணனுகந்த தேவியருள் ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19). |
நப்பு | nappu, n. A kind of stone; சிறுகல் வகை. Loc. |
நப்புச்சப்பு | nappu-c-cappu, n. <>நைப்பு +. Loc. 1. Taste; உருசி. கறியில் நப்புச்சப்பில்லை. 2. Property, possessions; |
நப்புணர் - தல் | na-p-puṇar-, v. intr. <>நம் + புணர்-. To join us, unite with us; நம்மைச்சேர்தல். தேற்றஞ்செய்து நப்புணர்ந்து (ஐங்குறு. 23) |
நப்பூதனார் | na-p-pūtaṉār, n. <>ந2 +. A poet, author of Mullaippāṭṭu; முல்லைப்பாட்டு இயற்றிய ஆசிரியர். |
நபம் | napam, n. <>nabhas. 1. Sky ; ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8). 2. The Tamil month Avaṇi = August-September; 3. Rainy season; |
நபர் | napar, n. <>U. nafar. Individual, person; ஆள். (C. G.) |
நபர்கதி | napar-kati, adv. <>U. nafar + U. gatti. Individually; ஒவ்வொருவருக்கு. |
நபர்கதிபைசல் | napar-kati-paical, n. <>id.+ id.+. Individual settlement; ஒவ்வொருவருக்கும் தனித்தனி செய்யும் முடிவு. (C. G.) |
நபர்ஜாமீன் | napar-jāmīṉ, n. <>id.+. Personal security; ஆட்பிணை. (C. G.) |
நபனம் | napaṉam, n. <>snapana 1. Bathing; நீராட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந் இட்ட. அபிஷே. 9). 2. Ceremony of purifying articles used in bathing an idol; |
நபனமண்டபம் | napaṉa-maṇṭapam, n. <>id.+. That portion of a temple in front of the inner sanctuary, where the napaṉam ceremony is performed; சர்ப்ப கிருகத்துக்கு முன்னேயுள்ள திருமஞ்சன மண்டபம். (Insc.) |