Word |
English & Tamil Meaning |
---|---|
நயனமாலை | nayaṉa-malai, n. <>id.+. Garlands of elaeocarpus bead; உருத்திராட்ச மாலை. வனைதரு நயனமாலை (பிரமோத்.12, 6). |
நயனமோக்கம் | nayaṉa-mōkkam, n. <>id.+. See நயனமோட்சம். தான் கைக்கொண்ட தியானத்தாலே நயன்மோக்கம் பண்ணி (சீவக.180, உரை). . |
நயனமோட்சம் | nayaṉa-mōṭcam, n. <>id. +. Chiselling or forming the eye, considered as the finishing act in making an idol or painting; சிற்பிகள் விக்கிரகம் முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை. |
நயனரோகம் | nayaṉa-rōkam, n. <>id.+. Disease of the eye; கண்ணோய். |
நயனவாரி | nayaṉa-vāri, n. <>id.+. Tears; கண்ணீர். (யாழ்.அக.) |
நயனவிதி | nayaṉa-viti, n. <>id.+. Treatise dealing with eye-diseases; கண்வைத்திய நூல். (W.) |
நயனவிதியெண்ணெய் | nayaṉa-viti-y-eṇṇey, n. <>id. +. A medicated oil for anointing the head before bathing, considered good for the eyes; கண்ணுக்கனுகூலமான ஸ்நானதைல வகை. (J.) |
நயனவீடு | nayaṉa-vīṭu, n. <>id. +. See நயனமோட்சம். (W.) . |
நயனாமிர்ததைலம் | nayaṉāmirta-tailam, n. <>id. +. See நயனவிதியெண்ணெய். (தைலவ. தைல.) . |
நயனை | nayaṉai, n. <>nayanā. The pupil of the eye; கண்மணி. (யாழ்.அக.) |
நயனோபாந்தம் | nayaṉōpāntam, n. <>nayanōpānta. Corner of the eye; கடைக்கண். (யாழ்.அக.) |
நயனோற்சவம் | nayaṉōrcavam, n. <>nayana + ut-sava. 1. Pleasant sight; கண்காட்சி. 2. A beautiful thing, as a feast to the eyes; 3. Light; |
நயாசலன் | nayācalaṉ, n. <>naya + a-cala. Person of unwavering integrity; நீதிநெறிவழுவாதவன். நளிர்ந்தசீல னயாசலன் (திவ். பெரியாழ்.4, 4, 8). |
நயிச்சியஞ்செய் - தல் | nayicciyaṉ-cey-, v. tr. <>நயிச்சியம் +. To win over to one's side; தன்வசப்படுத்துதல். Loc. |
நயிச்சியம் | nayicciyam, n. <>நைச்சியம். Winning over to one's side. See நைச்சியம். (W.) |
நயிச்சியம்பண்ணு - தல் | nayicciyam-paṇṇu-, v. tr. <>நயிச்சியம் +. See நயிச்சியஞ்செய்-. . |
நயிட்டிகம் | nayiṭṭikam, n. <>naiṣṭhika. Strict observance of prescribed conduct. See நைஷ்டிகம். (யாழ்.அக.) |
நயிந்தை | nayintai, n. perh. நாயன். 1. Superior, liege, lord; எசமானன். (யாழ்.அக.) 2. The master of a slave, among some castes; 3. A term of respect among some castes; |
நயினார் | nayiṉār, n. <>nāya. 1. Lord; சுவாமி. நயினார் திருவேங்கடநாதன்(T. A. S. i, 93). 2. Master, lord; 3. Title, especially of Jains; 4. A deity. See ஐயனார். Loc. 5. Citragupta. |
நயேந்திரப்பாலை | nayēntira-p-pālai, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
நர்த்தகன் | narttakaṉ, n. <>narttaka. A dancer; கூத்தாடுவோன். |
நர்த்தகி | narttaki, n. Fem. of நர்த்தகன். . |
நர்த்தனம் | narttaṉam, n. <>narttana. Dance; கூத்து. |
நர்மதை | narmatai, n. <>Narmadā. A river. See நருமதை. (சிவரக. மானதபூ. 2.) |
நரகக்குழி | naraka-k-kuḻi, <>neraka+. Hell; நரகம். (W.) |
நரககதி | naraka-kati, n. <>id.+. 1. The state of a hell-being, one of nār-kati, q.v.; நாற்கதியுள் நரகலோகவாசிகளாகப் பிறக்கும் பிறவி. நரக கதித்துன்பம் (சீவக. 2762, தலைப்பு). 2. Fate of being consigned to hell; |
நரகச்சுற்று | naraka-c-cuṟṟu, n. <>id.+. See நரகவட்டம். (W.) . |
நரகசதுர்த்தசி | naraka-caturttaci, n. <>id + caturdašī. The 14th day of waning moon in Ašvins, as the day when Narakācuraṉ was killed by Krṣṇa; கண்ணபிரான் நரகாசுரனைக் கொன்ற ஐப்பசிமாதக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி. |
நரகதேவதை | naraka-tēvatai, n. <>id.+. (யாழ். அக.) 1. Devil; பிசாசு. 2. Goddess of misfortune or ill-luck; |
நரகபாதாளம் | naraka-pātāḷam, n. <>id.+. The abyss of hell; ஆழ்நரகம். (W.) |
நரகம் | narakam, n. <>naraka. 1. Hell, the infernal regions, (a) of four kinds, viz., narakam, mā-narakam, irāca-narakam, irācarācēccura-narakam (b) of eight kinds, viz., irauravam, tuvāntam, cItam, veppam, cantāpam, patumam, māpatumam, kālacūttiram; (c) of seven kinds, viz., நரகம், மாநரகம், இராசநரகம், இராசராசேச்சுரநரகம் என நால்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மாபதுமம், கால சூத்திரம் என எண்வகையாகவும் (சி.போ.பா.2, 3, பக்.203), தமத்தமப்பிரபை, பங்கப்பிர(ஐ, மப்பிரப |