Word |
English & Tamil Meaning |
---|---|
நரசிம்மன் | nara-cimmaṉ, n. <>id. +. See நரசிங்கமூர்த்தி. . |
நரசீவதயாபரர் | nara-cīva-tayāparar, n. <>id. +jīva +. God, as showing grace to humanity; [மன்னுயிர்மீது கருணையுடையவர்] கடவுள். (W.) |
நரசீவன் | nara-cīvaṉ, n. <>id.+. Human being; மனிதன். (யாழ்.அக.) |
நரத்துவம் | narattuvam, n. <>nara-tva. Human nature; மானிடத்தன்மை. ஒழிப்பதனுக்கிசைவர் நரத்துவம் (வேதா. சூ.178). |
நரதுங்கன் | nara-tuṅkaṉ, n. <>nara+. The illustrious among men; மனிதரிற் சிறந்தவன். கொடை நரதுங்கனொ டணைவுறாது (கலிங்.24). |
நரதேவன் | nara-tēvaṉ, n. <>id. +. King, sovereign, as lord of men; [மக்கள் தலைவன்] அரசன். புகுந்து நரதேவ னருளினெய்தி. (சீவக.1867). |
நரந்தம் 1 | narantam, n. 1. Musk deer; கஸ்தூரி மிருகம். (பிங்.) 2. Musk; 3. Fragrance, pleasant odour; 4. A fragrant grass; 5. cf. நாரந்தம். Crow; |
நரந்தம் 2 | narantam, n. <>nāraṅga. Bitter orange. See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162) |
நரந்தை | narantai, n. [M. naranta.] Parasitic leafless plant . See கொற்றான். (திவா.) |
நரநாரணர் | nara-nāraṇar, n. <>nara+. See நரநாராயணர். நரநாரணரா யுலகத் தறநூல் சிங்காமை விரித்தவன் (திவ்.திரியதி.10, 6, 1) . |
நரநாராயணர் | nara-nārāyaṇar, n. <>id.+. The two sages Nara and Nārāyaṇa, considered as incarnations of Viṣṇu; திருமாலவதார மான இருமுனிவர். |
நரப்பிரதிட்டை | nara-p-piratiṭṭai, n. <>id.+. That which is established by human agency; மக்களால் தாபிக்கப்பெற்றது. |
நரப்புக்கருவி | narappu-k-karuvi, n. <>நரம்பு +. See நரம்புக்கருவி. துளைக்கருவியானும் நரப்புக்கருவியானும் (சிலப்.5, 35, உரை). . |
நரப்புச்சிலந்தி | narappu-c-cilanti, n. <>id. See நரம்புச்சிலந்தி. . |
நரபதி | nara-pati, n. <>nara +. 1. King, as lord of men; [மக்கட்குத் தலைவன்]. அரசன். ஒளிறுவே னரபதி நகரம் (சீவக.1617). 2. Title of Chola and Vijayanagara kings; |
நரபலி | nara-pali, n. <>id. +. Human sacrifice; மனிதபலி. இச்சையி னரபலி யிட்ட தலையை (அரிச்.பு.விவாக.121). |
நரபாலன் | nara-pālaṉ, n. <>id.+ pāla. See நரபதி, 1. கடல்புடைசூழ்படி நரபாலரை. (கம்பரா. பரசு. 21). . |
நரபுடம் | nara-puṭam, n. perh. id. + puṭa. Unit of heat produced by burning 50 cow dung cakes, used in calcining medicines; ஐம்பது வரட்டிகளால் இடப்படும் ஒருவகை எரிப்புத்திட்டம். (சங்.அக.) |
நரம் | naram, n. <>id. Human being; மனிதப்பிறவி. நரத்திலும் பிறத்தி நாத (திவ். திருச்சந். 29). |
நரம்பன் | narampaṉ, n. <>நரம்பு. 1. Thin person, being all bones and veins; ஒல்லியான ஆள். (w.) 2. Tobacco leaf, as having prominent fibres; |
நரம்பிசிவு | narampicivu, n. <>id. + இசிவு. Spasm of the nerves, sinews or tendons; தசை நார்சுருட்டிக் கொள்ளுகை. (W.) |
நரம்பின்மறை | narampiṉ-maṟai, n. <>id. +. Treatise on stringed instruments; யாழ்நூல். இசையொடு சிவண்ய நரம்பின் மறைய (தொல். எழுத். 33). |
நரம்பு | narampu, n. [T. naramu, K. nara, M. narampu.] 1. Nerve, tendon, sinew; தசை நார். நரம்பெழுந்து நல்கூர்ந்தாராயினும் (நாலடி, 153). 2. Vein, blood-vessel; 3. Catgut, chord, string of a lute; 4. Fibre, as of leaves; tendril of a vine; 5. String, as of a bow; 6. Continuation of the stem through the jack-fruit, custard apple and other fruits; 7. Pulse. 8. Stringed instrument, one of paca-mā-cattam, q. v.; |
நரம்புக்கட்டு | narampu-k-katṭu, n. <>நரம்பு +. Bands of catgut in a yāḻ. See திவவு. (திவா.) |
நரம்புக்கடுப்பு | narampu-k-kaṭuppu, n. <>id.+. A kind of neuralgia; நரம்பு நோய் வகை. (M. L.) |
நரம்புக்கயிறு | narampu-k-kayiṟu, n. <>id. +. (W.) 1. Cords sewed into the seams of a sail-cloth; கப்பற்பாய் தைக்குங் கயிறு. 2. Catgut, lute-string; |