Word |
English & Tamil Meaning |
---|---|
நராப்பிடி - த்தல் | narā-p-piṭi-, n. <>id.+. See நராப்பற்று-. (யாழ். அக.) . |
நராபோகம் | narā-pōkam, n. <>nara + ābhōga. 1. Unexpected felicity befalling a person; windfall எதிர்பாராத பெருவாழ்வு. (யாழ்.அக); 2. Period of prosperity in a person's life; |
நராயணன் | narāyaṇaṉ, n. <>Nārāyaṇa. Viṣṇu; Viṣṇu; திருமால். நாராயணனை நாராயணனென் றேகம்பனோராமற் சொன்ன வுறுதியால் (தனிப்பா. i, 53, 104). |
நராலை | narālai, n. Hell ; நரகம். (சது.) |
நராவதாரம் | narāvatāram, n. <>nara +. Incarnation in human form; மனுஷ்யாவதாரம் (யாழ்.அக.) |
நரி - தல் | nari-, 4 v. tr. <>நலி-. To torture, torment; வருத்துதல். அரியுந்தசை தீற்றி நரியும் தொரும். (காஞ்சிப்பு. இருபத்தெண்.365). |
நரி 1 - த்தல் | nari-, 11 v. cf. நரி. intr. 1. To be foxy; To deride, despise; நரித்தன்மையடைதல். நரிகா ணரியாது நீர்....நுங்குரல்காட்டும் (திருவாலவா.28, 12). நிந்தித்தல். (சங்.அக.) |
நரி 2 - த்தல் | nari-, 11 v. cf. நெரி- tr. To torment; வருத்துதல். திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது (தேவா. 369, 3). 2. To crush; To perish; |
நரி | nari, n. [M. nari.] 1. [T. nariyadu, K. Tu. nari.] Jackal; சிறுவிலங்குவகை. காலாழ்களரி னரியடும் (குறள், 500). 2. Tiger; 3. A contrivance made of straw with a fox-like tail, for draining off water in a field after transplantation; |
நரிக்காய்ச்சி | nari-k-kāycci, n. <>நரி+. Palmyra tree bearing fruit of a dun colour like that of a fox; நரியினிறங்கொண்ட பழந்தரும் ஒரு வகைப் பனை. (W.) |
நரிக்குழி | nari-k-kuḻi, n. <>id.+. A foxhole; நரிவளை. (W.) |
நரிக்குறவன் | nari-k-kuṟavaṉ n. <>id.+. 1. A person of the Kuṟava sub-caste who hunts jackals for food ; நரிபிடித்துண்ணுங் குறவர்வகையினள்; 2. A very cunning fellow; |
நரிக்கொம்பு | nari-k-kompu, n. <>id.+. Small bud-like horns on a jackal, of rare occurence, considered very efficacious in magic; மாந்திரிகத்தில் உபயோகிப்பதும் சிறுபூமொட்டுப் போன்றிருப்பதுமாகிய நரியின் கொம்பு. (W.) |
நரிக்கொன்றை | nari-k-koṉṟai, n. <>id.+. Red Indian laburnum. See செங்கொன்றை. (பதார்த்த. 206.) |
நரிகுளிப்பாட்டி | nari-kuḻippāṭṭi, n. <>id.+. One who deceives by soothing words; நயவார்த்தைகளால் ஏமாற்றுபவன். Tj. |
நரிகுளிப்பாட்டு - தல் | nari-kuḷi-p-pāṭṭu-, v. intr. <>id.+. To deceive by soothing words as a jackal; நயவார்த்தைகளால் ஏமாற்றுதல். உரிமை போலவந்து நரி குளிப்பாட்டுகிறீர் (மதுரகவி.47). |
நரிச்சல் | nariccal, n. [ M. nariccil.] A kind of bat; வௌவால்வகை. Nāṉ. |
நரித்தலை | nari-t-talai, n. perh. நரி+. Knee joint; முழங்கால் முட்டு. |
நரித்தலைவாதம் | nari-t-talai-vātam, n. <>id.+. 1. Stiff joint, Synovitis; நரம்புப்பிடிப்பு; 2. Inflammation of a joint, Arthritis; |
நரித்தலைவாயு | nari-t-talai-vāyu, n. <>id.+. Stiff joint . நரித்தலைவாதம் |
நரிநாவல் | nari-nāval, . A kind of tree; மரவகை Nāṉ |
நரிநிறம் | nari-niṟam n. <>நரி+. (யாழ். அக.) 1. Multi-colour; பலநிறக்கலப்பு. 2. Crowded thoughts; 3. Disgust; |
நரிப்பயம் | nari-p-payam, n. <>id. + bhaya. Dread of a tiger; புலிப்பயம். (W.) அந்தக் காட்டில் நரிப்பயமில்லை, மாடு கொண்டுபோய் மேய்க்கலாம். Loc. |
நரிப்பயறு | nari-p-payaṟu, n. <>id.+. 1. Field-gram, Phaseolus trilobus; வயற்பயறு. (பதார்த்த.347.) (M. M. 329.) |
நரிப்பல் | nari-p-pal, n. <>id.+. Bead of a kind of necklace, as resembling a jackal's tooth; ஒருவகைக் கழுத்தணி யுரு. |
நரிப்பள்ளம் | nari-p-paḷḷam, n. <>id. +. 1. Unknown depths or pits in a river ஆற்றில் பள்ளமான இடம். (W.) 2. Pits in the dry bed of a river; 3. Pits in a road; |
நரிப்பாகல் | nari-p-pākal, id.+. Carolah balsam pear, Momordica; பாகல்வகை. (மலை.) |
நரிப்பு 1 | narippu, n. <>நரி-. 1. For-like nature; நரித்தன்மை. (யாழ். அக.) 2. Derision, contempt; 3. Wonder; |